Expert

எச்சரிக்கை… மதுக்குடிப்பவர்களுக்கு இந்த 7 வகையான கேன்சர்கள் வரக்கூடுமாம்!

  • SHARE
  • FOLLOW
எச்சரிக்கை… மதுக்குடிப்பவர்களுக்கு இந்த 7 வகையான கேன்சர்கள் வரக்கூடுமாம்!

கொஞ்சமாக மது குடித்தால் நல்லதா?

ஆல்கஹால் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால், குறைந்த அளவில் மது அருந்துவது உடல் நலத்திற்கு நல்லது என்று நம்பும் பலர் சமூகத்தில் உள்ளனர். இந்த நம்பிக்கை தினமும் தவறாமல் கொஞ்சம், கொஞ்சமாக மது குடிப்பவர்கள் ஏராளம்.

is-drinking-red-wine-actually-good-for-your-health

ஆனால் தினந்தோறும் சிறிதளவு மது குடிப்பவர்களுக்கு கூட கேன்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் அதிகமிருப்பதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனம் லான்செட் பப்ளிக் ஹெல்த் என்ற பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரோக்கியத்தைப் பாதிக்காத பாதுகாப்பான அளவில் மது அருந்தலாம் என்ற கூற்று தவறானது. அதிக மது அருந்துதல் புற்றுநோயின் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது மற்றும் ஐரோப்பாவில் 200 மில்லியன் மக்கள் மது அருந்துவதால் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுவை கொஞ்சமாக அருந்தினால் பாதிப்பு ஏற்படாது என்பதும் தவறான புரிதல். எந்த அளவில் மது அருந்தினாலும் அது உடலில் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

7 வகையான புற்றுநோய்:

பெருங்குடல் புற்றுநோய், வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், போன்ற மிகவும் பொதுவான ஏழு வகையான புற்றுநோய்கள் மது அருந்துவதால் ஏற்படுகின்றன என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

எத்தனால் (ஆல்கஹால்) ஒரு உயிரியல் பொறிமுறையின் மூலம் புற்றுநோயை உண்டாக்குகிறது. அதாவது, மதுவின் அளவு குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் புற்றுநோயை உண்டாக்க வாய்ப்புள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

குறைந்த அளவு மது அருந்துவதால் நோய் அல்லது பாதகமான உடல் நிலைகள் ஏற்படாது என்பதை நிரூபிக்க சரியான அறிவியல் சான்றுகள் அவசியம். ஆல்கஹாலுக்கான பாதுகாப்பான வரம்பு குறித்த அறிக்கைகளுக்கு தற்போது தெளிவான ஆதாரம் இல்லை என்று WHO கூறுகிறது.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, “மது அருந்துவதில் பாதுகாப்பான அளவு எதுவும் இல்லை. நீங்கள் எவ்வளவு குடிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல - முதல் சொட்டு ஆல்கஹால் கூட குடிப்பவரின் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. அளவுக்கதிகமாக குடிப்பது அதிக தீங்கு விளைவிக்கும் என்பதை சந்தேகமின்றி கூறலாம்” எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:காலை எழுந்ததும் கடுமையான வலியா… ஜாக்கிரதை இந்த 5 நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்!

உலகளவில், ஐரோப்பிய மட்டுமே அதிக குடிகாரர்கள் இருப்பதாகவும், இங்கு மட்டும் 200 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என்று WHO கூறியுள்ளது.

Read Next

Writing Vs Typing: டைப் செய்வதற்கு பதில் எழுதுவதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்