Benefits of Figs: அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் முகம் பளபளப்பாக மாறும்!

  • SHARE
  • FOLLOW
Benefits of Figs: அத்திப்பழத்தை இப்படி சாப்பிட்டால் முகம் பளபளப்பாக மாறும்!

பல்வேறு காரணங்களால் உங்கள் சருமத்தில் பொலிவு குறையலாம். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக உங்கள் சருமம் பொலிவு இழந்து காணப்படலாம். இதை சில உலர் பழங்கள் சாப்பிடுவதன் மூலம் சரிசெய்யலாம்.

இதையும் படிங்க: தேங்காய் எண்ணெயால் உடலில் ஏற்படும் நன்மைகள்?

அத்திப்பழத்தை உட்கொள்வதன் மூலம், உங்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதோடு சருமம் நன்மைகளும் மேம்படும். அதோடு பல வகையான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். அத்திப்பழங்களை உட்கொள்வதால் சருமத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை உணவியல் நிபுணர் ஷிவாலி குப்தா கூறியதை படித்துத் தெரிந்துக் கொள்வோம்.

அத்திப்பழம் சாப்பிடுவதால் தோலுக்கு கிடைக்கும் நன்மைகள்

கொலாஜன் அதிகரிக்க உதவுகிறது

கொலாஜன் என்பது சருமத்தின் நெகிழ்ச்சித்தன்மையை பராமரிக்கும் புரதம் ஆகும். அத்திப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது கொலாஜனை உறிஞ்சுவதற்கு அவசியமாகும். உங்கள் முகத்தில் உள்ள மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்களை நீக்க இது பயனுள்ளதாக இருக்கும்.

இயற்கை ஆற்றல்

சிட்ரிக் அமிலம் மற்றும் மாலிக் அமிலம் போன்ற ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் (AHA) அத்திப்பழத்தில் காணப்படுகின்றன. இந்த இயற்கையான எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் மெதுவாக இறந்த சரும செல்களை நீக்கி, உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. அத்திப்பழங்களைத் தொடர்ந்து சாப்பிடுவது வடுக்கள் மற்றும் முகப்பருக்களைக் குறைக்க உதவும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைவு

வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஈ ஆகியவை அத்திப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்க உதவுகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்கள் சருமத்தை சேதத்தையும், வயதான அறிகுறிகளை அதிகரிப்பதையும் செயல்படுத்துகிறது.

தோல் ஆரோக்கியம்

உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க அத்திப்பழத்தை உட்கொள்ளலாம். இதில் உள்ள வைட்டமின் சி, சருமத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்கி, சருமத்தை பளபளக்கச் செய்கிறது. மேலும், தோல் நிறம் ஒரே மாதிரியாக மாறும். உங்கள் உணவில் அத்திப்பழத்தை தவறாமல் எடுத்துக் கொள்வது மிக நல்லது.

நீரேற்றம் மற்றும் ஈரப்பதம்

சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மிகவும் அவசியம். இதற்கு நீர்ச்சத்து அதிகம் உள்ளவற்றை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். அத்திப்பழம் பெரும்பாலும் ஊறவைத்த பின்னரே பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதில் உள்ள நீரின் அளவு அதிகரிக்கிறது, இது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. இதனால் சரும வறட்சி நீங்கும்.

பளபளப்பான சருமத்திற்கு அத்திப்பழம் சாப்பிடுவது எப்படி?

  1. அத்திப்பழத்தை ஒரு நாள் முன் ஊறவைக்கவும். அதன் பிறகு தயிர் சேர்த்து சாப்பிடலாம்.
  2. ஊறவைத்த அத்திப்பழங்களை பாலுடன் சூடாக்கியும் சாப்பிடலாம்.
  3. இனிப்பு பானத்துடன் அத்திப்பழத்தை உட்கொள்ளலாம். இது பானத்தின் இனிப்புத்தன்மையை அதிகரிப்பதோடு ஆரோக்கிய நன்மைகளையும் மேம்படுத்துகிறது.
  4. நீங்கள் சாலட் உடனும் அத்திப்பழங்களை உட்கொள்ளலாம்.

இதையும் படிங்க: ரிமூவர் இல்லாமல் நெயில் பாலிஷை அகற்றுவது எப்படி?

அத்திப்பழம் உங்கள் செரிமானத்தை மேம்படுத்துகிறது. மேலும் மலச்சிக்கல் போன்றவைகளில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. உங்கள் நீரிழிவு நோய் அல்து பிற ஏதேனும் நோயின் தாக்கம் இருந்தால் இதை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவரின் ஆலோசனையை பெறுவது நல்லது.

Image Source: Freepik

Read Next

Dark Chocolate Benefits: இது தெரிஞ்சா தினமும் நீங்க டார்க் சாக்லேட் சாப்பிடுவீங்க

Disclaimer

குறிச்சொற்கள்