நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவை நன்கு கவனித்துக்கொள்வதன் மூலம் அதைக் கட்டுப்படுத்தலாம். சர்க்கரையைக் கட்டுப்படுத்த உங்கள் உணவில் வெள்ளரிக்காயை எப்படி பயன்படுத்துவது எப்படி என அறிந்து கொள்ளுங்கள்…
இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஐசிஎம்ஆர் ஆய்வின்படி, தற்போது 7.40 கோடி பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் 8 கோடி பேர் ப்ரீடியாபெடிக் நிலையில் உள்ளனர். 2045 ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 13.50 கோடி நீரிழிவு நோயாளிகள் இருப்பார்கள் என்று ICMR மதிப்பிட்டுள்ளது.
முக்கிய கட்டுரைகள்
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க, மருந்துடன் உணவிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
நீங்கள் சரியான நேரத்தில் அதை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். சர்க்கரை அளவை அலட்சியப்படுத்தினால், இதயக் கோளாறு, ரத்த அழுத்தம், சிறுநீரகக் கோளாறு, கண் பிரச்னை போன்ற பிரச்னைகள் ஏற்படும்.
நீரிழிவு நோயாளிகளுக்கு வெள்ளரிக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளதால் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயன் தரக்கூடியதாக உள்ளது.
வெள்ளரிக்காயில் உள்ள நார்ச்சத்து உங்கள் பலவீனமான வளர்சிதை மாற்றத்தை வலுவாக வைத்திருக்க உதவுகிறது. உங்கள் உணவில் வெள்ளரிக்காயை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று பார்ப்போம்.
வெள்ளரிக்காயை இப்படி பயன்படுத்தவும்:
வெள்ளரிக்காய் சூப் உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கலாம். ஆனால் அதிக பலன்களைப் பெற அதனை எப்படி சாப்பிட வேண்டும் என கீழே கொடுத்துள்ளோம்.
வெள்ளரிக்காய் சூப்:
முதலில் வெள்ளரிக்காயை வெட்டி, அதில் 3 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்க்கவும். இப்போது ஒரு கிரைண்டர் ஜாரில், ஒரு சிறிய வெங்காயம், ஒரு பல் பூண்டு, கால் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், அரை கப் கொத்தமல்லி, ஒரு ஸ்பூன் சீரகம், உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் மற்றும் நறுக்கிய வெள்ளரிக்காய் சேர்த்து அரைக்கவும்.
இப்போது இந்த பேஸ்ட்டை ஒரு பெரிய பாத்திரத்தில் எடுத்து வைக்கவும். மற்றொருபுறம் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, அரைத்து பேஸ்ட்டை அதில் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து. நன்றாக கொதிக்க விடவும். உங்கள் சூப் தயார். இதனை உட்கொள்வதால் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமின்றி உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
வெள்ளரிக்காய் சாலட்:

உங்களுக்கு வெள்ளரிக்காய் சூப் பிடிக்கவில்லை என்றால், வெள்ளரிக்காய் சாலட்டை ட்ரை செய்து பார்க்கலாம். இதனை தினமும் உட்கொள்ளலாம். சாலட் உங்களுக்கு வைட்டமின்கள் மற்றும் புரதங்களை வழங்குவது மட்டுமல்லாமல், உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்துகிறது.
வெள்ளரிக்காய் ரைதா:
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், வெள்ளரிக்காய் ரைதாவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதைச் செய்ய, வெள்ளரிக்காயைத் துருவி, தயிருடன் கலக்கவும். அதன் பிறகு கருப்பு உப்பு மற்றும் கருப்பு மிளகு தூள் சுவைக்கு ஏற்ப சேர்க்கவும். இதை தினமும் சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் கட்டுக்குள் இருப்பதோடு, எடையும் குறையும்.
Image Source: Freepik