சத்தீஸ்கர் மாநிலம் அம்பிகாபுரம் பகுதியின் அருகே சிந்த்காலோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் யாதவ். சுமார் 35 வயதான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லாத நிலை நீடித்துள்ளது. குழந்தைகள் உருவாக வேண்டி ஆனந்த் யாதவ் மற்றும் அவரது மனைவி பல அமானுஷ்ய முயற்சிகளை மேற்கொண்டனர் என கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஆனந்த் யாதவ் தனது வீட்டில் குடும்பத்தினருடன் இருந்த போது திடீரென வீட்டிலேயே மயங்கி விழந்திருக்கிறார். இதை பார்த்த குடும்பத்தினர் உடனடியாக அவரை அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்திருக்கின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஆனந்த் யாதவ்வை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பே இறந்துவிட்டதாக கூறியிருக்கின்றனர்.
அதிகம் படித்தவை: Ligament Tear: வலியில் துடிக்கும் பிக்பாஸ் ராணவ்.. கையில் இதுதான் பிரச்சனை! வீட்டிலிருந்து வெளியேறுகிறாரா?
பிரேத பரிசோதனையில் உடலுக்கு உயிருடன் இருந்த கோழிக்குஞ்சு
இதையடுத்து ஆனந்த் யாதவ் உடலை மருத்துவர் சாந்து பாக் பிரேத பரிசோதனை மேற்கொண்டுள்ளார். இதில்தான் அதிர்ச்சியாக விஷயம் ஒன்று கண்டறியப்பட்டிருக்கிறது. அதாவது இறந்துபோன ஆனந்த் யாதவின் தொண்டையில் ஒரு கோழிக்குஞ்சு இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. அதுவும் அந்த கோழிக்குஞ்சு உயிருடன் இருப்பதை மருத்துவர் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர்.
ஆனந்த் யாதவ் தொண்டையில் இருந்த கோழிக்குஞ்சு உயிருடன் பிரேத பரிசோதனையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கோழிக்குஞ்சு ஆனந்த் யாதவ் தொண்டையில் அடைத்து சுவாசக்குழாய் மற்றும் உணவுப்பாதையை மூடியிருக்கிறது. இதனால் ஆனந்த் யாதவ் மூச்சுவிட முடியாமல் இறந்திருக்கிறார் என்பது பிரேத பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
அதிர்ந்து போன மருத்துவர்
ஆனந்த் யாதவுக்கு பிரேத பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர் சாந்து பாக் இதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இதுவரை தான் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உடற்கூறு ஆய்வு செய்ததாகவும், இதுபோன்ற விசித்திரமான சம்பவத்தை இப்போதுதான் பார்க்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோழிக்குஞ்சு எப்படி ஆனந்த் யாதவ் தொண்டையில் சிக்கியது என நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஆனந்த் யாதவின் பக்கத்து வீட்டார் கூறிய தகவல்களை பார்க்கலாம்.
உயிருடன் கோழிக்குஞ்சை விழுங்கச் சொன்ன ஜோதிடர்?
ஆனந்த் யாதவ் தம்பதிக்கு சில ஆண்டுகளாக குழந்தைகள் இல்லாமல் இருந்தது. இதனால் அந்த தம்பதியினர் மாந்திரீகர்கள், ஜோதிடர்கள் போன்றோர்களை தொடர்ந்து சந்தித்து வந்திருக்கின்றனர். மேலும் அவர்கள் கூறிய பரிகாரங்கள், பூஜைகளை தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றனர். அதன்படி யாரோ ஜோதிடர்கள் கூறியபடி தான் ஆனந்த் யாதவ் கோழிக்குஞ்சை அப்படியே உயிருடன் விழுங்கியிருப்பார் என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் தங்களது விசாரணை தொடர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Full Body Detox: நச்சுகள் நீங்கி மீண்டும் பிறந்தது போல் உடல் சுத்தமா மாறனுமா? 6 வழிகள் இருக்கு
கடவுள் நம்பிக்கை என்பது தவறில்லை ஆனால் அது அதீத மூடநம்பிக்கையாக மாறும் போதுதான் பிரச்சனை ஏற்படுகிறது. மனதார கடவுளை நினைத்து வழிபடும் பாக்கியத்தை விட வரம் என்ன இருக்கிறது. யாரோ ஒரு நபர்கள் பரிகாரம், சிறப்பு பூஜை என கூறுவதை ஏன் நம்பி ஏமாற வேண்டாம். எப்போதும் விழிப்புடன் இருப்பது நல்லது.
Pic Courtesy: Social Media