தற்போதைய ஆன்லைன் யுகத்தில் வெப் சீரிஸ் பார்ப்பது, சோசியல் மீடியாவில் உலா வருவது என இளம் தலைமுறையினர் இரவில் நீண்ட நேரம் உறங்குவது கிடையாது. இதுபோதாது என்றும் இளைஞர்கள் விரும்பி அருந்தக்கூடிய எனர்ஜி பானங்கள் வேறு இரவு உறக்கத்தை பாதிக்கும் என அதிர்ச்சி அளிக்கக்கூடிய ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.
எனர்ஜி பானங்களால் ஆபத்து:
நார்வேயில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆற்றல் பானங்களை அருந்துவோரின் தூக்கத்தின் தரம் கடுமையாக பாதிக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிஎம்ஜே இதழில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களிடையே ஆற்றல் பானங்களின் நுகர்வு அதிகமாக இருப்பதால், தூக்கமின்மை அதிகமாக உள்ளது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மாதத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை எனர்ஜி ட்ரிங்க் குடிப்பது கூட தூக்கத்தை பாதிக்கும். ஒரு லிட்டர் ஆற்றல் பானத்தில் 150 மில்லிகிராம் காஃபின் மற்றும் சர்க்கரை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வு நடத்தப்பட்டது எப்படி?
நார்வேயில் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட 53,266 மாணவர்கள் கணக்கெடுப்புக்கு தேர்வு செய்யப்பட்டனர். கேள்வி பதில்கள் மூலம் மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை அடிப்படையாக கொண்டு ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் எனர்ஜி பானங்களை வழக்கமாக வாரத்திற்கு நான்கு முதல் ஆறு முறை குடிப்போர், வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை குடிப்போர், வாரத்திற்கு ஒரு முறை, ஒரு மாதத்திற்கு ஒன்று முதல் மூன்று முறை ஆறு பிரிவுகளின் கீழ் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு குழுவின் தூக்க முறைகளையும் கணக்கெடுப்பு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் பயன்படுத்துபவர்கள், எப்பொழுதாவது எனர்ஜி ட்ரிங்க் குடித்ததில்லை என்று கூறியவர்களை விட அரை மணி நேரம் குறைவாக உறங்குவதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்வதும், திடுக்கிட்டு எழுவதும் ஒரே மாதிரியாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
Image Source: Freepik