$
சர்க்கரை நோய் ஒரு தொந்தரவான பிரச்சனை ஆகும். தீராத நோய் என்றும் சொல்லலாம். சர்க்கரை நோயாளிகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக உணவு விஷயத்தில் தீவிர கவனம் தேவை. நல்ல பழக்கவழக்கங்களுடன் ஆரோக்கியமான உணவுப் பொருட்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கான காலை உணவுகள்
சர்க்கரை நோய் வந்தால், எல்லா பழக்க வழக்கங்களையும் மாற்றிக் கொள்ள வேண்டும். உண்ணும் உணவில் கவனமாக இருக்க வேண்டும். பிடித்த உணவு மற்றும் பானங்களைத் தவிர்த்து, அவற்றின் இடத்தில் ஆரோக்கியமான உணவைச் சேர்க்கவும். ப்ரோக்கோலி, கேரட், கீரைகள், கேப்சிகம், தக்காளி, பழங்களில் தர்பூசணி, ஆரஞ்சு, பெர்ரி, ஆப்பிள், வாழைப்பழம், திராட்சை ஆகியவை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவற்றுடன் தானியங்கள், இறைச்சி, மீன், குறைந்த கொழுப்புள்ள பால் மற்றும் தயிர் சேர்த்துக் கொள்ளலாம்.
இதையும் படிங்க: டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?
சர்க்கரை நோய் கட்டுப்படுத்த உணவுகள்

காலை உணவு என்பது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. சர்க்கரை உள்ளவர்கள் காலை உணவில் கவனமாக இருக்க வேண்டும். ஊட்டச்சத்துடன் சுவையாக இருக்க வேண்டும் என்பதால் தேர்வு சரியாக இருக்க வேண்டும். இவற்றுடன் சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அத்தகைய சில காலை உணவுகள் இங்கே உள்ளன. என்று பார்ப்போம்.
இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உணவுகள்
ஸ்மூத்தி கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதை காலை உணவில் உட்கொண்டால், நாள் முழுவதும் இரத்த சர்க்கரை கட்டுக்குள் இருக்கும். இது இன்சுலின் எதிர்ப்பைக் குறைக்கிறது. ஸ்மூத்தி பழ வகைகள் மூலம் தயாரிக்கப்படும் உணவாகும்.
ஸ்ட்ராபெரி, வாழைப்பழம், கிவி துண்டுகள் - 1 கப், ஊறவைத்த ஆளி விதைகள் - 2 டீஸ்பூன், குறைந்த கொழுப்பு சோயா பால் - 1 கப் உள்ளிட்டவைகளை கலந்து தயாரிக்கப்படும் ஸ்மூத்திகள் கூடுதல் சிறப்பு.
ராகி
சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. ஜீரணிக்க சிறிது நேரம் ஆகும். ராகிவை காலை உணவில் எடுத்துக் கொண்டால், நீண்ட நேரத்துக்கு பசி எடுக்காது. வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ராகியில் புரதம், கால்சியம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. இவை நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. ராகியை ஊத்தப்பமாக செய்தும் ரொட்டியாக செய்தும் சாப்பிடலாம்.
கடலை மாவு
நீரிழிவு நோயாளிகளுக்கு கடலை மாவு மிகவும் நல்லது. இதில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளது. அவை இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். இது குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது குளுக்கோஸை இரத்தத்தில் நம்பத்தகுந்த முறையில் பாய அனுமதிக்கிறது. இதில் வைட்டமின் சி, பி6, ஃபோலேட், நியாசின், தியாமின், மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு மற்றும் தாமிரம் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.
காய்கறி ஆம்லெட்
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பதை நாம் அறிவோம். சர்க்கரை நோயாளிகளுக்கு முட்டை நல்லது என்கிறார்கள் நிபுணர்கள். சிட்னி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வின்படி, நீரிழிவு நோயாளிகளுக்கு முட்டை நல்லது. ஒரு வருடத்திற்கு வாரத்திற்கு 12 முட்டைகளை சாப்பிட்டு வந்தால், சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயாளிகளுக்கு இதய நோய் வராது.

ஓட்ஸ், கேரட் வகைகள்
ஓட்ஸ், கேரட், கீரை, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் ஒரு தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். நான்-ஸ்டிக் பாத்திரத்தை எடுத்து அதில் சிறிது எண்ணெய் தடவவும். இப்போது ஒரு ஸ்பூன் மாவு எடுத்து வட்டமான வடிவில் தோசை போல் ஊத்தவம். இதை காலை உணவாக எடுத்துக் கொண்டால் சர்க்கரை நோயாளிகளுக்கு இன்னும் சிறப்பு.
இதையும் படிங்க: சில அறிகுறிகள் உங்கள் சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லை என எச்சரிக்கிறது தெரியுமா?
சர்க்கரை நோயாளிகள் தங்கள் சர்க்கரை அளவை குறைக்க இதுபோன்ற பல உணவு முறைகள் உதவும் என்றாலும் அதீத அளவையும் தீவிரத்தையும் சந்திக்கும் பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
image source: freepik