Wrinkles Reducing Tips: முகத்தில் சுருக்கம் அதிகமா இருக்கா? இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க

  • SHARE
  • FOLLOW
Wrinkles Reducing Tips: முகத்தில் சுருக்கம் அதிகமா இருக்கா? இந்த எண்ணெய்களைப் பயன்படுத்துங்க


முக எண்ணெய்கள்

தோல் பராமரிப்பு நடைமுறைகளின் ஒரு பகுதியாக முக எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறது. இவை சுருக்கங்கள் உட்பட பல்வேறு தோல் பிரச்சனைகளுக்குத் தீர்வாக அமைகிறது. இதற்கு இந்த எண்ணெய்களில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள், தாதுக்கள், கொழுப்பு அமிலங்கள் போன்றவை காரணமாகும். சருமத்திற்கு எண்ணெய்களைப் பயன்படுத்தும் போது, இவை தோல் நெகிழ்ச்சித் தன்மையை மேம்படுத்துவதுடன், தோலின் ஒட்டுமொத்த அமைப்பையும் மேம்படுத்த உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Causes of Pimples: முகத்தில் பருக்கள் வர முக்கிய காரணம்!

முகச்சுருக்கங்களைக் குறைக்க உதவும் எண்ணெய்கள்

முகத்தில் காணப்படும் சுருக்கங்களைக் குறைக்க உதவும் சில எண்ணெய்களைக் காணலாம்.

ஜோஜோபா எண்ணெய்

சருமத்திற்குப் பயன்படுத்தப்படும் ஜோஜோபா எண்ணெயில் வைட்டமின் சி, பி, ஈ, துத்தநாகம், தாமிரம் போன்றவை நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்து மிக்க எண்ணெய்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இவை இயற்கையான சருமத்தைப் போன்ற கலவையுடன், முகத்தில் எண்ணெய் உற்பத்தியை சமப்படுத்தவும், நீரிழப்பைத் தடுக்கவும், சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது.

தூப எண்ணெய்

மிகவும் பிரபலமான மற்றும் தனித்துவமான அத்தியாவசிய எண்ணெய்களில் தூப எண்ணெயும் ஒன்று. இது போஸ்வெல்லியா சாக்ரா (Boswellia Sacra) என்ற பர்செரேசி (Burseraceae) குடும்ப வகையைச் சார்ந்தது. இதிலிருந்து தயாரிக்கப்படும் தூப எண்ணெய் பல்வேறு நன்மைகளைத் தருகின்றன. சருமத்திற்கு இவற்றைப் பயன்படுத்துவது சுருக்கங்களின் தோற்றத்தைக் குறைக்கவும், சருமத்தின் உறுதியை மேம்படுத்தவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Summer Skin Care: கோடையில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்?

மருலா எண்ணெய்

இது வெளிர் மஞ்சள் நிற எண்ணெய் ஆகும். இது சோப்பு மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற பல அழகு சாதனப் பொருள்களிலும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த எண்ணெயில் ஒமேகா - 6, ஒமேகா – 9 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சருமத்தை ஈரப்பதமாக்கவும், மெல்லிய கோடுகளைக் குறைக்கவும் உதவுகிறது.

ரோஸ்ஷிப் எண்ணெய்

இந்த வகை எண்ணெயில் வைட்டமின் சி மற்றும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவை நிறைந்துள்ளது. இது சருமத்தில் தோன்றும் மெல்லிய கோடுகளை மறையச் செய்து, தோல் மீளுருவாக்கத்திற்கு உதவுகிறது. மேலும், சேதமடைந்த சருமத்தை சரி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

ஆர்கன் எண்ணெய்

ஆர்கன் எண்ணெய் நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒமேகா-9 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மூலமாகும். இது திரவ தங்கம் என்று அழைக்கப்படுகிறது. இவற்றை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமத்தை ஈரப்பதமாக்குவதுடன், வீக்கத்தைக் குறைக்கிறது. மேலும், இது கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது முகச்சுருக்கங்களை எதிர்த்துப் போராடுவதற்கான சிறந்த தேர்வாகும்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

Image Source: Freepik

Read Next

Custard Apple Leaves: சரும (ம) கூந்தல் பிரச்சினையை சரிசெய்ய சீதாப்பழ இலையை எப்படி பயன்படுத்துங்க!

Disclaimer

குறிச்சொற்கள்