Expert

Excessive Sweating: உங்களுக்கும் அதிகமாக வியர்க்கிறதா? இதற்கு உணவுமுறை தான் காரணம்!

  • SHARE
  • FOLLOW
Excessive Sweating: உங்களுக்கும் அதிகமாக வியர்க்கிறதா? இதற்கு உணவுமுறை தான் காரணம்!

உணவுப்பழக்கம் அதிக வியர்வையை ஏற்படுத்துமா?

 பருவத்திற்கு ஏற்ப உங்கள்  உணவுகளை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.  பருவத்திற்கு மாறாக உணவு உண்பதால், அது உங்கள் ஆரோக்கியத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துவது உறுதி. வெயில் அதிகமாக இருப்பதால், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும் உணவுகளை சாப்பிடாமல். உடலில் சூட்டை அதிகரிக்கும் உணவுகளை அதிகம் உட்கொண்டால், இது நிச்சயம் உங்களுக்கு வியர்வையை உண்டாக்கும். எனவே நீங்கள் அதிகமாக வியர்த்தால், உங்கள் உணவுப் பழக்கத்தில் சில பிரச்சனைகள் இருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் படிங்க: Breast Cancer Prevention Foods: மார்பக புற்றுநோயைத் தடுக்க எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள்

இது தவிர, நல்ல மற்றும் சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளாவிட்டால், உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காது. அதேசமயம் சில அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் வியர்வையை கட்டுப்படுத்துவதிலும் உடல் வெப்பநிலையை பராமரிப்பதிலும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் பி, டி, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலில் வியர்வையைக் கட்டுப்படுத்த மிகவும் முக்கியம். எனவே, இந்த ஊட்டச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.

அதிக வியர்வை சில  பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்!

உணவைத் தவிர, உடலில் இருந்து அதிகப்படியான வியர்வைக்கு பல காரணிகளும் காரணமாக இருக்கலாம். 

* அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம்

* உயர் இரத்த அழுத்த பிரச்சனை

* நீரிழிவு போன்ற நோய்கள்

* தைராய்டு நோய்

* அதிக கொழுப்புச்ச்த்து

* இருதய நோய்

உங்களுக்கு அதிகமாக வியர்த்தால், உணவில் ஏற்படும் மாற்றங்களுடன் மற்ற காரணிகளிலும் கவனம் செலுத்த வேண்டும். எனவே, மருத்துவரிடம் சென்று அதன் உண்மையான காரணங்களைப் பற்றி அவரிடமிருந்து தெரிந்து கொள்ள முயற்சிக்கவும்.

Image Source: Freepik

Read Next

கடுகு விதையை இப்படி சாப்பிட்டால் ஏணைய பிரச்சனைகள் தீரும்!

Disclaimer

குறிச்சொற்கள்