Thu Oct 29, 2026 | 10:51 AM IST

Doctor Verified

வயிறு எப்போ பார்த்தாலும் உப்புசமா இருக்கா? அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க..

வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் வயிறு உப்புசத்திற்குப் பின்னால் என்னென்ன காரணங்கள் உள்ளன என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.
வயிறு எப்போ பார்த்தாலும் உப்புசமா இருக்கா? அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க..வயிறு எப்போ பார்த்தாலும் உப்புசமா இருக்கா? அதுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கோங்க..

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் குடல் சார்ந்த பிரச்சனைகளும் அடங்குகின்றன. ஆம் உண்மையில், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்களும், நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும் வயிற்றுப் பிரச்சனைகளுக்கு எளிதில் வழிவகுக்கும். இதனால் வாயுத் தொல்லை மற்றும் வயிறு உப்புசம் ஆகியவை சிலருக்குத் தொடர்ச்சியான பிரச்சனைகளாக இருக்கின்றன. இந்த அறிகுறிகள் அனைத்தும் உங்கள் உணவுப் பழக்கத்துடன் நேரடியாகத் தொடர்புடையவை என்பது உங்களுக்குத் தெரியுமா?

ஆனால் உங்கள் உணவுப் பழக்கத்தை மேம்படுத்தினாலும், இந்தப் பிரச்சனைகள் மீண்டும் ஏற்பட்டு உங்கள் வயிற்றுக்குத் தொந்தரவை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளுக்கு மேலும் சில காரணங்கள் இருக்கலாம். இதில் குடல் சார்ந்த பிரச்சனையான வயிறு உப்புசம் ஏற்பட என்ன காரணங்கள் என்பது குறித்து மருத்துவர் வாஸ் M.D அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

குடல் சார்ந்த பிரச்சனைகள்

மருத்துவர் தனது பதிவில் கூறியதாவது,”நீங்கள் சுத்தமாக சாப்பிட்டாலும், இன்னும் வீங்கியிருந்தால், அது வெறும் "சாதாரண செரிமானம்" மட்டுமல்ல. உங்கள் குடலுக்கு ஆழமான விசாரணை தேவை என்பதற்கான சமிக்ஞையாகும்” என்றார்.

மேலும், “சுத்தமான உணவின் மூலம் SIBO, மறைக்கப்பட்ட உணவு உணர்திறன் அல்லது குறைந்த வயிற்று அமிலத்தை சரிசெய்ய முடியாது. இந்த சிக்கல்கள் அமைதியாக செரிமானத்தை சீர்குலைத்து, வீக்கத்தை ஏற்படுத்தி, ஹார்மோன்கள் மற்றும் மனநிலையை கூட பாதிக்கக்கூடும்”.

imageimage

Avoid-eat-too-much-of-these-five-vegetables-that-can-cause-gas-and-bloating-1730447821843.jpg

இதனைத் தொடர்ந்து, பெரும்பாலான மக்கள் தவறவிடுவது என்னவென்றால், வீக்கம் என்பது நீங்கள் சாப்பிடுவதைப் பற்றியது அல்ல. உங்கள் உடலால் சரியாகச் செயல்படுத்த முடியாததைப் பற்றியது. உங்கள் உணவு நீண்ட நேரம் உட்கொண்டால், நொதித்தால் அல்லது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டினால், உங்கள் உணவு எவ்வளவு ஆரோக்கியமாக இருந்தாலும் நீங்கள் வீக்கமடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு முக்கியமானது நீக்குதல் அல்ல என்றும், மூல காரணத்தைச் சோதித்து சிகிச்சை அளிப்பதாகும் என்றும் கூறினார்.

இந்த பதிவும் உதவலாம்: வயிறு உப்புசத்தை போக்கும் 10 அற்புத உணவுகள்.. டாக்டர் சௌரப் சேதி பரிந்துரை!

வயிறு உப்புசத்திற்கான காரணங்கள்

1. SIBO (சிறுகுடல் பாக்டீரியா மிகை வளர்ச்சி)

SIBO என்பது நல்ல பாக்டீரியாக்கள் தவறான இடத்தில் இருப்பதாகும். இது, பூண்டு, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகள் போன்ற "ஆரோக்கியமான" உணவுகளைக் கூட நொதிக்கச் செய்து, சாப்பிட்ட 1-2 மணி நேரத்திற்குள் வாயு, வயிறு உப்புசம் மற்றும் வலியைத் தூண்டுகிறது. ஊகிக்காமல், லாக்டுலோஸ் சுவாசப் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.

