Friendship Marriage a New Relationship Trend Popular in Youngster: இன்றைய இளம் தலைமுறையினர் பலரும் திருமணம், குடும்பம் மற்றும் உறவுகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ள விரும்புவதில்லை. இதனால், லிவ்-இன் ரிலேஷன்ஷிப் என்ற கருத்து இளைஞர்களிடையே அதிகரித்து வருகிறது. ஆனால், இது இன்றும் பல நாடுகளில் லைவ்-இன் உறவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. கலாச்சாரத்தை அடிப்படையாக வைத்து இது சட்டவிரோதமாக கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், ஜப்பான், இந்தோனேசியா, இந்தியா போன்ற பல நாடுகளில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் இருக்க புதிய வழிகளைக் கண்டறிந்துள்ளனர். இது நட்பு திருமணம் எனப்படுகிறது. இந்த நட்பு திருமணத்தில் இணைபவர்கள் அவர்கள் ஒருவருக்கொருவர் அன்புடனும், உடல் ரீதியான பற்று ஏதும் இல்லாமலும் உறவு ஆகும். இந்த டிரெண்டிங் நட்பு திருமணம் குறித்த விவரங்களைக் காணலாம்.
இந்த பதிவும் உதவலாம்: Benching in Dating: இளைஞர்கள் மத்தியில் அதிகரிக்கும் பெஞ்சிங் டேட்டிங் மோகம்; அப்படினா என்ன தெரியுமா?
நட்பு திருமணம்
இந்த நட்பு திருமண நடைமுறை தற்போது முக்கியமாக ஜப்பானில் இருந்து தொடங்குகிறது. அதாவது ஜப்பானிய ஏஜென்சியான கலர்ஸின் சமீபத்திய தரவின் படி, நாட்டின் 124 மில்லியன் மக்கள்தொகையில் பெரும்பாலான இளைஞர்கள் நட்பு திருமணத்தில் ஆர்வம் காட்டுவதாகவும், அதைப் பின்பற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த டிரெண்டிங் நட்பு திருமண நடைமுறையை பாலினமற்ற, ஓரினச்சேர்க்கையாளர் மற்றும் பாரம்பரிய திருமண வாழ்க்கை வாழும் இளைஞர்கள் போன்ற அனைவருமே பின்பற்றுகின்றனர். இந்த நட்பு திருமணத்தில், தம்பதிகளிடையே காதல் இருக்கும், ஆனால் எந்த திருமண உறவும் இருக்காது.
நட்பு திருமணம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை
- நட்பு திருமணம் என்பது ஒரு வகையான ஒப்பந்த திருமணமாகும். இந்த முறையில் இருவரும் சட்டப்படி திருமணம் செய்து கொண்டனர். இதில் இவர்களுக்கிடையே எந்த வகையான காதல் உறவும் இல்லை என்றாலும், இந்த திருமண முறையில் அவர்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ஒன்றாகவோ அல்லது தனித்தனியாகவோ வாழலாம்.
- ஒப்பந்தத்தின் படி, நட்பு திருமணத்தில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் உணர்வுபூர்வமாக வாழ்க்கையை நடத்துவர். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையின் எந்தவொரு எதிர்மறையான பிரச்சனைகளையும், விஷயங்களையும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: உங்க துணை உங்களைப் புறக்கணிப்பதற்கான காரணம் என்னென்னனு தெரிஞ்சிக்கோங்க
- நட்பு திருமணத்தை பெரும்பாலும் திருமணம் செய்து கொள்ள விரும்பாதவர்கள் அல்லது காதல் உறவுகளில் நம்பிக்கை இல்லாதவர்கள் போன்றோருக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. எனினும், அவர்கள் சமூகத்தின் முன் தங்கள் நல்ல பிம்பத்தைத் தக்க வைத்துக் கொள்ள விரும்புகின்றனர் அல்லது தங்கள் பெற்றோரை மகிழ்ச்சியாகக் காண குறுகிய காலத்திற்கு ஒரு துணையைத் தேடுகின்றனர்.
- இந்த திருமண பந்தத்தில் தம்பதியினரிடையே காதல், உடல் உறவு என எதுவும் இருக்காது. ஆண், பெண் இருவருமே ஒருவருக்கொருவர் விருந்து பரிமாறவும், ஊர் சுற்றுதல், வாழ்க்கையை அனுபவித்தல் என என்ன வேண்டுமானாலும் செய்யலாம். இது எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்து கொள்ளும் திருமணம் ஆகும்.
- சாதாரண திருமணத்தைப் போலவே, தம்பதிகள் நட்பு திருமணத்திலும் ஒரு குழந்தையைத் திட்டமிடலாம். எனினும், தம்பதிகள் சாதாரண முறையில் அல்ல, செயற்கை முறையில் குழந்தையைப் பெற்றெடுக்க முடியும். நட்பு திருமணத்தைப் பற்றி, சில பெரியவர்கள் கூறுகையில், இது திருமணமோ அல்லது காதலோ கிடையாது. ஆனால், இரண்டு பேர் அறை தோழர்களைப் போல ஒன்றாக வாழ்வதைக் குறிக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம் எனக் கூறுகின்றனர்.

இந்த வகை திருமணம் தற்போது ட்ரெண்டிங்கில் செல்கிறது. இந்த திருமண பந்தத்தில் இரண்டு பேர் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருந்தால், அவர்கள் வாழ்க்கைத் துணையாக மாற முடிவு செய்து திருமணமும் செய்து கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது. இந்த டிரெண்டிங் திருமணம் புதிதான ஒன்றாக இருப்பினும், இன்றைய இளம் தலைமுறையினர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Mistakes In Relationship: உறவைப் பராமரிக்க நீங்க தவிர்க்க வேண்டிய தவறுகள் இது தான்
Image Source: Freepik