World Mental Health Day 2023: மனநலம் தொடர்பான பிரச்சனைகள் இன்று மக்களிடையே மிகவும் பொதுவானதாகிவிட்டது. நோய் கட்டுப்பாட்டு மையம் (CDC) படி, அமெரிக்கா போன்ற நாடுகளில் மன நோய்கள் மிகவும் பொதுவான நிலைமைகளாக இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சமீப காலங்களில் மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன நிலைகள் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வருகின்றன.
அதோடு, பலவீனமான நினைவாற்றல், கவனம் செலுத்துவதில் சிரமம், சிந்தனை மற்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமம் போன்ற பிரச்சினைகளும் பலரிடம் காணப்படுகின்றன, இது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது. நீங்கள் உடல் ரீதியாக எவ்வளவு ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதை உங்கள் மன ஆரோக்கியம் தீர்மானிக்கிறது.
முக்கிய கட்டுரைகள்
இதையும் படிங்க: உடலில் ஏற்படும் மன அழுத்தத்தின் 8 தாக்கங்கள்!
உங்கள் மன ஆரோக்கியம் சரியாக இல்லாவிட்டால், அது பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் மற்றும் உங்கள் ஆரோக்கியத்திற்கு கடுமையான தீங்கு விளைவிக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மனநலம் எவ்வளவு முக்கியம் என்பது குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
ஆரோக்கியமான மன ஆரோக்கியம் ஏன் முக்கியம்?

மனித செயல்பாட்டிற்கு மூளை ஆற்றல் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. மன ஆரோக்கியம் என்பது நமது மூளையின் நல்வாழ்வை மட்டுமல்ல, உணர்ச்சி, உளவியல் மற்றும் சமூக நல்வாழ்வையும் உள்ளடக்கியது. நமது எண்ணங்களையும் மன அழுத்தத்தையும் எவ்வாறு நிர்வகிக்கிறோம் என்பதை நமது மன ஆரோக்கியம் தான் தீர்மானிக்கிறது.
குழந்தைகள், பெரியவர்கள் அல்லது முதியவர்கள் என யாராக இருந்தாலும், வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் மன ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது. நமது மனநலம் சரியில்லை என்றால், நமது உடல் ஆரோக்கியமும் பல வழிகளில் பாதிக்கப்படலாம்.
உடல் ஆரோக்கியத்தில் மன ஆரோக்கியத்தின் விளைவுகள்

CDC இன் படி, நாள்பட்ட மன அழுத்தம், பதட்டம், மனச்சோர்வு, கோபம், விரக்தி போன்ற எதிர்மறை உளவியல் சுகாதார நிலைமைகள் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வயிறு அல்லது செரிமான பிரச்சனைகள்
- அதிகரித்த இரத்த அழுத்தம்
- சர்க்கரை நோய்
- எடை அதிகரித்தல்
- பக்கவாதம்
- இதய நோய்
- கட்டுப்பாடற்ற இதய துடிப்பு
- இதயத்தில் எரியும் உணர்வு, வீக்கம் மற்றும் மோசமான இரத்த ஓட்டம்
- ஒற்றைத் தலைவலி போன்ற கடுமையான தலைவலி
- விஷயங்களை மறப்பது, நினைவாற்றல் குறைவு
- சுயமரியாதை மற்றும் கவனம் இல்லாமை
மனநலத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது எப்படி?
- உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்
- உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஆரோக்கியமான விஷயங்களை செய்யுங்கள். உங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடுங்கள்.
- ஆரோக்கியமான மற்றும் சீரான உணவை உண்ணுங்கள். இதில் கார்போஹைட்ரேட்கள், புரதங்கள், ஆரோக்கியமான கொழுப்புகள். குறிப்பாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதை உறுதி செய்யுங்கள்.
- தியானம் மற்றும் யோகா பயிற்சி செய்யுங்கள்
- வழக்கமான உடற்பயிற்சி செய்யுங்கள்
- பிடித்த இசையை கேளுங்கள்
- குடும்பத்தினருடனும், நண்பர்களுடனம் நேரத்தை செலவிடுங்கள். உங்கள் எண்ணங்களை அவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.
- ஜங்க் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள், புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் ஆகியவற்றை கண்டிப்பாக தவிர்க்கவும்.
இதையும் படிங்க: Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?
Image Source: FreePik