2. மறைமுகமான உணவு ஒவ்வாமைகள்

பாதாம், முட்டை, ஓட்ஸ், வெண்ணெய் பழம், இவை அனைத்தும் தூய்மையானவை. ஆனால் அனைவருக்கும் அல்ல என்று குறிப்பிடுகிறார். அதன் படி, குறிப்பிட்ட புரதங்களுக்கு ஏற்படும் நோயெதிர்ப்புத் தூண்டல்கள், தாமதமான வயிறு உப்புசம், மூளை மந்தம் மற்றும் சோர்வை ஏற்படுத்தலாம். மேலும் அடிப்படை தவிர்ப்பு உணவு முறைகளுக்கு அப்பாற்பட்ட காரணிகளைக் கண்டறிய IgG பரிசோதனை உதவுகிறது.

3. குறைந்த வயிற்று அமிலம் (ஹைப்போகுளோரைட்ரியா)

தூய்மையான உணவும் செரிமானிக்கப்பட வேண்டும். உங்கள் வயிற்று அமிலம் மிகக் குறைவாக இருந்தால் (மன அழுத்தம், வயது, PPI மருந்துகள் போன்றவற்றால் ஏற்படுவது), உங்களால் புரதத்தை முறையாகச் செரிக்க முடியாது. இது நொதித்தல், அமில எதுக்களிப்பு மற்றும் வயிறு உப்புசத்திற்கு வழிவகுக்கும் என கூறினார். இதற்கு, எளிய வீட்டுப் பரிசோதனையாக, பேக்கிங் சோடா மற்றும் தண்ணீர் நேர முறையைக் கையாள மருத்துவர் பரிந்துரைக்கிறார்.

imageimage

12_07_2023-bloating_tips_23468503-1751633610685.jpg

View this post on Instagram

A post shared by Dr. Vass, M.D. (@dr.vassily)

4. மெதுவான குடல் இயக்கம்

மருத்துவர், உணவு உங்கள் குடலில் அதிக நேரம் இருந்தால், அது நொதிக்கும். இதனால், மலச்சிக்கல், மன அழுத்தம் மற்றும் தைராய்டு குறைபாடு ஆகியவை குடல் இயக்கத்தை மெதுவாக்கி, தூய்மையான உணவுகளைச் சாப்பிட்டாலும் கூட வாயு மற்றும் வயிறு உப்புசம் தேங்குவதற்குக் காரணமாகும். இதற்கு சில பரிசோதனைகளை மருத்துவர் பகிர்ந்துள்ளார். அதன் படி, உணவு கடந்து செல்லும் நேரம், தைராய்டு ஆய்வகப் பரிசோதனைகள், மலப் பரிசோதனைகளை மேற்கொள்ளலாம்.

5. பதட்டமான நிலையில் சாப்பிடுவது

உங்கள் உடல் பாதுகாப்பாக உணரும்போது மட்டுமே செரிமானம் செயல்படும் என்று கூறினார். இதனைத் தொடர்ந்து அவர், அவசரமாகச் சாப்பிடுவது, கைபேசியைப் பார்ப்பது அல்லது மன அழுத்தம் ஆகியவை செரிமான நொதிகளை நிறுத்தி, குடல் இயக்கத்தைக் குறைத்து, வயிறு உப்புசத்தை அதிகரிக்கும். மேலும், சாப்பிடுவதற்கு முன் சுவாசப் பயிற்சிகள் மூலம் "ஓய்வு மற்றும் செரிமான" நிலைக்கு மாற வேண்டும்.

இறுதியாக மருத்துவர், “தூய்மையான உணவு ஒரு செயலிழந்த குடலைச் சரிசெய்யாது. இதில் முக்கியமானது, உணவுகளைத் தவிர்ப்பது மட்டுமல்ல, செரிமானத்தைப் பரிசோதிப்பதே ஆகும்” என பகிர்ந்துள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: செரிமானத்தை மேம்படுத்தும் சக்திவாய்ந்த மூலிகைகள் – மருத்துவர் பரிந்துரை!

Image Source: Freepik

Read Next

→ சளி, இருமல் இருக்கும்போது ஹாட் சாக்லேட் குடிக்கலாமா? ஊட்டச்சத்து நிபுணர் கூறும் உண்மை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 14, 2025 23:05 IST

    Published By : கௌதமி சுப்ரமணி