Dry Skin Cause: நீங்கள் அறியாமல் செய்யும் இந்த 3 தவறுகள் உங்கள் சருமத்தை வறட்சியாக்கும்!

  • SHARE
  • FOLLOW
Dry Skin Cause: நீங்கள் அறியாமல் செய்யும் இந்த 3 தவறுகள் உங்கள் சருமத்தை வறட்சியாக்கும்!


ஒவ்வொரு பெண்ணும் தனது சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க விரும்புவார்கள். ஏனென்றால், முகத்தின் அழகுதான் அனைத்திற்கும் முக்கியம். அதில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், ஒட்டுமொத்த அழகும் கெட்டுவிடும். சரும பிரச்சினையை சரி செய்ய மீண்டும் தீர்வுகளை தேடி ஓடுவோம்.

ஆனால், சருமம் அடிக்கடி வறட்சியாவதற்கு உண்மையான காரணம் என்ன என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? நாம் முகத்திற்கு எதை பயன்படுத்துகிறோமோ அதன் விளைவை தான் நாம் அனுபவிப்போம். நாம் அன்றாடம் செய்யும் சில தவறுகள் நமது முகத்தை வறட்சியாக்கும். அவற்றை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : திருமணத்தில் ஜொலிக்க வேண்டுமா? இதை ஃபாலோ பண்ணுங்க…

சன்ஸ்கிரீனைத் தவிர்ப்பது வறண்ட சருமத்தை ஏற்படுத்தும்

நீங்கள் ஆரோக்கியமான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற விரும்பினால், வழக்கமான சரும பராமரிப்பை பின்பற்ற வேண்டியது அவசியம். ஆனால், பல சமயங்களில் நமக்கு நேரம் இன்மை காரணமாக அவற்றை பின்பற்ற மறந்து விடுகிறோம். இதனால் சருமம் வறட்சியாகும். குறிப்பாக முகத்திற்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதை தவிர்ப்பது.

ஏனென்றால், அதிகரித்து வரும் மாசு மற்றும் வெப்பம் நமது சருமத்தை கடுமையாக பாதிக்கும். இதனால், சருமம் எளிதில் வறட்சியாகும். இந்நிலையில், வெளியே செல்லும் முன் உங்கள் முகத்தில் சன்ஸ்கிரீனைப் பயன்படுத்த முயற்சி செய்யுங்கள். இது உங்கள் சருமத்தை பாதுகாக்கும். இத்துடன் உங்கள் முகத்தின் பொலிவும் நிலைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?

வெந்நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள்

நம்மில் பலர் அடிக்கடி இந்த தவறை செய்வோம். இதனால் சருமம் கெட்டுப்போவதற்கு வாய்ப்பு அதிகம். குறிப்பாக எங்காவது செல்ல வேண்டும் என்ற அவசரத்தில் இருக்கும் போது, குளிக்க நேரம் இல்லாமல் வெதுவெதுப்பான நீரில் முகத்தை சுத்தம் செய்துவிட்டு கிளம்புவோம்.

நீங்கள் செய்யும் இந்த தவறு உங்கள் முகத்தின் தோலுக்கு தீங்கு விளைவிக்கும். ஏனெனில், வெந்நீர் உங்கள் சருமத்தை உலர வைக்கிறது. அதனால், தான் தவறுதலாக கூட பயன்படுத்த வேண்டியதில்லை. உங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் மட்டுமே சுத்தம் செய்ய முயற்சிக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Curd Benefits: தயிரை சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்துவது?

தோல் பராமரிப்பு வழக்கத்தை மாற்றுவது

நீங்கள் எப்போதும் சரியான தயாரிப்பு மற்றும் நேரத்தை பராமரிக்க வேண்டும். உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தை மாற்றினால், அது உங்களுக்கு பிரச்சனைகளை மட்டுமே ஏற்படுத்தும் மற்றும் தோல் வறண்டு போகும். அதனால் தான் ஏதேனும் மாற்றங்களைச் செய்வதற்கு முன், அதை பேட்ச் டெஸ்ட் செய்யுங்கள்.

குறிப்பு : மேலே குறிப்பிட்டுள்ள முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், நீங்கள் தோல் பேட்ச் டெஸ்ட் செய்ய வேண்டும். ஒவ்வொருவரின் சருமமும் வித்தியாசமானது, மேற்கண்ட முறைகள் உங்களுக்கு உடனடி பலன்களைத் தரும் என்று நாங்கள் கூறவில்லை. நீங்கள் ஒருமுறை உங்கள் தோல் நிபுணரிடம் ஆலோசிக்க வேண்டும், பின்னர் அவற்றைப் பயன்படுத்தவும்.

Credit- Freepik

Read Next

Vitamin C Serum: வைட்டமின் C சீரம் எப்போது பயன்படுத்த வேண்டும்? சரியான முறை மற்றும் நேரம் இங்கே!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்