$
உயர் இரத்த அழுத்தம் இன்று ஒரு பொதுவான பிரச்சனையாக மாறியுள்ளது, இதன் காரணமாக நடுத்தர வயதுடையவர்கள் மட்டுமல்ல, இளைஞர்களும் பாதிக்கப்படுகின்றனர்.
ஒரு காலத்தில் வயதானவர்கள் தான் இந்த மாதிரியான பிரச்சனைகள் வந்தன, ஆனால் இப்போது காலம் மாறிவிட்டது. இன்று, இது யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம் என்ற நிலை வந்துவிட்டது. தீவிர மன அழுத்தம், உட்கார்ந்த இடத்தில் வேலை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதால் இது ஏற்படுகிறது. மேலும் உயர் இரத்த அழுத்தம் தலைமுறை பிரச்சனையாக இருந்தால், ஆபத்து இன்னும் அதிகரிக்கிறது.
பிஸியான வாழ்க்கை முறையால் நமக்கு ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள நேரம் கிடைப்பதில்லை.
எனவே, உயர் இரத்த அழுத்தத்திற்கு நீங்கள் செய்ய வேண்டிய சில சுவாச யோகா, அதாவது சுவாசப் பயிற்சிகள் பற்றி இங்கு பார்க்கலாம்... இது அதிக நேரம் எடுக்காது மற்றும் உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

1. சம விருத்தி:
இது மிகவும் ஈசியான சுவாச பயிற்சி, இதை நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். இந்த பயிற்சி ஓய்வெடுக்கவும் அமைதியாக இருக்கவும் உதவுகிறது, அதேபோல் இரத்த அழுத்த அளவைக் குறைக்கிறது. உறங்கச் செல்லும் முன் இதைச் செய்யுங்கள், அப்போதுதான் அதிக பலன் கிடைக்கும்.
2. கபால்பதி பிராணாயாமம்:
பல்வேறு நன்மைகளைக் கொண்ட இந்த சுவாசப் பயிற்சியை காலையில் மேற்கொள்வது நல்லது. காலையில் வெறும் வயிற்றில் செய்ய வேண்டும். இது உங்கள் இரத்தத்தில் உள்ள நச்சுகளை நீக்குகிறது, உயர் இரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களிலிருந்து விடுவிக்கிறது. இருப்பினும், இந்த சுவாசப் பயிற்சியை மேற்கொள்ளும் முன்பாக மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
3. அனுலோம் விலோம் பிராணாயாமம்:
இது உங்கள் நரம்பு மண்டலத்தை சுத்தப்படுத்தவும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இது நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தின் அபாயத்தைக் குறைக்கும் என்றும் அறியப்படுகிறது
4. சித்காரி பிராணாயாமம்:
சுவாச நுட்பங்களிலேயே இது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவதோடு, மன அழுத்தத்தையும் குறைக்கிறது.
5. 30-விநாடி ஆழமான மூச்சு பயிற்சி:
இந்த சுவாச பயிற்சியை முழு அமைதியுடன் முயற்சிக்க வேண்டும். இருப்பினும், ஜப்பானில் மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய ஆய்வின் படி, இதுபோன்ற மூச்சுப் பயிற்சி யோகாக்கள் இரத்த அழுத்தத்தின் அளவைக் குறைக்கலாம் மற்றும் கட்டுப்படுத்தலாம் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சுவாச யோகாவை பின்பற்றி, உங்கள் இரத்த அழுத்த அளவுகளில் உள்ள வேறுபாட்டை கணக்கிடுங்கள். உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் இந்த பயிற்சிகளை மேற்கொள்ளும் முன்பாக உங்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மிகவும் அவசியமானது.