Doctor Verified

தினமும் குடிக்கும் தேநீரே உங்கள் குடல் மற்றும் கல்லீரலை பாதிக்கும் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

குடல் மற்றும் கல்லீரல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய 10 தேநீர் பழக்கங்கள் குறித்து காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி எச்சரிக்கை. காலையிலேயே தேநீர், அதிக சர்க்கரை, பபுள் டீ போன்றவை ஏன் ஆபத்து? முழு விளக்கம் இங்கே.
  • SHARE
  • FOLLOW
தினமும் குடிக்கும் தேநீரே உங்கள் குடல் மற்றும் கல்லீரலை பாதிக்கும் தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..


இந்தியர்களின் காலை ஆரம்பமே பெரும்பாலும் ஒரு சூடான தேநீரோடு தான் தொடங்குகிறது. வேலை இடைவேளைகள், நண்பர்கள் சந்திப்பு, இரவு உணவுக்குப் பிறகு கூட தேநீர் தவிர்க்கப்படுவதில்லை. ஆனால், தவறான தேநீர் பழக்கங்கள் உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவைச் சேர்ந்த காஸ்ட்ரோஎன்ட்ராலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி எச்சரித்துள்ளார். அவரின் விளக்கப்படி, குடல் மற்றும் கல்லீரலை மெதுவாக பாதிக்கக்கூடிய 10 தேநீர் பழக்கங்கள் குறித்து தெரிந்துகொள்வோம்.

டீ குடிக்கும்போது செய்யக்கூடிய தவறுகள்

வெறும் வயிற்றில் டீ குடித்தல்

வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பது வயிற்று சுவர் (lining) பாதிப்பை ஏற்படுத்தும். இது அமிலம் (acid reflux) பிரச்சனையை மோசமாக்கி, வயிற்றுப்புண் அபாயத்தை அதிகரிக்கிறது.

அதிக சர்க்கரை சேர்த்தல்

தேநீரில் அதிக சர்க்கரை சேர்த்து குடிப்பது கல்லீரலில் கொழுப்பு (fatty liver) உருவாகும் அபாயத்தை ஏற்படுத்துகிறது. தொடர்ந்து இந்த பழக்கத்தை வைத்துக்கொண்டால், டைப்-2 நீரிழிவு அபாயமும் அதிகரிக்கும்.

"டிடாக்ஸ் டீ" மீதான நம்பிக்கை

சந்தையில் கிடைக்கும் detox teas பெரும்பாலும் லாக்ஸடிவ் (laxatives) கலவையாகவே இருக்கும். இது உடலில் நீரிழப்பு (dehydration), மினரல் சமநிலை பாதிப்பு (electrolyte imbalance) ஆகியவற்றை உண்டாக்கும்.

ஐஸ் ஸ்வீட் டீ

சில "Iced Sweet Tea" வகைகள் சோடாவை விட அதிக சர்க்கரையை கொண்டிருக்கின்றன. தினமும் இதை குடிப்பது, குடல் மற்றும் கல்லீரல் இரண்டையும் தீவிரமாக பாதிக்கும்.

கிரீன் டீ எக்ஸ்ட்ராக்ட் சப்பிள்மென்ட்ஸ்

நாம் குடிக்கும் சாதாரண கிரீன் டீ நல்லது தான். ஆனால், அதிக அளவில் சப்பிள்மென்ட் வடிவில் (capsules, extracts) எடுத்தால் அரிதாக கல்லீரல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

மிகச் சூடான தேநீர்

நாள் முழுவதும் அதிக சூட்டில் தேநீர் குடிப்பவர்களுக்கு, ஆய்வுகள் படி உண்ணாநாளிக் குழாய் புற்றுநோய் (esophageal cancer) அபாயம் அதிகமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: டீ, காபி குடிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய விதிகள் - மருத்துவர் ஷர்மிகா அறிவுரை

இரவு நேர தேநீர்

இரவு நேரங்களில் கருப்பு தேநீர் அல்லது கிரீன் டீ குடிப்பது, அதில் உள்ள கேஃபீன் காரணமாக தூக்கத்தை கெடுக்கும். உடலின் "cortisol cycle" பாதிக்கப்பட்டு, குடல் ஓய்வுக்குத் தேவையான நேரத்தை இழக்கும்.

செயற்கை இனிப்புப் பொருட்கள்

சிலர் சர்க்கரை தவிர்க்க, artificial sweeteners சேர்த்து தேநீர் குடிக்கிறார்கள். இது குடல் microbiome (நல்ல பாக்டீரியா) சமநிலையை பாதிக்கும்.

செயற்கை இனிப்புப் பொருட்கள்

சிலர் சர்க்கரை தவிர்க்க, artificial sweeteners சேர்த்து தேநீர் குடிக்கிறார்கள். இது குடல் microbiome (நல்ல பாக்டீரியா) சமநிலையை பாதிக்கும்.

பபுள் / போபா டீ அதிகம் குடித்தல்

இன்றைய இளம் தலைமுறை அதிகம் விரும்பும் bubble tea (boba tea) – இதில் சர்க்கரை, மாவு, கலோரிகள் அதிகம். இதை அடிக்கடி குடித்தால் fatty liver பிரச்சனை உருவாகும்.

View this post on Instagram

A post shared by Saurabh Sethi MD MPH | Gastroenterologist (@doctor.sethi)

இறுதியாக..

தேநீர் ஒரு மிதமான அளவில் குடிக்கும்போது உடலுக்கு சுறுசுறுப்பையும் ஆனந்தத்தையும் தருகிறது. ஆனால், மேற்கண்ட 10 பழக்கங்களைத் தவிர்த்தால் மட்டுமே குடல், கல்லீரல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும். எனவே, தேநீரை அளவோடு குடிக்கவும், தேவையற்ற சேர்வுகளைத் தவிர்க்கவும்.

Disclaimer: இந்தக் கட்டுரை டாக்டர் சௌரப் சேதி அவர்கள் பகிர்ந்த பொது மருத்துவ தகவலை அடிப்படையாகக் கொண்டது. ஒவ்வொருவரின் உடல் தன்மையும் வேறுபடும். எனவே, தேநீர் பழக்கங்களில் மாற்றம் செய்யும் முன் உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது நிபுணர் ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

இரவில் செய்யும் இந்த 10 பழக்கங்கள்.. குடல் மற்றும் கல்லீரலை சீரழிக்கும்.! மருத்துவர் எச்சரிக்கை..

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

  • Sep 25, 2025 16:15 IST

    Modified By : Ishvarya Gurumurthy
  • Sep 25, 2025 16:15 IST

    Published By : Ishvarya Gurumurthy

குறிச்சொற்கள்