சிக்கன் அனைவராலும் விரும்பப்படும் இறைச்சி. பல வெரைட்டிகளை இது கொடுக்கிறது. சிக்கன் இல்லாமல் வாரத்தை கடக்க முடியாது. போர் அடிச்சா சிக்கன், கெஸ்ட் வந்தா சிக்கன், ஸ்டெஸ் குறைய சிக்கன், ட்ரீட்டுக்கு சிக்கம், பார்ட்டிக்கு சிக்கன் என, ரீசன் தேடி தேடி சிக்கன் சாப்பிடும் சிக்கன் பிரியர்கள் வாழும் பூமி இது.
ஆனால் சிலர் சிக்கன் சாப்பிட அச்சம் கொள்கிறார்கள். காரணம் சிக்கன் சாப்பிடா சூடு பிடிக்கும் என்பது தான். நீங்களும் சிக்கன் சாப்பிட்டால் உடலில் சூடு பிடிக்கும் என்று நினைத்து, அதை ஒதுக்கி வைக்கிறீர்களா.?
இதன் உண்மை தன்மை குறித்து, குழந்தை நல மருத்துவரும், உணவு ஆலோசகருமான, டாக்டர் அருண்குமார், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கியுள்ளார். அவர் கூறியதை அறிய பதிவை முழுமையாக படிக்கவும்.
சிக்கன் சாப்பிட்டால் சூடு பிடிக்குமா?
சிக்கன் சாப்பிட்டால் உடல் சூடு அதிகரிக்கும் என்று சிலர் சிக்கனை ஒதுக்கி வைக்கிறார்கள். ஆனால் இது தவறாம கருத்து, சிக்கனுக்கு தனிப்பட்ட முறையில் சூடு என்ற நிலை இல்லை என்று மருத்துவர் அருண்குமார் கூறுகிறார்.
அந்த காலத்தில் நம் உடலுக்கு உஷ்ணத்தை அதிகரிக்கிறதோ, அதை சூடு என கூறி ஒதுக்கி வைத்தார்கள். அதாவது, காய்ச்சல், சிறுநீர் தொற்று அல்லது மலச்சிக்கல் போன்றவற்றால், ஆசனவாயில் எரிச்சல் ஏற்படுவதை, சூடு என்று கூறி ஒதுக்கிவைத்தனர்.
சிக்கன் அதிக அளவு புரதம் மற்றும் குறைந்த கொழுப்பை கொண்ட மெலிந்த இறைச்சி ஆகும். இதை சாப்பிடும் போது, இதனுடன் தகுந்த அளவு நார்ச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அப்படி நார்ச்சத்து எடுத்துக்கொள்ளவில்லை என்றால் மலச்சிக்கல் ஏற்படும் என்று மருத்துவர் கூறினார்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தவறாமல் இதை சாப்பிடவும்.!
சிக்கன் எப்படி சாப்பிட வேண்டும்.?
நாம் சிக்கன் சாப்பிடும் போது, மசாலா அதிகாமக சேர்த்து கொண்டு, காரமாகவும், சிக்கனை அதிகமாகவும் சாப்பிடும் போது மலச்சிக்கல் ஏற்படும். மேலும் இதில் மசாலா அதிகம் இருக்கும் போது, உடலின் சூடு அதிகரிக்கும். குறிப்பாக ஆசனவாயில் எரிச்சல் ஏற்படும். சிலருக்கு பயில்ஸ் கூட ஏற்படலாம். இதை நாம் உடல் சூடு என்று நினைத்துக்கொண்டு, சில்லனை விளக்கி வைக்கிறோம்.
சிக்கனை முறையாக சாப்பிட்டால் எந்த சிக்கலும் வராது. அதாவது, நீங்கள் 250 கி சிக்கன் சாப்பிடுகிறீர்கள் என்றால், 200 கிராம் காய்கறிகளை இதனுடன் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று டாக்டர் அருண்குமார் கூறினார். இவ்வாறு செய்வதால், மலச்சிகல், உடல் சூடு, எரிச்சலுடன் மலம் கழித்தல் போன்ற பிரச்னைகள் தீரும். குறிப்பாக அதிகமான மசாலா சேர்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் மருத்துவர் கூறினார்.
குறிப்பு
இந்த முறையை கடைபிடித்து சிக்கன் சாப்பிடுகிறீர்கள் என்றால், மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள் கூட, அச்சம் இல்லாமல் சிக்கன் சாப்பிடலாம். அடுத்த முறை நீங்கள் சிக்கன் சாப்பிடும் போது, இந்த முறையை கடைபிடித்து பாருங்கள்.
View this post on Instagram
{இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil Facebook, Onlymyhealth Tamil Instagram}
Image Source: Freepik