$
Weight Loss Foods : உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு எந்ததெந்த உணவில் எவ்வளவு கலோரிகள் உள்ளது என்பது கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் உடல் கொழுப்பை எளிதில் குறைக்க முடியும்.
உடல் எடையை பராமரிக்க சரியான அளவு கலோரிகளை கொண்ட உணவுகளைத் தேர்தெடுப்பது அவசியம். ஏனெனில் குறைந்த கலோரிகளைக் கொண்ட உணவுகளை சில ஸ்பூன்கள் சாப்பிட்டாலே வயிறு நிறைந்து, திருப்தியான ஃபீல் கிடைத்துவிடும். எனவே உடல் எடையை குறைக்க உதவும் குறைவான கலோரிகளைக் கொண்ட உணவுகள் குறித்து பார்க்கலாம்…
1.சாலட்:

சாலடுகள் எடை இழப்புக்கு பயனுள்ள குறைந்த கலோரி உணவாகும். சாலட்களில் கீரை, ப்ரோக்கோலி, தக்காளி மற்றும் ஆலிவ் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்திலும் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன.
2.ஆப்பிள்:

ஆப்பிளில் பெக்டின் என்ற பொருள் உள்ளது, இது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிற்றை நிரப்புகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து விரைவில் வயிற்றை நிரப்பும். நீங்கள் ஓட்மீல் அல்லது பழ சாலட் ஆகியவற்றுடனும் ஆப்பிள்களை சாப்பிடலாம்.
3.ஸ்ட்ராபெர்ரி:

ஸ்ட்ராபெர்ரிகள் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த குறைந்த கலோரி பழமாகும். ஒரு கப் ஸ்ட்ராபெர்ரியில் 50க்கும் குறைவான கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனை ஸ்மூத்தி, சாலட் அல்லது ஜூஸ் செய்து சாப்பிடலாம்.
4.முட்டை:

100 கிராம் முட்டையில் 52 கலோரிகள் மட்டுமே உள்ளன, மேலும் இந்த கலோரிகளிலும் புரதம் நிரம்பியுள்ளது. உங்கள் காலை உணவாக வேகவைத்த முட்டை அல்லது ஸ்க்ரம்பிள்ட் எக் செய்து சாப்பிடலாம். இவற்றில் 80 கலோரிகள் மட்டுமே உள்ளன. முட்டையில் மஞ்சள் கருவை விடாதீர்கள், அதில் தான் அதிக புரதம் உள்ளது.
5.ராஜ்மா:

ராஜ்மா ஆரோக்கியமான, புரதம், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரிகள் நிறைந்த சூப்பர்ஃபுட் ஆகும். அரை கப் ராஜ்மாவில் 100 கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனை ஜீரணிக்க நீண்ட நேரம் ஆகும் என்பதால், உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும்.
6.காலிஃபிளவர்:

எடையைக் குறைக்கும் உணவில் காலிஃபிளவர் கட்டாயம் இருக்க வேண்டிய உணவு. காலிஃபிளவர் குறைந்த கலோரிகளைக் கொண்ட ஒரு சிலுவை காய்கறியாகும். இது ப்ரோக்கோலி குடும்பத்தைச் சேர்ந்தது. 100 கிராம் காலிஃபிளவரில் 25 கலோரிகள் மட்டுமே உள்ளது. இதில் 92 சதவீதம் தண்ணீர் மற்றும் 2.5 கிராம் நார்ச்சத்து உள்ளது.