World Mental Health Day 2023: மனச்சோர்வுக்கு முக்கிய காரணம்.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்கவேக் கூடாது!

  • SHARE
  • FOLLOW
World Mental Health Day 2023: மனச்சோர்வுக்கு முக்கிய காரணம்.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்கவேக் கூடாது!

தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சனைகள், குழந்தை வளர்ப்பு மற்றும் நிதிக் கட்டுப்பாடுகள் போன்ற பல காரணங்கள் மனச்சோர்வு ஏற்படுகின்றன. மனம் சுமையாகவே இருக்கும், எதையும் விருப்பமாக செய்ய முடியாது, மனதில் ஏதோ பாரமாக இருக்கும், முகத்தில் சோகம் நிரம்பி இருக்கும் இதுபோன்ற பல அறிகுறிகள் காணப்படுகின்றன.

இதையும் படிங்க: உடலில் ஏற்படும் மன அழுத்தத்தின் 8 தாக்கங்கள்!

பல நேரங்களில், மனச்சோர்வு காரணமாக, தலைவலி, வயிறு தொடர்பான பிரச்சனைகள் போன்ற உடல் அறிகுறிகளும் தோன்ற ஆரம்பிக்கின்றன. மனச்சோர்வு ஏற்பட்டால் அதை எப்படி அடையாளம் காண்பது என பார்க்கலாம்.

உணர்ச்சிகளை மறைத்தல்

மனச்சோர்வு ஏற்படும் போது, பெரும்பாலும் தங்கள் உணர்ச்சிகளை மற்றவர்களிடம் வெளிப்படுத்துவதைத் தவிர்க்கிறார்கள். இந்த நபர்கள் தங்கள் நண்பர்களுடன் இருக்கும்போது, ​​அவர்கள் முற்றிலும் சாதாரணமாக இருப்பார்கள். அவர்களுடன் சிரிக்கவும், கேலி செய்யவும், வேடிக்கை பார்க்கவும் தவறுவதில்லை.

ஆனால், இத்துடன் ஒரு விசித்திரமான பயமும் அவர்கள் மனதில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒருவகையில் இவர்கள் தங்கள் மனநிலையை மற்றவர்களுக்குத் தெரியாமல் இருக்க முகத்தில் போலி உணர்ச்சிகளின் முகமூடிகளை அணிந்துகொண்டே இருப்பார்கள்.

எதிர்மறையான பேச்சு

மறைக்கப்பட்ட மனச்சோர்வுடன் போராடுபவர்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றி மிகவும் எதிர்மறையாக உணருகிறார்கள். தாங்கள் மதிப்பற்றவர்கள் என்று உணரத் தொடங்குகிறார்கள். ஒரு சூழ்நிலையில், மறைக்கப்பட்ட மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.

உங்களைச் சுற்றியிருக்கும் ஒருவர் இதுபோன்ற எண்ணங்களுடன் போராடிக் கொண்டிருந்தால், சரியான நேரத்தில் உதவிக்கரம் நீட்ட வேண்டிய உங்கள் கடமை.

மக்களுடன் தொடர்பு குறையும்

சமூக நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் தவிர்க்க முயற்சிப்பதும் மறைக்கப்பட்ட மனச்சோர்வின் அறிகுறியாகும். இந்த வகையான மனச்சோர்வைச் சந்திக்கும் நபர்கள் பெரும்பாலும் நண்பர்களுடன் வெளியே செல்வதைத் தவிர்க்கிறார்கள் மற்றும் அறிமுகமானவர்களைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள்.

மறைக்கப்பட்ட மனச்சோர்வு காரணமாக, ஒரு நபர் தனக்கு நெருக்கமானவர்களுடன் கூட சண்டையிடத் தொடங்குகிறார். இது மறைக்கப்பட்ட மனச்சோர்வின் தீவிர அறிகுறியாகும். அதைப் புறக்கணிப்பது சரியல்ல.

