Cardio Workout: வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த கார்டியோ உடற்பயிற்சிகள்!

  • SHARE
  • FOLLOW
Cardio Workout: வீட்டிலேயே செய்யக்கூடிய சிறந்த கார்டியோ உடற்பயிற்சிகள்!


Cardio Workout: விறுவிறுப்பான வாழ்க்கை முறையில் தவறான உணவுப்பழக்கம் என்பது பொதுவானதாக மாறி வருகிறது. இதனால் பலரும் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். உடல் எடையை குறைக்க பலர் பல முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.

சிலர் ஜிம்மிற்கு போக நேரம் இல்லாததால் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்ய விரும்பப்படுகின்றனர். சிலர் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்தாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை. காரணம், முறையான உடற்பயிற்சியை அறிந்து செய்வது இல்லை. வீட்டிலேயே குறிப்பிட்ட கார்டியோ உடற்பயிற்சிகளை அறிந்து அதை செய்யலாம். இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

வீட்டிலேயே செய்யக் கூடிய கார்டியோ உடற்பயிற்சி

தற்போது வழங்கப்பட்டுள்ள கார்டியோ உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம். ஆனால் இதோடு உணவு முறையிலும் கூடுதல் கவனம் செலுத்துவது இன்னும் சிறப்பாகும்.

புஷ்-அப்கள்

புஷ்-அப்கள் என்பது ஆரம்பத்தில் செய்வதற்கு சிரமமாக இருந்தாலும், முயற்சி செய்ய செய்ய எளிதாக செய்துவிடலாம். புஷ்-அப் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும். புஷ்-அப் உடல் வலிமையை உருவாக்குவதற்கும், முக்கிய தசைகளை செயல்படுத்தவும் இது உதவும்.

ஆரம்பத்தில் முழங்காலை தரையில் வைத்துக் கொண்டு உடலை மட்டும் தூக்கி புஷ் அப் செய்யலாம். இதை தொடர்ந்து முயற்சி செய்தால் உடலை வலுவாக்கலாம்.

High Knees உடற்பயிற்சி

இதய துடிப்பை அதிகரிக்க High Knees உடற்பயிற்சி செய்யலாம். ஒரே இடத்தில் நின்றபடி உங்கள் முழங்கால்களை மட்டும் மாறி மாறி வேகமாக மார்பை நோக்கி தூக்கவும். நேராக நிற்க வேண்டியது அவசியம். வேகமாக விரைவாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அதேபோல் இதை செய்யும் போது நீங்கள் வினாடி கணக்கு வைத்துக் கொள்ளலாம் அல்லது எண்ணிக்கை கணக்கு வைத்துக் கொள்ளலாம்.

பர்பீஸ்

கார்டியோ உடற்பயிற்சியில் இது மிக முக்கியம். முதலில் நிற்கவும் பின் ஸ்குவாட் செய்யவும் அப்படியே கால்களில் பின் உதைப்பது போல் புஷ்-அப் நிலைக்கு செல்லவும். அப்படியே புஷ்-அப் எடுத்து மீண்டும் மீண்டும் இதை செய்யவும். இப்படியே நீங்கள் வினாடி கணக்கிலோ அல்லது எண்ணிக்கை கணக்கிலோ செய்யலாம்.

ஜம்பிங் ஜாக்ஸ்

இதுவும் அற்புதமான கார்டியோ உடற்பயிற்சியாகும். இது இதயத் துடிப்பை அதிகரிக்க உதவுகிறது. கலோரிகளை எரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவும். கால்களை சற்று அகலமாக வைத்து இரண்டு கைகளையும் மேல் உயர்த்தி குதிக்க வேண்டும். இரண்டு கைகளையும் மேலே உயர்த்தும் போது கால்களை அகற்றவும், கைகளை தளர்த்தும் போது கைகளை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும்.

ஸ்கிப்பிங்

ஸ்கிப்பிங் செய்வதும் உடலுக்கு ஏணைய நன்மை வழங்கும். உங்கள் வீடு அதற்கு ஏற்ப இருந்தால் ஸ்கிப்பிங் செய்யலாம். அதி தீவிர கார்டியோ பயிற்சியில் ஸ்கிப்பிங்கை கண்டிப்பாக இணைத்துக் கொள்ளலாம்.

ஸ்குவாட்

ஸ்குவாட் செய்வது உடலுக்கு மிகுந்த நன்மை பயக்கும். உடல் எடை மற்றும் கீழ் பகுதியை வலுப்படுத்த ஸ்குவாட் சிறந்த உடற்பயிற்சியாகும். உடலின் கீழ் பகுதியை வலுப்படுத்த ஸ்குவாட் சிறந்த பயிற்சியாகும். இது மிகுந்த நல்ல உடற்பயிற்சியாகும், இது உடலின் சரியான வடிவத்தை பராமரிக்க உதவும்.

Image Source: FreePik

Read Next

Lose Belly Fat: சட்டென்று தொப்பை குறைய இந்த உடற்பயிற்சி போதும்!

Disclaimer

குறிச்சொற்கள்