best food to eat at night: நல்ல உறக்கம் பல நோய்களுக்கு சிறந்த மருந்து என்பது மறுக்க முடியாத உண்மை. எவர் ஒருவர் குறைந்தது 8 மணிநேரம் நிம்மதியான உறக்கத்தை பெருகிறாரோ, அவர் நோய்வாய் படுவது குறைவு. ஆனால், தற்போதைய காலத்தில் தூங்க விரும்பினாலும் முடியாமல் தவிப்பவர்கள் ஏராளம். படுக்கையில் படுத்தும் தூக்கம் இல்லாமல் தவிர்ப்போம், அப்படியே தூங்கினாலும் சிறிது நேரத்திலேயே மீண்டும் கண் விழித்துவிடுவார்கள். அதற்கு பின் மீண்டும் தூங்குவது கடினம்.
தூக்கமின்மை மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. இதற்கு சரியான நேரத்தில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கான காரணங்கள் என்ன, அதற்கான சிகிச்சை என்ன என்பதை நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இது குறித்த தகவலை, உணவு நிபுணர் ஸ்வேதா ஷா நம்மிடம் பகிர்ந்துள்ளார். அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்த பதிவும் உதவலாம் : sleeping tips: உங்களின் தூக்கத்தை கெடுக்கும் 5 கெட்ட பழக்கங்கள்!
ஏன் இரவில் தூங்க சிரமப்படுகிறோம்?

நிபுணர்களின் கூற்றுப்படி, மோசமான தூக்கம் மெக்னீசியம் மற்றும் துத்தநாகத்தின் குறைபாட்டைக் குறிக்கிறது. GABA ஏற்பிகள் எனப்படும் தூக்கத்தைக் கட்டுப்படுத்தும் மூளை ஏற்பிகளின் சரியான செயல்பாட்டிற்கு மெக்னீசியம் அவசியம். இந்த GABA நரம்பியக்கடத்திகள் நல்ல அளவில் இருக்க உங்களுக்கு போதுமான மெக்னீசியம் தேவை.
மெக்னீசியம் குறைபாடு இருக்கும்போது நாம் மன அழுத்தத்தில் இருப்போம். மெக்னீசியத்தின் அளவு சரியாக இருக்கும்போது தினசரி செயல்பாடுகளும் மேம்படும். நரம்பியக்கடத்தி செயல்பாட்டில் துத்தநாகம் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் ஆரோக்கியமான தூக்கத்திற்கான முக்கிய ஹார்மோனான மெலடோனின் வளர்சிதை மாற்றத்திற்கும் அவசியம்.
இந்த பதிவும் உதவலாம் : நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
மெக்னீசியம் அதிகம் உள்ள உணவுகள்

தூக்கமின்மையை போக்க, பேரிக்காய், பூசணி, வாழைப்பழம், பாதாம், பிரவுன் ரைஸ், கிட்னி பீன்ஸ், அவகேடோ, கொழுப்பு நிறைந்த மீன், ஓட்ஸ் போன்ற உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை உட்கொள்வது உங்கள் தூக்க பிரச்சனையை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Sleep Deprivation: குறைவாக தூங்குவதால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பு ஏற்படுமா? நிம்மதியான தூக்கத்தை பெற டிப்ஸ்!
நிபுணர்களின் கூற்றுப்படி, நல்ல தூக்கத்தைப் பெற, தூங்குவதற்கு முன் தொலைபேசி, மடிக்கணினி அல்லது எந்த வகையான டிஜிட்டல் சாதனங்களிலிருந்தும் உங்களை விலக்கி வைப்பது மிகவும் முக்கியம். இது தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்தும்.
Pic Courtesy: Freepik