வொர்க் ஹாலிக் பிரச்சனை

வொர்க்ஹாலிக் என்ற வார்த்தையைக் கேட்டவுடன், அந்த நபர் வேலை செய்ய விரும்புவதாகவும், வேலையில் அதிக நேரத்தை செலவிட விரும்புவதாகவும் அடிக்கடி தோன்றும். ஆனால் இதில் குறிப்பிடத்தக்க விஷயம் இருக்கிறது. அந்த நபர் திடீரென்று தனது அலுவலகத்திலோ அல்லது பிற வேலையிலோ அதிக பிஸியாகிவிட்டால், அது நல்ல அறிகுறி அல்ல என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது மறைந்திருக்கும் மனச்சோர்வையும் சுட்டிக்காட்டுகிறது. இதனால், மக்கள் தங்களுக்குத் தேவையில்லாத பணிகளில் மும்முரமாக ஈடுபடுகிறார்கள். அவர்கள் தங்கள் மனச்சோர்வின் அறிகுறிகளை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காக இதைச் செய்கிறார்கள்.

தூக்க முறையின் சீரழிவு

வேலை காரணமாக, பலரின் தூக்க முறை தற்போதைய காலத்தில் மாறிவிட்டது. ஆனால், மக்கள் மாற்றத்திற்கு ஏற்ப தூங்கவும் எழுந்திருக்கவும் கற்றுக்கொள்கிறார்கள். ஆனால் இது உடல் ரீதியாகவும் மனதளவிலும் பிரச்சனையை ஏற்படுத்தும். பலரும் பல நாட்களில் குறைந்த மணிநேரங்களிலே தூங்குகிறார்கள். சில சமயங்களில் இரவு முழுவதும் தூங்க மாட்டார்கள்.

தொடர்ச்சியாக தூங்காமல் அவ்வப்போது மட்டுமே தூங்குவார்கள். இந்த நிலை தீவிரமானது மற்றும் மறைக்கப்பட்ட மனச்சோர்வின் அறிகுறியாகும். இது அறிகுறி என்பதை விட இந்த நிலை தீவிர மனச்சோர்வை உண்டாக்கும்.

மறைக்கப்பட்ட மனச்சோர்வை எவ்வாறு சமாளிப்பது?

மனச்சோர்வு ஏற்பட்டால், நீங்கள் ஒரு நிபுணரைச் சந்தித்து தொழில்முறை உதவியைப் பெறுவது மிகவும் முக்கியம்.

  1. தியானம், சுவாசப் பயிற்சிகள் மற்றும் யோகா பயிற்சிகள் மூலம் மனச்சோர்வை தவிர்க்கலாம்.
  2. உங்களை நீங்களே முழுமையாக மதித்து, நம்பிக்கையோடு நடந்துக் கொள்ளுங்கள்.
  3. மற்றவர்களுடன் பழகவும்.
  4. உங்கள் விருப்பப்படி ஏதாவது செய்யுங்கள், இது உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவும்.
  5. நல்ல ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்ளுங்கள்.
  6. உங்கள் நிலையை பற்றி உங்கள் குடும்பத்தாரிடம் கூறி அவர்களிடம் உதவி பெறவும்.
  7. தீவிர நிலையை உணர்ந்து சரியான மருத்துவரை அணுகலாம்.

இதையும் படிங்க: Mental Health Tips: மனநலத்தை நிம்மதியாக வைத்திருப்பது எப்படி?

மனச்சோர்வு என்பதை பல உடல்நலப் பிரச்சனைகளுக்கு வழியாக இருக்கிறது. உங்களுக்கு இதுபோன்ற ஏதேனும் தீவிர நிலையை சந்தித்தால் உடனே தகுந்த மருத்துவரை அணுகி சரியான பரிந்துரை பெற்ற அதை பின்பற்ற வேண்டியது அவசியம்.

Image Source: FreePik

Read Next

Ashwagandha Benefits: மன அழுத்தத்தை குறைக்க உதவும் அஸ்வகந்தா.. எப்படி சாப்பிடுவது தெரியுமா?

Disclaimer

குறிச்சொற்கள்