தமிழகத்தில் சில இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் பல இடங்கள் குளிர்ந்த நிலையிலேயே காணப்படுகிறது. மழை மற்றும் குளிர்ந்த காலநிலையில் மக்களின் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது. இதில் ஒரு பிரதான பிரச்சனை சளி மற்றும் காய்ச்சல்.
சளி காய்ச்சல் சைனஸ் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் பெரும்பாலும் மூக்கு உறிஞ்சிக் கொண்டே இருப்பார்கள். இந்த காலக்கட்டத்தில் பெரும்பாலானோர் மூக்கு உறிஞ்சுதல் பிரச்சனையை எதிர்கொள்வார்கள். தொடர்ச்சியாக அடிக்கடியோ அல்லது ஆழமாக மூக்கு உறிஞ்சுவதால் மூக்கில் நீர் வடிதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம். ஆனால் இப்படி மூக்கு உறிஞ்சுதலால் ஏற்படும் பின் விளைவுகள் என்ன என்று எப்போதாவது சிந்தித்தது உண்டா? இதற்கான பதிலை தெரிந்துக் கொள்வோம்.
அதிகம் படித்தவை: வாழ்நாள் முழுவதும் நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க இந்த 5 யோகா செய்யுங்க!
மூக்கு உறிஞ்சுவதால் ஏற்படும் பிரச்சனைகள்
அடிக்கடி மூக்கு உறிஞ்சுவதால் ஏற்படும் பிரச்சனைகள் அரிதானகவே இருந்தாலும், குறிப்பிட்ட அளவு பக்கவிளைவுகளை சந்திக்க வேண்டி வரும். உங்கள் மூக்கை மிகவும் கடினமாக உறிஞ்சுவதால் ஏற்படக்கூடிய விளைவுகளை பார்க்கலாம்.
மூக்கடைப்பு மற்றும் இரத்தக்கசிவு
மூக்கை அடிக்கடி உறிஞ்சு சூடான காற்றை உள் இழுப்பதால், வெப்பநிலை குறையும் போது மூக்கில் சராசரியாக இருக்கும் ஈரப்பதம் முழுமையாக குறைகிறது. இதனால் மூக்கடைப்பு ஏற்படும். மேலும் மூக்கு காய்ந்துவிடும். உலர்ந்த மூக்கு நாசி குழியின் சளி சவ்வை மெல்லியதாக மாற்றுகிறது மற்றும் இரத்த நாளங்கள் மேற்பரப்புக்கு வருகின்றன.
உங்கள் மூக்கை தொடர்ந்து உறிஞ்சுவதால் மூக்கின் உள் உறுப்பில் அழுத்தம் ஏற்பட்டு இரத்தக்கசிவுக்கு வழிவகுக்கும். அதேசமயம், இந்த வகையான மூக்கிலிருந்து இரத்தப்போக்குகள் தானாகவே நின்றுவிடும்.
காது தொற்று
நாசி குழி மற்றும் காதுகள் யூஸ்டாசியன் குழாயால் இணைக்கப்பட்டுள்ளதால், மூக்கிலிருந்து சில பாக்டீரியாக்களை காதுக்குள் சென்று, தொற்றுநோயை உண்டாக்கும் சாத்தியம் உள்ளது. இது உண்மையில் அரிது.
பொதுவாக சளி பிடிக்கும் போது காது தொற்று ஏற்பட முக்கிய காரணம் காதில் காற்றோட்டம் இல்லாதது தான். மூக்கில் வீக்கம் ஏற்படுவதால் காதுக்கும் மூக்கிற்கும் இடையே உள்ள இணைப்பு மூடப்படும். காதில் திரவம் குவிந்து, தொற்றுநோய்க்கு வழிவகுக்கும்.
காது டிரம் பிரச்சனை
முன்னதாக கூறியது போல் காது யூஸ்டாசியன் குழாய் வழியாக மூக்குடன் இணைக்கப்பட்டுள்ளது. மூக்கின் முன் கணிசமான அடைப்பு இருந்தால், நீங்கள் மிகவும் கடினமாக உறிஞ்சுவதால் திடீரென்று காது டிரம்மில் ஒரு துளையை உருவாக்கும் அளவுக்கு அதிக அழுத்தத்தை உருவாக்க நேரும். இது காது டிரம் பாகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
மூக்கை உறிஞ்ச சரியான வழி எது?
மூக்கு அடைத்திருப்பது போல் அல்லது நீர் வடிவது போல் தோன்றினால் மூக்கை சரியான முறையில் உறிஞ்ச வேண்டும். உங்கள் மூக்கை மிகவும் கடினமாக உறிஞ்சுவது முன்னதாகவே கூறியது போல் உள் பாகங்களில் சேதத்தை ஏற்படுத்தும். சரி, மூக்கை சரியாக உறிஞ்சுவது என்றால் அது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
ஒரு நாசியை அழுத்தி, மற்றொன்றால் லேசாக உறிஞ்ச வேண்டும், மறுபுறம் மீண்டும் இதே செய்யவும். சரியான மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள், இது சரியாக சளி சரியாக வெளியேறும் பாதையைத் திறக்கவும் உதவும்.
இதையும் படிங்க: Black Pepper: குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் கருப்பு மிளகு சாப்பிடலாமா?
மருத்துவரை எப்போது பார்க்க வேண்டும்?
மூக்கு அடைப்பு தொடர்பான பிரச்சனையின் எந்த நிலையில் மருத்துவரை சந்திக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
காதில் வலி
இருமல்
கடுமையான தலைவலி
மூக்கில் இருந்து வேறு நிறமான சளி
காய்ச்சல்
நெஞ்சு இறுக்கம் ஆகியவை ஆகும்.
pic courtesy: freepik