உங்க ரிலேஷன்ஷிப்ல அன்பை வளர்க்க இதெல்லாம் செய்யுங்க

  • SHARE
  • FOLLOW
உங்க ரிலேஷன்ஷிப்ல அன்பை வளர்க்க இதெல்லாம் செய்யுங்க

ஆனால், இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் அலுவலகத்திற்கும் வேலைக்கும் இடையில் ஒரு நாளைக்கு அதிக நேரம் செலவிட்டு சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்துவதில்லை. சில நேரங்களில் ஒரு சில உறவுகள் வேலைச் சுமை மற்றும் ஹார்மோன் மாற்றங்களின் காரணமாக, கோபம் மற்றும் எரிச்சலை சந்திக்கின்றனர். கணவன், மனைவி உறவுகளை வலுப்படுத்தவும், அதிகரிக்கவும் அன்பாக இருக்க வேண்டும். இதில் உறவு நீடித்து, மகிழ்ச்சியாகவும், வலுவாகவும் இருக்க விரும்புபவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: Healthy Relationship Tips: ஆரோக்கியமான உறவை பராமரிப்பதற்கான சிறந்த வழிகள்

உறவில் அன்பை அதிகரிப்பது எப்படி?

நம்பிக்கையுடன் இருப்பது

ஒரு உறவில் அன்பு எவ்வளவு முக்கியமானதோ அதே சமயம் நம்பிக்கையும் முக்கியமானதாகும். ஒரு முறை மட்டும் நம்பிக்கையை வெல்ல முயற்சிப்பது உறவை ஆழமாக கொண்டு செல்லாது. நாளுக்கு நாள் உறவுகளுக்கிடையேயான அதிகரித்தும், வலுவாகவும் இருக்க வேண்டும். இதற்கு துணைக்கு வாக்குறுதிகளை அளித்து அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டும்.

மரியாதையுடன் இருப்பது

எந்தவொரு உறவையும் வாழ்நாள் முழுவதும் வலுவாக வைத்திருக்க வேண்டியதற்கு மரியாதை உணர்வும் மிகவும் அவசியமாகும். இதில் இருவருமே உறவை மதித்து நடக்க வேண்டும். இதுவே இருவரது உறவையும் வலுவாக்கும். மேலும் மதிக்காமல் இருப்பது பல்வேறு உறவு சார்ந்த பிரச்சனைகளைக் கொண்டு வரலாம். இதனைத் தவிர்க்க உறவை மதித்தல் வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Relationship Tips: உறவில் நெருக்கத்தை அதிகரிக்க சிம்பிள் டிப்ஸ் இங்கே…

தயக்கமின்றி தொடர்பு கொள்வது

எந்த உறவிலும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகப் பேசும் போதே உறவு வலுவாக இருக்கும். அதிலும் குறிப்பாக, கணவன்-மனைவி அவர்களுக்கிடையே வெளிப்படையாக இருப்பது அவசியமான ஒன்றாகும். இதில் உறவு மற்றும் பிரச்சனைகளைப் பற்றி வெளிப்படையாகப் பேசும் போது அன்பு அதிகரிக்கிறது. இன்றைய கால கட்டத்தில் உறவுகளுக்கிடையே விரிசலை உண்டாக்கும் லேப்டாப், மொபைல் மற்றும் பிற கேஜெட்களில் இருந்து விலகி இருப்பது நல்லது. இதைச் செய்வதன் மூலம் துணையுடன் நேரம் செலவழிப்பதுடன், எந்த மறைவுமின்றி வெளிப்படையாக பேச ஏதுவாக அமையும். இதில் அவர் மீது நீங்கள் முழுமையாக கவனம் செலுத்துகிறீர்கள் என்பதை உணர்வர்.

ஒன்றாக சாப்பிடுதல்

இன்று பலரும் வேலைப்பளு, கருத்து வேறுபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒன்றாக சாப்பிடுவதில்லை. ஆனால், ஒன்றாகச் சாப்பிடுவது அன்பை அதிகரிக்கிறதா இல்லையா என்பது கூற முடியாது. அதே சமயம் ஒன்றாக சாப்பிடுவது நிச்சயமாக அன்பை அதிகரிக்கலாம். ஒரு களைப்புக்குப் பிறகு இரண்டு பார்ட்னர்களும் ஒன்றாக இணைந்து சாப்பிடுவது மன அமைதியைத் தருகிறது. மேலும் உறவை வலுப்படுத்த ஒன்றாக சாப்பிடுவது மட்டுமல்லாமல், ஒன்றாக இணைந்து சமையல் செய்வதில் பங்கு கொள்ளலாம்.

பழைய விஷயங்களை மறப்பது

பங்குதாரர்களிடையே பல கசப்பான விஷயங்கள் நடக்கிறது. இது அவர்களை மோசமாக உணரவைப்பதுடன், பிரச்சனையை ஏற்படுத்தலாம். இதை மனதில் வைத்துக் கொண்டால், அது உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த காலகட்டத்தில் உறவில் எந்த விஷயமாவது நீண்ட நாள் நீடித்திருப்பின், அது மனதில் வெறுப்பை உண்டாக்கலாம். இதற்கு அன்றைய நாள் ஏற்பட்ட கசப்பான விஷயத்திற்கு அன்றே பார்ட்னருடன் கலந்து பேசி தீர்வைப் பெறுவது நல்லது. அதே சமயம், பழைய விஷயங்களை மனதில் வைத்திருப்பது உறவை பலவீனப்படுத்துவதுடன், தூரத்தையும் அதிகரிக்கலாம்.

இந்த செயல்பாடுகளை மேற்கொள்வது கணவன்-மனைவி உறவிற்குள் அன்பை அதிகரிக்கவும், வலுவாக வைத்திருக்கவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Relationship Strengthening Tips: உங்க துணையுடன் உறவை வலுப்படுத்த இந்த 5 விஷயங்களை ஃபாலோப் பண்ணுங்க

Image Source: Freepik

Read Next

Relationship Tips: உறவில் நெருக்கத்தை அதிகரிக்க சிம்பிள் டிப்ஸ் இங்கே…

Disclaimer