Paper Straw: உலகின் பல நாடுகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என அறிவுறுத்தி பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க பல வழிகளை எடுத்து வருகிறார்கள். அப்படிதான் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆட்சிக் காலத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா வகை பயன்பாட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் டொனால்ட் டிரம்ப் தற்போது மீண்டும் அதிபராக பதவியேற்ற தினத்தில் இருந்து பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்து வருகிறார். மேலும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்தே பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் தடை விதித்ததில் டிரம்பிற்கு உடன்பாடில்லை.
மேலும் படிக்க: Dog Bites: நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்த சிறுவன்.. இறுதியாக நடந்த சோகம்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வித்தியாசமான உத்தரவு
அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்பு ஆகிய விஷயங்களில் பெரிய அளவு உடன்பாடு இருந்தது இல்லை. மேலும், அவர் பதவியேற்ற தினத்தில் இருந்து உலகின் பல நாடுகளை குறிவைக்கும் வகையில் அதிரடியாக ஏணைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்கு மத்தியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வித்தியாசமான உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறார்.
டொனால்ட் டிரம்ப் சமூகவலைதள பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில், காகித ஸ்ட்ராக்கள் எனப்படும் பேப்பர் ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் பதிவிட்ட பதிவை விரிவாக பார்க்கலாம்.
காகித ஸ்ட்ரா எனப்படும் பேப்பர் ஸ்ட்ராக்களுக்கு தடை
டொனால்ட் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்த வேண்டாம், பேப்பர் ஸ்ட்ராக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஜோ பைடனின் ஆணை முடிந்துவிட்டது. இனி உங்களது அடுத்த கூல்ட்ரிங்க்ஸை அருவருப்பாக நாவில் கரையக் கூடிய காகித ஸ்ட்ராக்கள் இல்லாமல் அனுபவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Cholesterol In Ghee: நெய் சாப்பிடும் போது இந்த தவறை செய்தால் கொலஸ்ட்ரால் மட மடன்னு அதிகரிக்குமாம்!
மீண்டும் பிளாஸ்டிக் ஸ்ட்ரா
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் டொனால்ட் டிரம்ப் அந்த பதிவில், பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும் என்ற பைடனின் விசித்திரமான உத்தரவை அடுத்த வாரத்துடன் ரத்து செய்யும் ஃபைலில் கையெழுத்திட உள்ளதாகவும், மீண்டும் பிளாஸ்டிக்கிற்கு திரும்புவோம் என குறிப்பிட்டிருக்கிறார்.
image source: freepik