Expert

கேஸ் அடுப்பில் சுடப்பட்ட ரொட்டி, சப்பாத்திகளை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? -நிபுணர்கள் சொல்வது என்ன?

  • SHARE
  • FOLLOW
கேஸ் அடுப்பில் சுடப்பட்ட ரொட்டி, சப்பாத்திகளை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? -நிபுணர்கள் சொல்வது என்ன?


இதையும் படிங்க: Stretch Marks Remedies: ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ் மறைய 'இந்த' வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க!

சப்பாத்தி, புல்கா, ரொட்டி ஆகியவற்றை கேஸ் அல்லது விறகு அடுப்பில் தவாவை வைத்தோ, கேஸ் பர்னர் அல்லது கரியில் நேரடியாக சூடுபடுத்தியோ சமைப்போம். இப்படி தீயில் வாட்டி எடுக்கப்படும் ரொட்டி, சப்பாத்திகளின் மனமும் சுவையும் அதிகமாக இருக்கும். ஆனால் இதுபோல் சுடப்படும் ரொட்டி, சப்பாத்திகளைச் சாப்பிடுவது கேன்சரை வரவழைக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கேஸ் பர்னரில் சப்பாத்தி அல்லது ரொட்டியை சுடும்போது நடப்பது என்ன?

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஊட்டச்சத்து மற்றும் புற்றுநோய் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “கேஸ் பர்னரில் ரொட்டி அல்லது சப்பாத்தியை சுடும் போது, அதிலிருந்து ஹெட்டோரோசைக்ளிக் அமின்கள் மற்றும் பாலிசைக்ளிக் ஹைட்ரோகார்பன்களை உருவாகிறது. அவை கார்சினோஜென்ஸ் என்று அழைக்கப்படுகின்றன. இதனை மனிதர்கள் உட்கொள்ளும் போது புற்றுநோயை உருவாக்கக்கூடிய செல்களை அதிகரிக்கும்” என வெளியிடப்பட்டுள்ளது.

கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் நுண்ணிய துகள்கள் வாயு எரியும் கிரில்லின் தீப்பிழம்புகளிலிருந்து வெளியிடப்படுகின்றன. இந்த பொருட்கள் நேரடியாக சப்பாத்தியில் படுவதால், அதனை உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஆபத்தாகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, “கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு போன்றவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதன் காரணமாக, மனிதர்களுக்கு சுவாசம் மற்றும் இதயம் தொடர்பான கோளாறுகள் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சூடான தீயில் வறுக்கும்போது, ​​கோதுமையில் உள்ள இயற்கையான சர்க்கரை மற்றும் புரதங்கள் ஒன்றாகச் சூடுபடுத்தப்பட்டு, உற்பத்தியாகும் அக்ரிலாமைடு என்ற வேதிப்பொருள் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும்” எனக்குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிங்க: உஷார்!! எனர்ஜி ட்ரிங்க் பிரியர்களுக்கு இரவில் காத்திருக்கும் ஆபத்து!

எனவே, கேஸ் பர்னரில் சப்பாத்தியோ, ரொட்டியோ சுடுவதாக இருந்தால் கவனமாக இருங்கள்.

ஆய்வில் இருந்து வெளிவந்தது என்ன?

சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழிலும் ஒரு ஆய்வு செய்யப்பட்டது. குக் டாப்கள் மற்றும் எல்பிஜி எரிவாயு அடுப்புகள் நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்சைடு போன்ற பல அபாயகரமான வாயுக்களை வெளியிடுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த வாயுக்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை என்று உலக சுகாதார நிறுவனம் (WHO) கூறியுள்ளது. சுவாச நோய்களைத் தவிர, இந்த ஆபத்தான வாயு புற்றுநோய் மற்றும் இதய ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இதுமட்டுமின்றி, நம் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Image Source: Freepik

Read Next

Prostate Cancer: ஆண்களை தாக்கும் புரோஸ்டேட் கேன்சர்.! இது தான் காரணம்..

Disclaimer

குறிச்சொற்கள்