Doctor Verified

Child Mouth Ulcer: குழந்தைகளுக்கு வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்

  • SHARE
  • FOLLOW
Child Mouth Ulcer: குழந்தைகளுக்கு வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணங்களும் அறிகுறிகளும்

வாய்ப்புண்கள்

வாய்ப்புண்கள் என்பது வாயில் மட்டும் ஏற்படுவது அல்ல. இவை பெரும்பாலும், கன்னங்கள், நாக்கு உதடு போன்றவற்றில் ஏற்படுகிறது. இந்த புண்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை அல்லது சாம்பல் நிறத்தில் காணப்படும். ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட வாய்ப்புண்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதே சமயம், உதடுகளில் அல்லது வாயைச் சுற்றி சிறிய கொப்புளங்கள் சளியால் ஏற்படலாம். இவை வாய்ப்புண்கள் கிடையாது.

இந்த பதிவும் உதவலாம்: Newborn immunity: பிறந்த குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்படி அதிகரிப்பது?

வாய்ப்புண்கள் ஏற்படுவதற்கான காரணங்கள்

மருத்துவர் ஸ்ரீனிவாஸ் மிடிவெல்லி அவர்களின் கூற்றுப்படி "வாய்ப்புண்களுக்கான தெளிவான காரணம் இல்லை. இருப்பினும், ஒற்றை வாய்ப்புண்களில் பெரும்பாலானவை வாயின் புறணிப்பகுதி சேதமடைவதால் ஏற்படுகின்றன" எனக் கூறியுள்ளார். இருப்பினும், வாய்ப்புண் ஏற்படுவதற்கான காரணிகள் சிலவற்றைக் குறிப்பிட்டுள்ளார். அவற்றைப் பற்றிக் காண்போம்.

  • கடினமான உணவு
  • மோசமாகப் பொருத்தப்பட்ட பற்கள்
  • குறைபாடுள்ள நிரப்புதல்
  • தற்செயலாக கன்னத்தின் உட்புறம் அல்லது கூர்மையான பொருள்களைக் கடித்தல்

    எதனால் மீண்டும் மீண்டும் வாய்ப்புண்கள் ஏற்படுகின்றன என்பது எப்போதும் தெளிவாக இருக்காது. இருப்பினும், இதற்கான காரணிகள் சிலவற்றைக் காணலாம்.

    • சாக்லேட், காபி, காரமான உணவுகள், பாதாம், வேர்க்கடலை, தக்காளி, சீஸ், கோதுமை மாவு, ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றை உட்கொள்வது
    • மன அழுத்தம் மற்றும் பதட்டத்தினால்
    • சோடியம் லாரில் சல்பேட் கொண்ட பற்பசைகள் பயன்படுத்துவது

    இந்த பதிவும் உதவலாம்: Kids Skin Issues: மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு வரும் தோல் பிரச்சனைகள்: தடுக்க வழிமுறை

    வாய்ப்புண்கள் சில மருத்துவ பிரச்சனைகளால் ஏற்படலாம். அவற்றிற்கான காரணிகள்

    • வைட்டமின் பி12 அல்லது இரும்புச்சத்து குறைபாடு
    • கிரோன் நோய்
    • செலியாக் நோய்
    • எதிர்வினை மூட்டுவலி
    • சளி புண் வைரஸ், சிக்கன் பக்ஸ், கை, கால் மற்றும் வாய் நோய் போன்ற வைரஸ் தொற்றுகள்

    வாய்ப்புண்களுக்கு சிகிச்சையளிப்பது எப்படி

    வாய்ப்புண்களுக்கு அரிதாகவே சிகிச்சை தேவைப்படுகிறது. ஏனெனில் சில நாள்களிலேயே வாய்ப்புண்கள் தானாகவே சரியாகி விடும். இருப்பினும் சிகிச்சை மேற்கொள்வது வீக்கத்தைக் குறைப்பது, அசௌகரியத்தைப் போக்குவது போன்றவற்றிற்கு உதவும். எனினும், தொடர்ந்து வாய்ப்புண்கள் ஏற்பட்டாலோ அல்லது இதனால் சாப்பிடுவது, அருந்துவதில் பாதிப்பு ஏற்பட்டாலோ சில சிகிச்சைகளை மேற்கொள்ளலாம்.

    • பாதுகாப்பான பற்பசைகளைப் பயன்படுத்துதல்
    • பல் துலக்க மென்மையான பிரஷ்களைப் பயன்படுத்துதல்
    • புண் குணமாகும் வரை காரமான, சூடான, அமில மற்றும் கடினமான பானம் மற்றும் உணவுகளைத் தவிர்த்தல்

    இவை அனைத்தும் வாய்ப்புண்கள் ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய சிகிச்சைகள் ஆகும்.

    இந்த பதிவும் உதவலாம்: Food Allergy: குழந்தைக்கு உணவில் ஒவ்வாமை எதனால் ஏற்படுகிறது தெரியுமா?

    வாய்ப்புண்களுக்கான மருந்துகள்

    மருந்தகத்தில் வாய்ப்புண்களுக்கு சிகிச்சையளிக்க சில மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

    வலி நிவாரணிகள் மவுத்வாஷ், ஜெல், லோசன்ஸ், ஸ்ப்ரே போன்ற வடிவில் கிடைக்கப் பெறுகின்றன. இவற்றில் சில முதல் பயன்பாட்டிலேயே தீர்வு தருகின்றன. இந்த வகை தீர்வுகள் வாய் உணர்ச்சியற்றதாக மாறலாம். இது தற்காலிகமானதாகும். மவுத்வாஷ் செய்யும் போது தண்ணீரில் கலந்து பயன்படுத்தலாம். எனினும், மவுத்வாஷைத் தொடர்ந்து ஏழு நாள்களுக்கு மேல் பயன்படுத்தக்கூடாது. மேலும், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

    கார்டிகோஸ்டீராய்டு மாத்திரைகள் வாய்ப்புண் வலியைக் குறைப்பதுடன் விரைவாக மீட்க உதவும். இவற்றை அல்சர் ஏற்பட்ட உடனேயே பயன்படுத்துவது நல்லது. எனினும், இவற்றையும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயன்படுத்தக்கூடாது.

    ஆன்டிமைக்ரோபியல் மவுத்வாஷ், வாய்ப்புண்களைக் குணப்படுத்துவதை விரைவுபடுத்துகிறது. மேலும், வாய்ப்புண் தொற்று ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது. எனினும், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகள் இவற்றைப் பயன்படுத்தக்கூடாது. இதில் உள்ள குளோரெக்சிடின் குளுக்கோனேட் பற்களை கறைபடுத்தக்கூடும். எனினும், இவை சிகிச்சை முடிந்த உடன் மறைந்து விடலாம்.

    இந்த பதிவும் உதவலாம்: Child Avoid Foods: குழந்தைகளுக்கு கொடுக்க கூடாத உணவுகள் என்னென்ன?

    Read Next

    Chia Seeds Benefits: சியா விதைகளில் குழந்தைகளுக்கு நிறைந்துள்ள நன்மைகள் என்ன?

    Disclaimer