மாதவிடாய் இல்லாத சமயத்திலும் இரத்தப்போக்கு ஏற்படுகிறதா? அதுக்கான காரணங்கள் இதோ..

Why am i bleeding but it's not my period: மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுவது பொதுவானது. ஆனால், சாதாரண நாட்களிலும் யோனியில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அது பிரச்சனையைக் குறிக்கிறது. இதில் மாதவிடாய் இல்லாத நேரத்தில் இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்தும், அது கருப்பையை எவ்வாறு பாதிக்கிறது என்பது குறித்தும் காணலாம்.
  • SHARE
  • FOLLOW
மாதவிடாய் இல்லாத சமயத்திலும் இரத்தப்போக்கு ஏற்படுகிறதா? அதுக்கான காரணங்கள் இதோ..


Which caused may produce abnormal uterine bleeding: பொதுவாக பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாயின் போது யோனியிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சனையாகும். ஆனால், சிலர் சாதாரண நாட்களிலும் கூட இரத்தப்போக்கைச் சந்திப்பர். இது அசாதாரணமானது ஆகும். சில சமயங்களில் மாதவிடாய் காலத்தில் கூட, வழக்கத்தை விட அதிக இரத்தப்போக்கு இருந்தால் அல்லது அதிக நாட்கள் இரத்தப்போக்கு தொடர்ந்தால், அது அசாதாரணமாக இருக்கலாம். ஆனால், பெண்கள் பெரும்பாலும் இதை மாதவிடாய் காரணமாகவோ அல்லது சாதாரண காரணமாகவோ கருதி புறக்கணித்து விடுகின்றனர்.

உண்மையில் இது போன்ற சாதாரண நேரங்களில் எந்த காரணமும் இல்லாமல் யோனியில் இரத்தப்போக்கு ஏற்படுவது பல கடுமையான நோய்களின் அறிகுறியைக் குறிக்கலாம். இதில் யோனியிலிருந்து இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள் சிலவற்றைக் காணலாம்.

பிறப்புறுப்பிலிருந்து அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படுவதற்கான காரணங்கள்

திடீர் உடல் எடையிழப்பு

அசாதாரண இரத்தப்போக்குக்கும் திடீர் எடை இழப்புக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை. எனினும், எடை உடலின் ஹார்மோன் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துவது பெரும்பாலும் கவனிக்கப்படுகிறது. இதனால் எடை குறைவாக இருப்பது புள்ளிகள் அல்லது ஒழுங்கற்ற இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும்.

திடீர் உடல் எடை அதிகரிப்பு

சில நேரங்களில், நீரிழிவு நோய் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் விரைவான எடை அதிகரிப்பு ஏற்படலாம். இது அசாதாரண இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். உண்மையில் இவை இரண்டுமே ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. மேலும் இது சில நேரங்களில் PCOD வருவதற்கான காரணமாகவும் அமைகிறது. இதனால், மாதவிடாய் தவிர மற்ற காலங்களிலும் இரத்தப்போக்கு ஏற்படக்கூடும்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்ட்ரெஸ் இருந்த பீரியட்ஸ் பெயின் அதிகமா இருக்குமா.? நிபுணர் கருத்து இங்கே..

கருப்பை புற்றுநோய்

மாதவிடாய் நின்ற பெண்களையே பெரும்பாலும் கருப்பை புற்றுநோய் பாதிக்கிறது. அதாவது, மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இனி மாதவிடாய் இல்லை என்றாலும், இந்த ஒழுங்கற்ற இரத்தப்போக்கு கருப்பை புற்றுநோயின் அறிகுறியைக் குறிக்கிறது.

கருப்பையில் பாலிப்கள் இருப்பது

கருப்பையில் உள்ள பாலிப்கள் ஆனது கருப்பையின் சுவரில் பல சிறிய வளர்ச்சிகள் உருவாகிறது என்பதைக் குறிக்கிறது. பாலிப்கள், கருப்பை வாய், அதாவது யோனி மற்றும் கருப்பைக்கு இடையிலான அமைப்பாகும். சில சமயங்களில், பாலிப்கள் அசாதாரண இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும் மற்றும் இவை அகற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.

கருப்பையில் நார்த்திசுக்கட்டிகள் இருப்பது

அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படுவதற்கு கருப்பையில் ஃபைப்ராய்டுகள் இருப்பது மிகவும் பொதுவான அறிகுறியாகக் கருதப்படுகிறது. கட்டி கருப்பை குழிக்குள் அல்லது கருப்பை புறணிக்கு அருகில் அமைந்திருப்பின், அது மாதவிடாய்க்கு வெளியே அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், ஒருவர் கட்டாயம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியமாகும்.

