Paper Straws Vs Plastic Straws: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்த வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களை பயன்படுத்தும்படியும் அறிவுறுத்தி உத்தரவு பிறப்பிக்க இருக்கிறார். முதலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவரது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவுகளை விரிவாக பார்க்கலாம்.
டொனால்ட் டிரம்ப் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் பயன்படுத்த வேண்டாம், பேப்பர் ஸ்ட்ராக்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற ஜோ பைடனின் ஆணை முடிந்துவிட்டது. இனி உங்களது அடுத்த கூல்ட்ரிங்க்ஸை அருவருப்பாக நாவில் கரையக் கூடிய காகித ஸ்ட்ராக்கள் இல்லாமல் அனுபவிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: Paper Straw: பேப்பர் ஸ்ட்ராக்கு NO சொன்ன டொனால்ட் டிரம்ப்.. தினுசு தினுசா யோசிக்கிறாரு!
மேலும் டொனால்ட் டிரம்ப் அந்த பதிவில், பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்த வேண்டும் என்ற பைடனின் விசித்திரமான உத்தரவை அடுத்த வாரத்துடன் ரத்து செய்யும் ஃபைலில் கையெழுத்திட உள்ளதாகவும், மீண்டும் பிளாஸ்டிக்கிற்கு திரும்புவோம் என குறிப்பிட்டிருக்கிறார்.
பிளாஸ்டிக் தடை செய்ய வேண்டுமா?
பிளாஸ்டிக் என்பது முற்றிலும் தடை செய்ய வேண்டிய விஷயமாகும், பிளாஸ்டிக் என்பது நிலத்தையும், நீரையும் பெருமளவில் சேதப்படுத்தக் கூடிய பொருளாகும். மண்ணில் மலட்டுத்தன்மையை உருவாக்கக் கூடிய கூறுகள் பிளாஸ்டிக் இருக்கிறது.
பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் தடை
- இப்படி பார்த்தோம் என்றால் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள் தடை செய்யப்பட வேண்டியது தான்.
- காரணம், பிளாஸ்டிக் என்பதை ஒட்டுமொத்தமாக தடை செய்துவிட முடியாது.
- ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளாக தடை செய்துதான் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியும்.
- இதில் கேள்வி என்னவென்றால், பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களுக்கு இணை மாற்றாக காகித ஸ்ட்ராக்கள் அமையுமா என்பதுதான்.
காகித ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவது சிறந்த தேர்வா?
காகித ஸ்ட்ராக்கள் எனப்படும் பேப்பர் ஸ்ட்ராக்கள் பிளாஸ்டிக் ஸ்டார்க்கள் சிறந்த மாற்றாக இருக்குமா என்றால் அது கேள்விதான். காகித ஸ்ட்ராக்களை சிறிய குளிர்பானங்களுக்கு பயன்படுத்துவது தவறில்லை. ஆனால் ஒவ்வொரு வகை குளிர்பானங்களுக்கும் ஒவ்வொரு வகையான ஸ்ட்ராக்கள் பயன்படுத்துவது என்பது இயலாத காரியம்.
- காகித ஸ்ட்ராக்களை வாயுக்குள் வைத்துக் கொண்டே இருப்பது, ஸ்ட்ராக்களை ஊற வைக்கச் செய்யும்.
- இது காகித்தை உதிரியாக பிரித்து நாம் பருகும் பானங்களோடும் நம் உடலுக்குள் புகுர வழிவகுக்கும்.
- குறிப்பாக குழந்தைகள் காகித ஸ்ட்ராக்களை பயன்படுத்தும் போது, அவர்களுக்கு பேப்பர் ஊறுகிறது என்றே தெரியாமல் போகும் நிலை ஏற்படும்.
- இதனால் பேப்பர்களை அவர்களே அறியாமல் விழுங்கி விடுகிறார்கள்.
- இதுபோன்ற காரணங்களால் பேப்பர் ஸ்ட்ரா என்பதும் சரியான முடிவாக இருக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க: Dog Bites: நாய் கடித்ததை வீட்டில் சொல்லாமல் மறைத்த சிறுவன்.. இறுதியாக நடந்த சோகம்!
மரத்தினால் ஆன ஸ்ட்ராக்களே சிறந்த தீர்வாக இருக்கும்
தடை செய்ய வேண்டிய பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களும் வேண்டாம், ஊறி வயிற்றுக்குள் செல்லும் பேப்பர் ஸ்ட்ராக்களும் வேண்டாம். இதற்கு சிறந்த தீர்வாக மரத்தினால் ஆன ஸ்ட்ராக்களே சிறந்த தீர்வாக இருக்க முடியும். மரத்தினால் ஆன ஸ்ட்ராக்கள் என்பது அனைத்து வகையிலும் ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் நல்லதாகும்.
மரத்தை அழித்து ஸ்ட்ரா செய்ய வேண்டுமா என்றால் பேப்பர் என்பது மரத்தில்தான் தயாரிக்கப்படுகிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விஷயமாகும். எனவே பேப்பருக்கு பதிலாக மரத்தினால் ஆன ஸ்ட்ராக்களே சிறந்த தீர்வாக இருக்கும் என்பது பொதுவான கருத்தாகும்.
image source: freepik