Calcium Rich Foods To Improve Bone Health: 60 வயதை எட்டினாலே, உடலில் ஊட்டச்சத்துக்கள் குறைய தொடங்குகின்றன. இதனால் பல உடல் நலக் கோளறுகள் ஏற்படுகின்றன.
குறிப்பாக எலும்புகள் பலவீனமாக தொடங்குகின்றன. 60 வயதிலும் எலும்புகள் வலுவாக இருக்கு (Bone Health) கால்சியம் நிறைந்த உணவுகள் (Calcium Rich Foods) உங்களுக்கு உதவலாம். உங்கள் எலும்புகளை வலுப்படுத்தும் கால்சியம் நிறைந்த உணவுகள் இங்கே.

நட்ஸ் மற்றும் விதைகள்
நட்ஸ் மற்றும் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக இதில் கால்சியம், புரோட்டீன் மற்றும் சத்தான கொழுப்புகள் நிறைந்துள்ளன. இவை உங்கள் எலும்புகளை வழுவாக்கவும், தசைகள் மற்றும் மூட்டுகளை வலிமையாக்கவும் உதவும்.
இலை காய்கறிகள்
கீரை, முட்டைகோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற இலை காய்கறிகளில் பல ஊட்டச்சத்துக்கள் நிறைதுள்ளன. இதில் நமது உடலுக்கு தேவையான கால்சியம் உள்ளது. இதனை உட்கொள்வதால் நம் எலும்பு வலுபெறும்.
இதையும் படிங்க: Healthy Bones Tips: வலுவான எலும்புகள் வேண்டுமா? தவிர்க்காமல் இதை செய்து பாருங்கள்!
பால் பொருட்கள்
பால் கால்சியத்தின் சிறந்த மூலமாக திகழ்கிறது. பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை (தயிர், காட்டேஜ் சீஸ், பனீர், வெண்ணெய், நெய்) சாப்பிட்டு வந்தால், 60 வயதிலும் எலும்பு வலுவாக இருக்கும்.
கொழுப்பு மீன்கள்
மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. உங்கள் எலும்புகளை வலிமையாக்க சால்மன், டுனா போன்ற மீன்கள் உதவலாம். இதில் கால்சியம், வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்புகளை வலுவாக்குகிறது.
முட்டை
புரோட்டீன் மற்றும் கால்சியத்தின் சிறந்த மூலமாக முட்டை திகழ்கிறது. இதில் வைட்டமின் D போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
பருப்பு வகைகள்
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகளில் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக சோயாபீன்ஸ், பட்டாணி போன்றவற்றில் கால்சியம் அதிகம் உள்ளது. இதனை உட்கொள்வதால் எலும்பு வலுவாக இருக்கும்.
மேற்கூறிய உணவுகளை உங்கள் வழக்கத்தில் இணைத்துக்கொள்வதன் மூலம் உங்கள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Image Source: Freepik