actress Keerthy Suresh diet secrets: சமீபகாலமாக வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷ் ஒருவர். தமிழ் திரையுலகில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் திரையுலகிலும் இவருக்கு நல்ல வரவேற்பு உண்டு.
ரஜினி முருகன் படத்தில் பார்த்தது போன்றே இப்போது வரை இவர் தனது முகப் பொலிவையும் தலைமுடியையும் உடலையும் பராமரித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ரகுதாத்த படத்திலும் தனது வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். அன்றும் இன்றும் கீர்த்தி சுரேஷ் தனது உடலை ஒரே மாதிரியாக பராமரித்து வருகிறார்.
கீர்த்தி சுரேஷ் டயட் சீக்ரெட்
இது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும் நிலையில், ஒரு நேர்காணலில் இதுகுறித்த கேள்வி கீர்த்தி சுரேஷிடம் கேட்கப்பட்டுள்ளது. இதற்கும் கீர்த்தி சுரேஷ் பதிலளித்துள்ளார். அதில், தினசரி காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் தவறாமல் இந்த பானம் குடிப்பாராம், இந்த பானத்துடன் தனது நாளை தொடங்குவாராம். இந்த பானம் தான் இவரது டயட் முறையும் அழகு, உடல் எடை பராமரிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
கீர்த்தி சுரேஷ் காலை வெறும் வயிற்றில் குடிக்கும் பானம்
கீர்த்தி சுரேஷ் தினசரி காலை வெறும் வயிற்றில் எந்த பானம் குடிக்கிறார் என்பது குறித்து இதற்கு தேவையான பொருள் மற்றும் செய்முறை குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாலக் கீரை
செலரி கீரை
வெள்ளரி
புதினா
பூண்டு ஒன்று அல்லது இரண்டு
இஞ்சி
தண்ணீர்
சிறிய அளவு எலுமிச்சை சாறு
ஆரோக்கிய பானம் செய்முறை
பாலக் கீரை சிறிது அளவு எடுத்து வெட்டிக் கொள்ளவும். செலரி கீரை சிறிதளவு எடுக்கவும். பின் ஒன்று அல்லது இரண்டு வெள்ளரியை வெட்டி எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிதளவு புதினா இலை சேர்க்கவும். பூண்டு ஒன்று அல்லது இரண்டு உரித்து எடுத்துக் கொள்ளவும். இஞ்சி சிறிதளவு எடுக்கவும். இதை மிக்ஸி ஜார்-ல் போட்டு தண்ணீர் உற்றி நன்கு அரைக்கவும்.
இதை வடிக்கட்டி சாறாக எடுத்துக் கொள்ளவும். இந்த சாறில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை பிழிந்துக் கொள்ளவும். அவ்வளவு தான் உங்கள் பானம் ரெடி.
ஆரோக்கிய நன்மைகள்
இந்த பானம் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டிருக்கிறது. முகப் பொலிவு முதல் உடல் நச்சுத்தன்மை நீக்கம் வரை பல்வேறு நன்மைகள் இதில் உள்ளது. இந்த பானத்தை நீங்களும் குடிக்க விரும்பினால் காலை வெறும் வயிற்றில் தாராளமாக குடிக்கலாம். இது மிகுந்த நன்மை பயக்கும்.
இருப்பினும் உங்களுக்கு உடலில் வேறு ஏதும் பாதிப்பு இருந்தால், மருத்துவரை அணுகிய பிறகே இதுபோன்ற பானத்தை குடிக்கவும்.
Image Source: FreePik