கருப்பை தொற்று

கருப்பை தொற்று அல்லது வெளியேற்றமானது சில நேரங்களில் சிறுநீர் பாதை தொடர்பான பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும். உண்மையில் இந்த நேரத்தில் ஏற்படக்கூடிய தொற்று காரணமாக, கருப்பையில் உள்ள பாக்டீரியாக்கள் செல்களை விரைவாக சேதப்படுத்தத் தொடங்குகிறது. இதனால் தொற்று அதிகரிக்கும் போது இரத்தப்போக்கு தொடங்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: இந்த அறிகுறிகளை லேசுல விடாதீங்க.. மருத்துவர் சொல்லும் கருப்பை கட்டியின் அறிகுறிகள் இதோ

கருப்பையில் கட்டி

கருப்பையில் காணப்படும் கட்டி காரணமாகவும் பெண்களுக்கு அசாதாரண இரத்தப்போக்கு பிரச்சனை ஏற்படுகிறது. கட்டி கருப்பை குழிக்குள் அல்லது கருப்பை புறணிக்கு அருகில் அமைந்திருந்தால், அது அதிக இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இந்த சூழ்நிலையில், இதை லேசாக எடுத்துக் கொள்ளக்கூடாது. இதற்கு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

கருப்பைச் சுவரில் வீக்கம்

கருப்பையில் ஏற்படும் அழற்சியின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக யோனி இரத்தப்போக்கு அமைகிறது. உண்மையில், கருப்பையில் வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்றாக எண்டோமெட்ரிடிஸும் உள்ளது. இந்நிலையில், கருப்பையின் உள் அடுக்குகள் வீங்கி, நீண்ட நேரம் சிகிச்சையளிக்கப்படாவிடில், அது கடுமையான வடிவத்தை எடுத்து அசாதாரண இரத்தப்போக்கை ஏற்படுத்தலாம். இதனால் பாக்டீரியா தொற்று காரணமாக கருப்பைச் சுவரில் வீக்கம் ஏற்படுகிறது.

கருத்தடை மருந்துகளின் பயன்பாடு

மாதவிடாய் தவிர, கருத்தடை மாத்திரைகளின் காரணமாகவும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கிற்கு காரணமாக இருக்கலாம். உண்மையில், இது ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக ஒழுங்கற்ற இரத்தப்போக்கு ஏற்படலாம். பொதுவாக, இது கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்திய முதல் 3 மாதங்களில் மட்டுமே நிகழக்கூடியதாகும்.

பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் பிரச்சனை

பிசிஓஎஸ் என்பது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும். அதே போல, மாதவிடாய் சுழற்சிகளுக்கு இடையில் சிறிது இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. எடை அதிகரிப்பு, கருவுறுதல் பிரச்சினைகள், முகப்பரு மற்றும் எண்ணெய் பசை சருமம் போன்றவை பிற அறிகுறிகளாகும். கருப்பை புற்றுநோய் கருப்பையில் ஏற்படக்கூடியது. இதில் அசாதாரண செல்கள் உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவி தொற்றுநோயை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: 15 நாள்களுக்கு ஒரு முறை பீரியட்ஸ் ஆகுரீங்களா? அதற்கு என்ன காரணம் தெரியுமா? இதோ மருத்துவர் தரும் விளக்கம்

தைராய்டு பிரச்சனைகள்

தைராய்டு சுரப்பியானது வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் முக்கியமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இதில் தைராய்டு சுரப்பி ஒழுங்கற்றதாக மாறும்போது, அது பசியின்மை அதிகரித்தல் அல்லது குறைதல், மூட்டு வலி, நகம் உடைதல், முடி உதிர்தல், சக்தி இல்லாமை, திடீர் எடை அதிகரிப்பு அல்லது இழப்பு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகள் உள்ளிட்ட பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே இந்த அறிகுறிகள் அசாதாரண இரத்தப்போக்குடன் சேர்ந்து இருப்பின், அது தைராய்டு பிரச்சனைக்கான காரணமாக இருக்கலாம்.

கருத்தடை மருந்தின் விளைவு

கர்ப்பத்தைத் தடுக்க ஏதேனும் பிறப்பு கட்டுப்பாட்டு மருந்தை எடுத்தாலோ அல்லது சமீபத்தில் ஒரு புதிய பிராண்ட் கருத்தடை மருந்தை உட்கொள்ளத் தொடங்கியிருந்தாலோ இரத்தப்போக்கு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகள் இரத்தக் கறைகளை ஏற்படுத்தலாம். ஏனெனில் இவை அனைத்தும் உடலில் உள்ள ஹார்மோன் அளவை மாற்றி, எதிர்பாராத இரத்தப்போக்கை ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பிறகு வரும் முதல் பீரியட்ஸ்.. மருத்துவர் சொன்ன இந்த தகவல்களை நீங்க கட்டாயம் தெரிஞ்சிக்கணும்

Image Source: Freepik

Read Next

பீரியட்ஸின் போது இடுப்பு, தொடை வலியால் அவதியா? காரணங்கள் மற்றும் தடுப்பு முறைகள் இதோ

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version