Egg: முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பலரும் ஆரோக்கியமான உணவாக கருதி முட்டையை விருப்பத்துடன் உட்கொள்கிறார்கள். முட்டையை பொறியல், ஆம்லெட், வேகவைத்து என பல வகைகளில் சாப்பிடுகிறார்கள். ஒரு முட்டையில் சுமார் 78 கலோரிகள் உள்ளன. முட்டையில் புரதம், ஆரோக்கியமான கொழுப்புகள், பொட்டாசியம், சோடியம், கார்போஹைட்ரேட் போன்றவை உள்ளன.
சரி, முட்டையில் மஞ்சள் கரு தான் பிரச்சனை என பலர் கருதுகிறார்கள். முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி12, செலினியம் போன்ற சத்துக்கள் உள்ளன. முட்டையில் சுமார் 186 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உள்ளது, எனவே இது இதய நோயை உண்டாக்கும் மற்றும் உடலில் கொழுப்பின் அளவை அதிகரிக்கும் என்று பலர் நம்புகிறார்கள்.
உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதால், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது, குறிப்பாக உடல் எடை பிரச்சனை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா, வேண்டாமா, முட்டை உடல் எடை அதிகரிக்குமா என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இரத்த கொழுப்பு Vs உணவு கொழுப்பு
முதலில் இரத்த கொழுப்பு மற்றும் உணவு கொழுப்புக்கு இடையே உள்ள வேறுபாட்டை அறிந்துக் கொள்வது அவசியம். நமது உடலில் காணப்படும் கொலஸ்ட்ரால் இரத்தக் கொழுப்பு எனப்படுகிறது. உணவில் இருந்து நாம் பெறும் கொலஸ்ட்ரால் உணவுக் கொலஸ்ட்ரால் எனப்படுகிறது.
இரத்தக் கொலஸ்ட்ரால் நல்ல கொழுப்பு என்று அழைக்கப்படுகிறது. கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கொலஸ்ட்ரால் கெட்ட கொலஸ்ட்ரால் எனப்படுகிறது. இது மெழுகு போன்ற கொழுப்புப் பொருளாகும். உடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு அதிகமாகும் போது, கொலஸ்ட்ரால் தமனிகளில் சேர ஆரம்பித்து, இதயத்திற்குச் செல்லும் இரத்தத்தைத் தடுக்கிறது. இதனால் நெஞ்சு வலி அல்லது மாரடைப்பும் ஏற்படலாம்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா?
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் முட்டை உண்ணலாம். அதேசமயம் முட்டை அளவில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தங்களது கொலஸ்ட்ரால் அளவுக்கு ஏற்ப முட்டையின் அளவை குறைக்க வேண்டும். முட்டையில் உணவுக் கொலஸ்ட்ரால் உள்ளது. உணவுக் கொழுப்பானது இறைச்சி, கடல் உணவு, முட்டை மற்றும் பால் பொருட்களில் காணப்படுகிறது.
நம் உடலே கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள், எனவே உணவுக் கொலஸ்ட்ராலை குறைந்த அளவிலேயே உட்கொள்ள வேண்டும். முட்டையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.
உணவில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், மெலிந்த புரதங்கள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் இடம்பெற வேண்டும் என்பதை உறுதி செய்துக் கொள்ளுங்கள்.
அதிக கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் எத்தனை முட்டை உட்கொள்ளலாம்?
பெரும்பாலான மக்கள் 1 முதல் 2 முட்டைகளை சாப்பிடலாம். அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். உங்கள் உணவில் நார்ச்சத்து சேர்க்கவும். இது தவிர முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகளை உட்கொள்வதை குறைக்கவும். அதிக கொலஸ்ட்ரால் இருந்தால், வாரத்திற்கு 4 முதல் 5 முட்டைகள் மட்டுமே சாப்பிட வேண்டும். இது பொதுவான தகவலே ஆகும். கொலஸ்ட்ரால் அளவை பொறுத்து இந்த அளவு மாறுபடும்.
கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்கள் உடனடியாக மருத்துவரை சந்தித்து அவ்வப்போது அதுகுறித்து பரிசோதனை செய்வது அவசியம். அதேபோல் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். முறையான உடற்பயிற்சி உடல் செயல்பாடுகளும் முக்கியம். இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் அனைவருக்கும் பகிரவும்.
Image Source: FreePik