Sat Sep 12, 2026 | 01:49 AM IST

Doctor Verified

தேங்காய் எண்ணெயால் பொடுகு அதிகரிக்குமா? டாக்டர் கூறும் உண்மை காரணம்!

பொடுகை குறைக்க தேங்காய் எண்ணெய் உதவுமா அல்லது அதிகரிக்குமா? ஸ்கைனெய்ட் கிளினிக்கின் தலைமை தோல் மருத்துவர், டாக்டர் அதுலா குப்தா, உச்சந்தலையின் வகையைப் பொறுத்து தேங்காய் எண்ணெயின் உண்மையான விளைவுகளை விளக்குகிறார்.

முடியின் அழகை தீர்மானிப்பது அதன் நீளம், பளபளப்பு மட்டுமல்ல, அதன் ஆரோக்கியமும் முக்கிய பங்கு வகிக்கிறது. இன்றைய வேகமான வாழ்க்கை முறை, மாசுபட்ட சூழல், மற்றும் தவறான முடி பராமரிப்பு பழக்கங்கள் காரணமாக பொடுகு (Dandruff) பெரும்பாலானவர்களைப் பாதிக்கும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது.

பலர் தேங்காய் எண்ணெய் (Coconut Oil) உச்சந்தலையை ஊட்டமளித்து பொடுகை குறைக்கும் என நம்புகிறார்கள். அதேசமயம், சிலர் இது பொடுகை அதிகரிக்கும் என்று கூறுகிறார்கள். இதன் உண்மையைப் புரிந்துகொள்ள குர்கானைச் சேர்ந்த ஸ்கைனெய்ட் கிளினிக்கின் தலைமை தோல் மருத்துவரும் மருத்துவ இயக்குநருமான டாக்டர் அதுலா குப்தாவிடம் ஆலோசனை பெற்றோம்.

Main-

தேங்காய் எண்ணெய் – நண்பனா? எதிரியா?

“எண்ணெய் பசையுள்ள உச்சந்தலை (Oily Scalp) கொண்டவர்கள் தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தினால், மலாசீசியா (Malassezia) எனப்படும் பூஞ்சையின் வளர்ச்சி அதிகரித்து, பொடுகு, அரிப்பு, வெள்ளை துகள் போன்ற பிரச்சனைகள் மோசமடையும் வாய்ப்பு உண்டு” என்று டாக்டர் அதுலா குப்தா கூறுகிறார்.

அதிக அடர்த்தியுள்ள தேங்காய் எண்ணெயை நீண்ட நேரம் அல்லது இரவு முழுவதும் உச்சந்தலையில் வைத்தால், நுண்ணறைகள் அடைபடும், வியர்வை மற்றும் அழுக்குகள் சிக்கி, பொடுகு மேலும் அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: ஒரு கரண்டி சாம்பாரில் எவ்வளவு புரோட்டீன் இருக்கு தெரியுமா.? டாக்டர் சொல்வது கேட்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.!

தேங்காய் எண்ணெயை எப்படி சரியாகப் பயன்படுத்துவது?

* மிதமான அளவில் மட்டும் தேங்காய் எண்ணெயைத் தடவவும்.

* 30–60 நிமிடங்கள் கழித்து மிதமான ஷாம்புவால் துவைக்கவும்.

* எண்ணெயை இரவு முழுவதும் விட வேண்டாம்.

“வறண்ட உச்சந்தலையுள்ளவர்களுக்கு (Dry Scalp) தேங்காய் எண்ணெய் ஈரப்பதத்தை வழங்கி, மென்மையையும் நிம்மதியையும் தரும்,” எனவும் அவர் கூறினார். எனவே, உச்சந்தலையில் வறட்சி இருந்தால் தேங்காய் எண்ணெய் உதவலாம. ஆனால் அதிக எண்ணெய் பசையுள்ளவர்களுக்கு இது பொடுகை மேலும் தூண்டலாம்.

யார் கவனமாக இருக்க வேண்டும்?

* உச்சந்தலையில் அதிக எண்ணெய் பசை உள்ளவர்கள்

* பூஞ்சை தொற்று அல்லது செபொர்ஹெக் டெர்மடிடிஸ் (Seborrheic Dermatitis) உள்ளவர்கள்

* ஏற்கனவே அரிப்பு அல்லது சிவத்தல் காணப்படுவோர்

இவர்கள் தேங்காய் எண்ணெயை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது மருத்துவரின் ஆலோசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

1

இறுதியாக..

தேங்காய் எண்ணெய் இயற்கையாக ஆரோக்கியமானது, ஆனால் அதன் பயன் உச்சந்தலையின் தன்மையைப் பொறுத்தது. சரியான முறையில் பயன்படுத்தினால், அது முடி வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆனால் தவறாகப் பயன்படுத்தினால், அதே எண்ணெய் பொடுகை அதிகரிக்கும். அதனால், உங்கள் உச்சந்தலையின் நிலையை அறிந்து, நிபுணர் ஆலோசனையுடன் மட்டுமே தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான முடிவாகும்.

Disclaimer: இந்தக் கட்டுரை தகவல் பகிர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனையாக கருத வேண்டாம். பொடுகு அல்லது உச்சந்தலை பிரச்சனைகள் நீடித்தால், ஒரு தோல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

உணவுக்கோளாறு காரணமாக முடி உதிர்தல் ஏற்படுமா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 11, 2025 22:05 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content