Cholesterol levels by age chart: மோசமான உணவுப்பழக்கம் மற்றும் உடல் செயல்பாடு குறைவாலும் பெண்ககள் பல்வேறு நோயால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, வறுத்த, காரமான உணவுகள் மற்றும் துரித உணவுகளை தொடர்ந்து உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். இதனால் பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படலாம். அதிக கொலஸ்ட்ராலை குறைக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறை இரண்டிலும் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
உடலில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. அதாவது உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் (HDL) மற்றொன்று குறைந்த அடர்த்தி கொழுப்புப்புரதம் (LDL). HDL-யை நல்ல கொழுப்பு என்றும் LDL-யை கெட்ட கொழுப்பு என்றும் அழைக்கிறோம். உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் நிலையை ஹை கொலஸ்ட்ரால் என்பார்கள். இந்த கொலஸ்ட்ரால் இரத்தத்தில் அதிகரிக்கும் போது, அது உங்கள் தமனிகளில் அடைப்பை ஏற்படுத்துகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Healthy Heart Tips: இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கான சில வழிகள்
இதன் காரணமாக, உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு போன்ற கடுமையான இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. 35 வயதிற்குப் பிறகு, பெண்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவைக் கவனித்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். பெண்களின் சாதாரண கொலஸ்ட்ரால் அளவு என்ன, அது அதிகரிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
பெண்களுக்கு கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

அதிகப்படியான எண்ணெய், நொறுக்குத் தீனிகள் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுகளை உட்கொள்வதாலும், உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கொலஸ்ட்ராலின் அதிகரிப்பு இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல தீவிர நோய்களுக்கும் உங்களை ஆளாக்குகிறது.
அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஏற்படலாம். இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களும் இந்த மோசமான நிலைக்கு பலியாகி வருகின்றனர். லக்னோவின் பிரபல இருதயநோய் நிபுணர் டாக்டர் கே.கே.கபூர் இது குறித்து கூறுகையில், “நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்க வழக்கங்களால் பெண்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் ஏற்படும் அபாயம் உள்ளது. கொலஸ்ட்ரால் அளவு வயது மற்றும் உடல் நிலையைப் பொறுத்து நபருக்கு நபர் மாறுபடும். ஆனால் அது ஒரு குறிப்பிட்ட அளவைத் தாண்டினால், உயிருக்கே ஆபத்தாகலாம்”.
இந்த பதிவும் உதவலாம் : கார்டியாக் அரெஸ்ட் பற்றிய 7 அறியப்படாத உண்மைகள் இங்கே!
உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் சாதாரண வரம்பு அதாவது LDL 100 mg/dL-க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதைத் தாண்டினால், அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனைக்கு ஆளாக நேரிடும். இது தவிர, கெட்ட கொலஸ்ட்ரால் 130 mg/dL-க்கு மேல் இருப்பது ஆபத்தானதாகக் கருதப்படுகிறது. உங்கள் உடலில் கெட்ட கொழுப்பின் அளவு அதிகரித்து, நல்ல கொழுப்பின் அளவு இயல்பை விட குறைவாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
வயதுக்கு ஏற்ப பெண்களின் உடலில் கொலஸ்ட்ரால் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்?

20 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்
LDL - 100 mg/dl -க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
HDL- 50 mg/dl அல்லது அதற்கு மேல்.
மொத்த கொழுப்பு- 125 முதல் 200 mg/dl.
HDL அல்லாதது - 130 mg/dl-க்கும் குறைவானது.
25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்
LDL- 100 mg/dl-க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
HDL- 40 mg/dl அல்லது அதற்கு மேல்.
மொத்த கொழுப்பு- 125 முதல் 200 mg/dl.
HDL அல்லாதது - 130 mg/dl -க்கும் குறைவானது.
இந்த பதிவும் உதவலாம் : இதய அடைப்பின் 5 அறிகுறிகள்: பெண்களே உஷார்!!
அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்:

உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரித்தால், இந்த பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- மார்பு வலி மற்றும் அசௌகரியம்.
- தோல் நிறத்தில் மாற்றம்.
- சுவாசக் கோளாறு.
- அதிகரித்த இரத்த அழுத்தம்
- திடீர் பீதி.
- இதய துடிப்பு திடீர் அதிகரிப்பு.
- உடலில் தொடர்ந்து சோர்வு மற்றும் சோம்பல்.
- உடலின் இடது பக்கத்தில் திடீர் வலி.
- குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனை.
கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க, உணவு மற்றும் வாழ்க்கை முறை குறித்து சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உணவில் குறைந்த கொழுப்புள்ள உணவுகளைச் சேர்ப்பது மற்றும் வழக்கமான உடற்பயிற்சி அல்லது ஜாக்கிங் செல்வது ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது.
Image Courtesy: freepik