Thu Oct 29, 2026 | 12:54 PM IST

H1N1 Influenza: அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகள்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

H1N1 Influenza: அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகள்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?H1N1 Influenza: அதிகரிக்கும் மர்ம காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகள்; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

How can you prevent the flu naturally: கடந்த சில நாட்களாக மக்கள் மத்தியில், டெங்கு காய்ச்சலுடன் வைரஸ் தொற்று பாதிப்பும் அதிகரித்துள்ளது. இதற்கிடையில், H1N1 வைரஸ் தொற்றும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், மர்ம காய்ச்சல் மற்றும் வைரஸ் தொற்றுகள் தொற்றுகளில் இருந்து உங்களை எப்படி பாதுகாக்கலாம் என இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பெங்களூரில் H1N1 வைரஸ், சுவாச ஒத்திசைவு வைரஸ், வைரஸ் தொற்றுகள், காய்ச்சல் போன்றவை அதிகரித்துள்ளன. இதுமட்டுமின்றி, ஆஸ்துமா, ஒவ்வாமை நாசியழற்சி மற்றும் தோல் தொடர்பான பிரச்சனைகளும் மாநிலத்தில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், H1N1 வைரஸ் பாதிப்பும் 20 சதவீதம் அதிகரித்துள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, செப்டம்பர் 8 ஆம் தேதி வரை பெங்களூரில் 416 டெங்கு தொற்று பதிவாகியுள்ளது.

இந்த பதிவும் உதவலாம் : common monsoon diseases: பருவமழையில் பரவும் நோய்த் தொற்றுகள்- முன்னெச்சரிக்கை அவசியம்

வைரஸ் தொற்று மற்றும் காய்ச்சலைத் தவிர்ப்பதற்கான வழிகள்

  • வைரஸ் தொற்றைத் தவிர்க்க, உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருங்கள்.
  • உணவில் கவனம் செலுத்துங்கள். பாக்கெட் அல்லது பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது வைரஸ் அல்லது பாக்டீரியா தொற்றுகளை ஏற்படுத்தும்.
  • உங்கள் சுற்றுப்புறத்தில் தண்ணீர் தேங்காமல் வைத்திருப்பது நல்லது.
  • தொற்று பரவுவதை தவிர்க்க, இருமல் மற்றும் தும்மலின் போது உங்கள் வாயை மூடிக்கொள்ளுங்கள், இதனால் தொற்று பரவுவதைத் தடுக்கலாம்.
  • தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து மற்றும் வடிகட்டி குடிக்கவும். இதன் காரணமாக, தண்ணீரில் இருக்கும் பாக்டீரியாக்கள் எளிதில் நீங்கும்.
  • தினமும் காலை கொத்தமல்லி, புதினா தண்ணீர் அல்லது கபசுர குடிநீர் ஆகியவற்றை குடிக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Frequent Cold and Cough: தொடர் இருமல், சளி என்பது சாதாரண விஷயமல்ல!

வைரஸ் தொற்று அறிகுறிகள்

  • வைரஸ் தொற்று காரணமாக உடலில் பல மாற்றங்களைக் காணலாம். இந்நிலையில், உடலில் வலி மற்றும் விறைப்பு ஆகியவற்றுடன், ஒருவர் சோர்வாகவும் உணரலாம்.
  • மேலும், தொண்டை புண், இருமல், சளிஅல்லது தும்மல் போன்ற அறிகுறிகளும் காணப்படலாம்.
  • வைரஸ் தொற்று காரணமாக, சில நேரங்களில் செரிமானம் தொடர்பான பிரச்சனைகள் அல்லது வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்றவையும் ஏற்படலாம்.
    இது தவிர, கொப்புளங்கள், தோல் வெடிப்பு போன்றவையும் ஏற்படும்.

Pic Courtesy: Freepik

Read Next

→ Measles Vaccination: தட்டம்மை - அறிகுறி, காரணம், சிகிச்சை மற்றும் தடுப்பூசி

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.