Sleeping Time For Heart Health: ஆரோக்கியமாக இருக்க ஊட்டச்சத்து எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். தூக்கம் நம் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. போதிய தூக்கம் வரவில்லை என்றால் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் தூக்கத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் நன்றாக தூங்கவில்லை என்றால் என்ன உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம்? ஒரு நாளைக்கு எத்தனை மணி நேரம் தூங்குவது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று உங்களுக்கு தெரியுமா? இது குறித்து இங்கே காண்போம்.

இதய ஆரோக்கியத்திற்கு தூக்கம் முக்கியம்
ஒவ்வொரு மனிதனும் போதுமான அளவு தூங்கினால், உடல்நலப் பிரச்னைகள் வராது. ஆனால் தூங்கும் நேரம் குறையும் போது பிரச்னைகள் ஏற்படும். பொதுவாக, ஒரு மனிதன் ஆரோக்கியமாக இருக்க ஆறு முதல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதற்கும் குறைவாக இருந்தால் உடல்நலக் கோளாறுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூக்கமின்மையால் ஏற்படும் பிரச்னைகளை பற்றி மேலும் தெரிந்து கொள்வோம்.
தூக்கத்தைப் புறக்கணிப்பதால் இதயம் தொடர்பான நோய்களுக்கு பலர் பலியாகி வருவதாக விளக்கமளிக்கப்படுகிறது. தூக்கம் சரியில்லை என்றால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: Healthy Heart: இதயம் ஆரோக்கியமாக இருக்க இந்த உணவுகளை சாப்பிடலாம்!
6-8 மணிநேர தூக்கம் கட்டாயம்
6 மணி நேரத்திற்கும் குறைவாகவும், 8 மணி நேரத்திற்கும் அதிகமாகவும் தூங்குபவர்களுக்கு இதயக் கோளாறுகள் அதிகம் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், எத்தனை மணி நேரம் தூங்க வேண்டும் என்ற அடிப்படையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரவு 10 முதல் 11 மணிக்குள் தூங்குபவர்களுக்கு இதயம் தொடர்பான பிரச்னைகள் குறைவு. பின்னர் தூங்குபவர்களுக்கு இதயப் பிரச்னைகள் அதிகம் என்று ஆய்வு கூறுகிறது.
தூங்கும் நேரம் குறைவாக இருந்தாலும் சரி, சரியான நேரத்துக்குத் தூங்காவிட்டாலோ இதயக் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த ஆபத்தில் இருந்து விடுபட, சரியான நேரத்தில் மற்றும் போதுமான மணிநேரம் தூங்குவது பரிந்துரைக்கப்படுகிறது.
பல குழந்தைகள் மற்றும் சில பெரியவர்கள் இரவில் டிவி மற்றும் போன் பார்ப்பதால் தூங்குவதில் சிக்கல் உள்ளது. மேலும் திரை நேரத்தை குறைப்பதன் மூலம் இந்த பிரச்னையிலிருந்து விடுபட மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள். சரியான தூக்கம் மன அழுத்தத்தைக் குறைக்கும் மற்றும் பிற உடல்நலப் பிரச்னைகளைத் தடுக்கும் என்று நிபுணர்கள் விளக்குகிறார்கள்.
பின் குறிப்பு
இந்த இணையதளத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து சுகாதார தகவல்களும், மருத்துவ குறிப்புகளும் மற்றும் பரிந்துரைகளும் உங்கள் தகவலுக்காக மட்டுமே. அறிவியல் ஆராய்ச்சி, ஆய்வுகள், மருத்துவம் மற்றும் சுகாதார நிபுணத்துவ ஆலோசனைகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வழங்குகிறோம். ஆனால் இவற்றைப் பின்பற்றும் முன் உங்கள் தனிப்பட்ட மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
Image Source: Freepik