Excessive Sweating: வியர்வை வெளியேறுவது என்பது பலருக்கும் தொந்தரவான விஷயமாக இருக்கும். உடலில் வெளியேறும் வியர்வை உடலின் பல அறிகுறிகளை குறிக்கும். சிலருக்கு மின்விசிறி அல்லது ஏசியின் காற்றில் படுத்தாலும் அதிகமாக வியர்க்கும். வானிலை வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அல்லது நீங்கள் சில தீவிர உடல் செயல்பாடுகளைச் செய்தால், உடலில் வியர்வை ஏற்படுவது மிகவும் பொதுவானது.
ஆனால் எந்த காரணமும் இல்லாமல் நீங்கள் அதிகமாக வியர்வை வெளியேறுவதை எதிர்கொண்டால், அது கவலைக்குரிய விஷயமாகும். அதிக சூடான உணவை உட்கொள்பவர்கள் உடலில் வெப்பம் அதிகரிக்கும். இப்படி உணவை உண்பவர்கள் ஏராளம்.
இந்த நபர்கள் மிகவும் சூடாக உணருவார்கள், இவர்கள் உடலில் அதிகமாக வெப்பம் வெளியேறும். வியர்வை அதிகமாக வெளியேற உணவுப் பழக்கமும் ஒரு பிரதான காரணம். உங்களுக்கு அதிகமாக வியர்க்கிறது என்றால் அதற்கான காரணங்களை அறிந்துக் கொள்வது அவசியம்.
உங்கள் உணவுப்பழக்கம் அதிக வியர்வையை ஏற்படுத்துமா?

பருவத்திற்கு ஏற்ப உங்கள் உணவு மற்றும் உணவுகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பருவத்திற்கு மாறாக உணவு உண்பதால், அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி. வெயில் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடாமல், உடலில் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொண்டால், இது நிச்சயம் உங்களுக்கு வியர்வையை உண்டாக்கும். எனவே நீங்கள் அதிகமாக வியர்த்தால், உங்கள் உணவுப் பழக்கத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.
இதோடு, நல்ல மற்றும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதேசமயம் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் வியர்வையை கட்டுப்படுத்துவதிலும் உடல் வெப்பநிலையை பராமரிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
வைட்டமின் பி, டி, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் வியர்வையைக் கட்டுப்படுத்த மிகவும் முக்கியம். எனவே, இந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
சில உடல்நலப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்
உணவைத் தவிர, உடலில் இருந்து அதிகப்படியான வியர்வை வெளியேறுவதற்கு பல காரணங்கள் உள்ளது. பல நோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அது என்னென்ன என்று பார்க்கலாம்.
- அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம்
- உயர் இரத்த அழுத்த பிரச்சனை
- நீரிழிவு போன்ற நோய்கள்
- தைராய்டு நோய்
- அதிக கொழுப்புச்சத்து
- இதய நோய்
இதையும் படிங்க: Vitamin B12 Deficiency: கவனிக்க வேண்டியவை இது தான்…
சாதாரணமாக இருக்கும் போது ஒருவருக்கு திடீரென வியர்வை அதிகம் வருகிறது என்றால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. குறிப்பாக உடல் கூலிங்காக மாறுகிறது என்றால் உடனே மருத்துவர் பரிந்துரை அவசியம். திடீரென வியர்வை வெளியேறுவதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். உணவு முறைதான் இதற்கு காரணம் என அறிந்துக் கொண்டால் அதை சரி செய்வதும் மிக அவசியம். ஆரோக்கியம் தொடர்பான கூடுதல் தகவலுக்கு OnlyMyHealth உடன் இணைந்திருங்கள்.
Image Source: FreePik