$
Yoga Asanas To Prevent Blood Clots: உலக உயர் இரத்த அழுத்தம் தினம் (World Hypertension Day) என்பது உயர் இரத்த அழுத்தம் (Hypertension) பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், இந்த நிலையைத் தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், கட்டுப்படுத்துவதற்கும், மே 17 அன்று அனுசரிக்கப்படும் வருடாந்திர நிகழ்வாகும்.
மாரடைப்பு, பக்கவாதம் போன்ற இதய நோய்களுக்கு உயர் இரத்த அழுத்தம் ஒரு முக்கிய ஆபத்து காரணியாகும். இதன் ஆபத்துகள் மற்றும் ஆரோக்கியமான இரத்த அழுத்த அளவைப் பராமரிப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பொதுமக்களுக்குக் கற்பிப்பது மிகவும் முக்கியமானது. இதற்காக தான் உலக ஹைப்பர் டென்ஷன் தினம் அனுசரிக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும், உலக உயர் இரத்த அழுத்தம் தினத்திற்கு, ஒரு கருபொருள் இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான கருப்பொருள், “இரத்த அழுத்தத்தை துல்லியமாக அளவிடவும்… இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும்… நீண்ட காலம் வாழவும்…” என்பது தான். உலக ஹைப்பர் டென்ஷன் தினம், அதாவது உலக உயர் இரத்த அழுத்தம் தினத்தை முன்னிட்டு, இரத்த உறைவை தடுக்கும் யோகா ஆசனங்கள் குறித்து தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

இரத்த உறைதல் என்றால் என்ன? (what Is Blood Clots)
இரத்த உறைதல் என்பது இரத்த குழாயில் காயம் ஏற்படும் போது ஏற்படும். அதாவது, ஒருவருக்கு இரத்த குழாயில் காயம் ஏற்படும் போது, இரத்தம் கட்டிகளாக மாறி, இரத்தப்போக்கை நிறுத்தும். இது இரத்த ஒட்டத்தை கடினப்படுத்தும். இது இதய நோய்க்கு வழிவகுக்கும். இது உடலில் Oxygen ஓட்டத்தை தடுத்து, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற ஆபத்தான நோய்க்கு வழிவகுக்கும்.
இரத்த உறைதலை தடுக்க, உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்க வேண்டும். இதற்கு யோகா உதவலாம். யோகா இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், மென்மையான நீட்சி, அதிகரித்த இதயத் துடிப்பு மற்றும் தளர்வு மூலம் இரத்தம் உறைவதைத் தடுக்கவும் உதவும். இரத்தம் உறைவதைத் தடுக்க உதவும் யோகா ஆசனங்களைப் பற்றி இங்கே காண்போம்.
இரத்த உறைவை தடுக்கும் யோகா ஆசனங்கள் (Yoga To Prevent Blood Clots)
தாடாசனம் (Tadasana)
தாடாசனம் சரியான தோரணையை ஊக்குவிக்கிறது. இது உடல் முழுவதும் உகந்த இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவுகிறது. மேலும் இது சுவாசத்தை மேம்படுத்தி, இரத்தத்தின் சிறந்த ஆக்ஸிஜனேற்றத்திற்கு உதவுகிறது.

விருக்ஷாசனம் (Tree Pose)
கால்களில் உள்ள தசை தொனியை மேம்படுத்த, விருக்ஷாசனம் உதவுகிறது. விருக்ஷாசனம் உடலில் இரத்தம் தேங்குவதை தடுக்கிறது. மேலும் இரத்த உறைவை தடுத்து, இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது. மேலும் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
அதோ முக சவனாசனம் (Downward Dog Pose)
மேல் உடலின் சுழற்சியை அதிகரித்து, இரத்த உறைதலை தடுக்க அதோ முக சவனாசனம் உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
திரிகோணாசனம் (Trikonasana)
உடல் சுழற்சியை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்த அழுத்தத்தை குறைத்து, இரத்த உறைதலை தடுக்க திரிகோணாசனம் சிறந்து செயல்படுகிறது. மேலும் இது நுரையீரல் திறனை மேம்படுத்துவதோடு, இதயத்திற்கு ஆக்ஸிஜன் ஓட்டத்தை சீராக்குகிறது.
சவாசனம் (Shavasana)
முழு உடல் தளர்வை எளிதாக்க சவாசனம் உதவுகிறது. இது தசை பதற்றத்தை குறைப்பதன் மூலம் ஒட்டுமொத்த சுழற்சியை மேம்படுத்துகிறது. மேலும் இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்கிறது. குறிப்பாக ஆரோக்கியமான இதய துடிப்பை ஊக்குவித்து, இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

பச்சிமோத்தாசனம் (Paschimottanasana)
மெதுவான சுவாசத்தை ஊக்குவிக்கவும், ஆக்ஸிஜன் ஓட்டத்தை மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை குறைக்கவும், இரத்த உறைவை தடுக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக்கவும் பச்சிமோத்தாசனம் உதவுகிறது.
Image Source: Freepik