Drinks For Better Sleep: வேலை அழுத்தம், உடல்நலக் குறைபாடுகள் மற்றும் பிற காரணங்களால் பலர் இரவில் சரியாக தூங்குவதில்லை. ஒரு மனிதனுக்கு சரியான தூக்கம் இல்லை என்றால், அடுத்த நாள் மந்தமாக இருக்கும். எந்த வேலையும் செய்ய முடியாது.
நீண்ட நாள் தூக்கமின்மையால் அவதிப்படுவதால், எதிர்காலத்தில் பல உடல்நலப் பிரச்னைகள் ஏற்படும். இருப்பினும், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் ஒரு சில பானங்களை குடிப்பதால் பலன் கிடைக்கும். நிம்மதியான தூக்கத்தை தரும் பானங்கள் என்னவென்று பார்ப்போம்.

பாலில் மஞ்சள்
தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் பாலில் மஞ்சள் கலந்து குடித்து வந்தால் நிம்மதியாக தூங்கலாம். மஞ்சளில் உள்ள குர்குமின், தூக்கமின்மையைக்கு காரணமாக திகழும் மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கும். மேலும், இது கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களையும் தடுக்கிறது. சருமத்தை பளபளப்பாகவும் மாற்றும்.
இதையும் படிங்க: நல்ல உறக்கம் வேண்டுமா? அப்போ இதை செய்யுங்கள்
வெதுவெதுப்பான பால்
சிலருக்கு இரவு நேரத்தில் வயிறு உப்புசம் மற்றும் அஜீரண பிரச்னைகள் காரணமாக தூக்கம் வராது. அப்படிப்பட்டவர்கள் தினமும் வெதுவெதுப்பான பாலை குடித்து வந்தால் செரிமான பிரச்னைகள் குறைந்து நிம்மதியாக தூங்கலாம். பாலில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது தூக்கத்தை தூண்டும்.
பாதாம் பால்
உங்கள் அன்றாட உணவில் பாதாமை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. தினமும் இரவில் பாதாம் பால் குடிப்பதால் நன்றாக தூங்கலாம். இதில் உள்ள சத்துக்கள் கண்களை தூங்க வைக்கும் என்று கூறப்படுகிறது.
லெமன் லீஃப் டீ
ம்மில் பெரும்பாலோருக்கு லெமன் டீ தெரிந்திருக்கும், ஆனால் இந்த லெமன் லீஃப் டீ தெரிந்திருக்க வாய்ப்பில்லை . ஆம், இரவில் தூங்குவதில் சிரமம் உள்ளவர்களுக்கு இந்த ஹெர்பல் டீ அருந்துவது உதவும்.
Image Source: Freepik