Weight Loss: எடை இழப்புக்கான காரணம் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருந்தாலும் அவர்களின் இலக்கு ஒன்று தான். பலரும் கடினமாக உழைத்து இந்த இலக்கை அடைந்துவிடுகிறார்கள். அதேசமயத்தில் சிலர் பாதியிலேயே சோர்வடைந்துவிடுகிறார்கள். தினசரி காலையில் என்ன செய்கிறோம் என்பது எடை இழப்புக்கு மிக முக்கியமான ஒன்று.
சிலர் காலையில் எழுந்ததும் யோகா, உடற்பயிற்சி, டயட் உணவு முறைகள் என பல வகை முயற்சிகளை கடைபிடிக்கின்றனர். எதை கடைபிடித்தாலும் அதை திட்டமிட்டு செய்யுங்கள். எந்தவொரு செயலையும் பாதியிலேயே கைவிட வேண்டாம். எடை மேலாண்மை உணவு மற்றும் உடற்பயிற்சியை உள்ளடக்கியது, காலை பழக்கம் அதாவது சிறிய வாழ்க்கை முறை மாற்றங்கள் என்பது எடை இழப்பு செயல்முறையை விரைவுபடுத்த பெரிதளவு உதவும்.
எடை குறைய தினசரி காலை என்ன செய்யலாம்?

தினமும் காலையில் சீக்கிரம் எழுந்திருத்தல், தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவை உடல் எடையை விரைவாகக் குறைக்க உதவும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. உடற்பயிற்சிகளை முறையாக செய்வது அவசியம். அதேபோல் நிலையான எடை இழப்பு செயல்முறையை கையாள வேண்டும். எந்தவொரு பலனையும் உடனே எதிர்பார்த்தால் அது கிடைக்காது. அப்படியே கிடைத்தாலும் அது நிலைக்காது. அதுபோல தான் உடல் எடையும். நிலையாகவும் படிப்படியாகவும் உடல் எடையை குறைப்பது முக்கியம்.
வேகமாக எழுவது அவசியம்
அதிகாலையில் எழுவது உடல் எடையை கட்டுப்படுத்துவது மட்டுமின்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது உங்கள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது, இது எடை இழப்புக்கு அவசியம். சீக்கிரம் எழுந்தால், தவறாமல் உடற்பயிற்சி செய்யவும், காலை உணவு சாப்பிடவும், முக்கியமான பணிகளை முடிக்கவும் போதுமான நேரம் கிடைக்கும்.
தியானம் செய்வதும் நல்லது
தினமும் காலையில் 10-15 நிமிடங்கள் தியானம் செய்வது உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் அன்றைய தினத்திற்கு உங்களை தயார்படுத்துகிறது. தியானம் உங்கள் உள் ஆற்றலை அதிகரிக்க பெருமளவு உதவுகிறது. தியானத்தின் மூலம் பல நன்மைகளை பெறலாம். தியானம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் குறைக்கிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.
வெதுவெதுப்பான நீர்
தினசரி காலை எழுந்ததும் வெதுவெதுப்பான நீரை குடிப்பது நல்லது. முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது என்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இந்த நடைமுறை வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. வெதுவெதுப்பான நீர் நாசி நெரிசலைப் போக்க உதவுகிறது. வெதுவெதுப்பான நீர் உடல் கொழுப்பை மூலக்கூறுகளாக உடைத்து, செரிமான அமைப்புக்கு செலுத்தி எளிதாக எரிக்கிறது.
காலை உணவு என்பது மிக முக்கியம்
காலை உணவு மிகவும் முக்கியமானது. எடை இழப்பு பயணத்தில் இருப்பவர்களுக்கு அதிக புரதச்சத்து கொண்ட காலை உணவு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த பழக்கம் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது, தீவிர உடற்பயிற்சிக்கு உதவுகிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த எடை கட்டுப்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது.
தினசரி காலை உடற்பயிற்சி
மாலை உடற்பயிற்சியை விட காலை உடற்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்வதால் அதிக கொழுப்பு எரிகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
இவை அனைத்தும் உடல் எடையை குறைக்க உதவும் என்றாலும் முறையான உடற்பயிற்சி ஆலோசகரின் பரிந்துரையை பெறுவது என்பது கூடுதல் சிறப்பு.
Image Source: FreePik