கணவன் மனைவிக்கு முத்தம் கொடுப்பதில் அவங்க ஆயுள் அதிகரிக்குமா?

  • SHARE
  • FOLLOW
கணவன் மனைவிக்கு முத்தம் கொடுப்பதில் அவங்க ஆயுள் அதிகரிக்குமா?

முத்தத்தின் நன்மைகள் குறித்து பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆய்வில் குறிப்பிட்ட படி, முத்தம் கொடுப்பது மன அழுத்த ஹார்மோன்களின் அளவைக் குறைக்க உதவுகிறது. மேலும் மக்களை மகிழ்ச்சியாக உணரவைக்கிறது. இவை ஒட்டுமொத்தமாக நல்ல உணர்வை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Relationship Tips: உறவில் நெருக்கத்தை அதிகரிக்க சிம்பிள் டிப்ஸ் இங்கே…

முத்தம் கொடுப்பது ஆயுளை அதிகரிக்குமா?

1980 ஆம் ஆண்டு காலத்தில், உளவியல் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 2 ஆண்டுகள் முடிந்த பிறகு, விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில் ஒரு திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியிடப்பட்டது. அந்த ஆச்சரியமான தகவல் என்னவெனில், கணவர்கள் வேலைக்குச் செல்லும் முன்னதாக தினமும் மனைவியை முத்தமிடும் போது அவர்கள், தங்கள் மனைவிகளை முத்தமிடாத கணவர்களுடன் ஒப்பிடுகையில் நீண்ட காலம் சராசரியாக 5 ஆண்டுகள் அதிகமாக வாழ்வதாகக் கண்டறியப்பட்டது.

மற்ற ஆச்சரியத் தகவல்

வேலைக்குச் செல்லும் முன் கணவர்கள் தங்கள் மனைவிக்கு முத்தமிடுவது நீண்ட ஆயுளைத் தவிர வேறு சில நன்மைகளையும் பெறுகின்றனர். அதாவது, அலுவலகம் செல்வதற்கு முன்னதாக மனைவிக்கு குட் பாய் கிஸ் கொடுத்த கணவர்கள், இவ்வாறு கொடுக்காதவர்களைக் காட்டிலும் 20 முதல் 35% அதிக பணம் சம்பாதிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்து ஜெர்மனியில் நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் வீட்டை விட்டு வெளியேறும் முன் தங்கள் மனைவிகளை முத்தமிட்ட 87% பணியாளர்கள் ஊதியத்தில் அதிகரிப்பு மற்றும் அலுவலகத்தில் சிறந்த பதவிகளை வகித்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Relationship Strengthening Tips: உங்க துணையுடன் உறவை வலுப்படுத்த இந்த 5 விஷயங்களை ஃபாலோப் பண்ணுங்க

எதிர்மறை மனப்பான்மை

செலெக்டா என்ற மேற்கு ஜெர்மன் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வுகளின் முடிவுகள்  கீல் பல்கலைக்கழகத்தின் உளவியல் பேராசிரியரான டாக்டர் ஆர்தர் சாபோ அவர்களின் தலைமையிலிருந்தது. இதில், அவரது கண்டுபிடிப்புகளின் சுருக்கத்தின் படி, “தங்கள் மனைவிகளை முத்தமிடாமல் காலையில் வீட்டை விட்டு வெளியேறும் கணவர்கள் அல்லது அவர்களை பிரிந்திருக்கும் கணவர்கள், எதிர்மறை மனப்பான்மையைக் கொண்டிருப்பர். அவர் தனது சுற்றுப்புறம் மற்றும் வேலையிடத்தில் அக்கறையற்றவராகக் காணப்படுவர். அதே சமயம் ஒரு ஆண் தன் மனைவியை நேசிப்பதை நிறுத்திவிட்டாலும், ஆண்கள் தங்கள் மனைவிகளைப் பற்றி அலட்சியம் காட்டுகின்றனர்.”

ஒவ்வொரு கணவரும் தங்கள் மனைவி மீதான அன்பை வெளிப்படுத்துவதுடன், அவர்களுக்கு முத்தம் கொடுப்பதை வலியுறுத்தப்படுவது நீடித்த உறவிற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: உங்க ரிலேஷன்ஷிப்ல அன்பை வளர்க்க இதெல்லாம் செய்யுங்க

Image Source: Freepik

Read Next

உங்க ரிலேஷன்ஷிப்ல அன்பை வளர்க்க இதெல்லாம் செய்யுங்க

Disclaimer

குறிச்சொற்கள்