Lollipop: குழந்தைகளுக்கு இனிப்பு சாப்பிடுவது என்பது வரப்பிரசாதமாக நினைப்பார்கள். குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் என அனைவருக்கும் பெற்றோர்கள் விதவிதமாக சாக்லெட் வாங்கித் தருவார்கள். இப்படி குழந்தைகள், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகளில் ஒன்று லாலிபாப்.
அதிகம் படித்தவை: அட நீங்க அடிக்கடி சலூன் சென்று முடி வெட்டுபவரா? அப்போ இதை கண்டிப்பா படியுங்க!
குழந்தைகளுக்கு லாலிபாப் கொடுப்பது நல்லதா?
பொதுவாக கடையில் வாங்கும் செயற்கை இனிப்புகள் என்றாலே ஆபத்துதான். இதில் சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு விலை கூடிய இனிப்பு வகைகளை வாங்கிக் கொடுத்து ஆரோக்கியம் என நினைக்கிறார்கள். ஆனால் இது உண்மையில்லை என்பது ஒருபுறம்.
குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது தெரியாது. பெற்றோர்கள் நமக்கு செய்பவை தான் நல்லது என குழந்தைகள் நினைப்பார்கள். எனவே குழந்தைகள் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது மிக முக்கியம்.
லாலிபாப் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனைகள் வருமா?
லாலிபாப் சாப்பிடுவதால் உடலுக்கு பிரச்சனைகள் வருமா என்பதையெல்லாம் தாண்டி, லாலிபாப் தயாரிப்பு முறையின் காரணமாக வெளிப்புறத்தினாலே பாதிப்பு ஏற்படுகிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மையாகும். லாலிபாப் சாப்பிடும் போது அதை சப்பி சப்பி சாப்பிடுவதுதான் வழக்கம். அப்படி சாப்பிடும் போதும் லாலிபாப் ஸ்டிக் எனப்படும் லாலிபாப்பில் பேப்பர் ஸ்ட்ரா பயன்படுத்தப்படுகிறது.
லாலிபாப்பில் பயன்படுத்தப்படும் பேப்பர் ஸ்ட்ரா எனப்படும் பேப்பர் ஸ்டிக்
பிளாஸ்டிக் ஸ்ட்ரா தடை காரணமாக பேப்பர் ஸ்ட்ரா, பேப்பர் ஸ்டிக், பேப்பர் பிளேட் என அனைத்து இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தைகள் சிறுவர்கள் லாலிபாப் சாப்பிடும் போது அதை வாயினுள் வைத்திருப்பார்கள் அப்போது பேப்பர் ஸ்டிக் ஊறி, பேப்பர்கள் துகள் துகளாக வாயுக்குள் செல்ல அதிக வாய்ப்பிருக்கிறது. இதை பல பெற்றோர்கள் அறிந்தும் இருக்கிறார்கள்.
எனவே இனி வரும் காலங்களில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளுக்கு லாலிபாப் போன்ற இனிப்பு வகைகளை கொடுக்கும் போது கவனமாக இருக்க வேண்டியது நல்லது. இதேபோல் தான் பேப்பர் பிளேட்டில் உணவு சாப்பிடும் போது அதை அதிகநேரம் பிளேட்டில் வைத்திருந்தால் அது அப்படியே ஊறிவிட துகள்களாக வர அதிக வாய்ப்பிருக்கிறது எனவே குழந்தைகள் விஷயத்தில் மிக கவனமாக இருக்க வேண்டியது முக்கியம்.
பிளாஸ்டிக் ஸ்டிக் மற்றும் பொருட்கள் தடை செய்ய காரணம் என்ன?
- பிளாஸ்டிக் ஸ்டிக் மற்றும் ஸ்ட்ராக்கள் தடை செய்யப்பட வேண்டியது அவசியம் தான்.
- பிளாஸ்டிக் என்பதை ஒட்டுமொத்தமாக தடை செய்துவிட முடியாது.
- ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளாக தடை செய்துதான் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய முடியும்.
- இதில் கேள்வி என்னவென்றால், லாலிபாப் பிளாஸ்டிக் ஸ்டிக் இணை மாற்றாக லாலிபாப் காகித ஸ்டிக்குகள் அமையுமா என்பதுதான்.
- பிளாஸ்டிக் என்பது நிலத்தையும், நீரையும் பெருமளவில் சேதப்படுத்தக் கூடிய பொருளாகும்.
- மண்ணில் மலட்டுத்தன்மையை உருவாக்கக் கூடிய கூறுகள் பிளாஸ்டிக் இருக்கிறது.
காகித ஸ்டிக் ஏன் பயன்படுத்தக் கூடாது?
- காகித ஸ்ட்ராக்களை வாயுக்குள் வைத்துக் கொண்டே இருப்பது, அதை ஊற வைக்கும்.
- காகித்தை உதிரியாக பிரித்து நாம் பருகும் உணவுகளோடு நம் உடலுக்குள் புகுர வழிவகுக்கும்.
- குறிப்பாக குழந்தைகள் காகித ஸ்டிக்குகள் மற்றும் ஸ்ட்ராக்களை பயன்படுத்தும் போது, அவர்களுக்கு பேப்பர் ஊறுகிறது என்றே தெரியாமல் போகும் நிலை ஏற்படும்.
- இதனால் பேப்பர்களை அவர்களே அறியாமல் விழுங்கி விடுகிறார்கள்.
- இதுபோன்ற காரணங்களால் பேப்பர் ஸ்ட்ரா என்பதும் சரியான முடிவாக இருக்க வாய்ப்பில்லை.
மேலும் படிக்க: Cauliflower Gravy: அட உங்களுக்கு காலிபிளவர் பிடிக்குமா? அப்போ இப்படி கிரேவி செய்து சாப்பிடுங்க!
மரத்தினால் ஆன ஸ்டிக்குகள் தான் சிறந்த தீர்வு
தடை செய்ய வேண்டிய பிளாஸ்டிக் ஸ்டிக்குகள் வேண்டாம், ஊறி வயிற்றுக்குள் செல்லும் பேப்பர் ஸ்ட்ராக்களும் வேண்டாம். இதற்கு சிறந்த தீர்வாக மரத்தினால் ஆன ஸ்டிக்குகள் மற்றும் ஸ்ட்ராக்களே சிறந்த தீர்வாக இருக்க முடியும். மரத்தினால் ஆன ஸ்டிக்குகள் மற்றும் ஸ்ட்ராக்கள் என்பது அனைத்து வகையிலும் ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புறத்திற்கும் நல்லதாகும்.
image source: freepik