Doctor Verified

Mistakes In Relationship: உறவைப் பராமரிக்க நீங்க தவிர்க்க வேண்டிய தவறுகள் இது தான்

  • SHARE
  • FOLLOW
Mistakes In Relationship: உறவைப் பராமரிக்க நீங்க தவிர்க்க வேண்டிய தவறுகள் இது தான்

பல சமயங்களில் இவை நம்மால் கவனிக்க முடிவதில்லை. ஆனால், உறவுகளில் ஏற்படும் சிறு தவறுகளும் பெரிய தவறான புரிதல்களை உருவாக்குகிறது. அதே போல காரணம் ஏதும் இல்லாமல் துணையுடன் கோபப்படுவது அல்லது கத்துவது போன்றவை ஏற்படலாம். இந்த தவறுகளுக்கு கவனம் செலுத்தாத போது உறவை முறித்து விடலாம். இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் மூத்த மருத்துவ உளவியலாளர் டாக்டர். ஆர்த்தி ஆனந்த் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: உங்கள் பிரேக் அப் மோசமாக இருந்ததா? அதில் இருந்து வெளிவர சில வழிகள் இங்கே..

உறவை வலுவிலக்கச் செய்யும் தவறுகள்

தேவைகளை புறக்கணிக்க

உறவுகளில் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு, ஒருவரையொருவர் தேவைகளைக் கவனித்துக் கொள்ளும் போது உறவு அழகாக மாறும். பெரும்பாலானோர் தங்கள் பிஸியான வாழ்க்கை காரணமாக துணையின் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் புறக்கணிக்கத் தொடங்குகிறார்கள். இவையே உறவில் இடைவெளியை ஏற்படுத்தலாம்.

எல்லைகளைப் பேணுவது

உறவில் எல்லைகளைப் பேணுவது இரு கூட்டாளிகளுக்கும் அவசியமாகும். உறவுகளுக்கு இடையில் ஏற்படும் ஆறுதல் நிலை, விருப்பு வெறுப்புகள், ஆசைகள் பற்றி வெளிப்படையாக விவாதிப்பது அவசியமாகும். இதன் மூலம் இருவரும் ஒருவருக்கொருவர் எல்லைகளை அறிந்திருப்பர். மேலும் சண்டைக்கான வாய்ப்புகளைக் குறையலாம். ஆனால், உறவின் எல்லைகளை பராமரிக்கவில்லை எனில், எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் போனால், உங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருக்கலாம்.

ஒருவருக்கொருவர் நேரம் கொடுக்காமல் இருப்பது

உங்கள் துணையிடம் பேச நேரம் கொடுக்க முடியாவிடில் அது உறவில் விரிசலை உண்டாக்கலாம். எனவே எவ்வளவு வேலையாக இருப்பினும், துணைக்காக நேரத்தை ஒதுக்கி முயற்சி செய்ய வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Being Single Benefits: நீங்க சிங்கிளாக இருக்கீங்களா? உங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் இதோ

துணையை ஆதரிக்காமல் இருப்பது

உறவுகளுக்கு இடையில் சமமான ஆதரவு இருப்பின், உறவு வலுவடையலாம். அதே நேரம், உறவில் ஆதரவு இல்லாததால் உறவு முறிய வாய்ப்புண்டு. எனவே ஒவ்வொரு முக்கியமான விஷயத்திலும் துணையை ஆதரிக்க முயற்சிக்க வேண்டும். அவர்களின் நம்பிக்கையைப் பேணுவதும் அவசியமாகும். எந்தவொரு பிரச்சனையிலும் அவர்களுக்கு ஆதரவளிக்க முயற்சிக்க வேண்டும்.

பொய் அல்லது ஏதாவதொரு விஷயத்தை மறைக்க

உறவைப் பேணுவதற்கான முக்கிய ஊடகம் நம்பிக்கை ஆகும். இதை உங்கள் துணையிடம் பொய் சொல்வதோ அல்லது விஷயங்களை மறைக்க முயன்றாலோ, அது அவர்களின் மீதான நம்பிக்கையைக் குறைக்கலாம். இது உறவில் விரிசலை ஏற்படுத்தி, உறவின் முடிவுக்கு வழிவகுக்கலாம்.

வெளிப்படையாக பேசாமல் இருப்பது

உறவுகளுக்கு இடையில் ஆசைகள் மற்றும் தேவைகளைக் குறித்து துணையிடம் வெளிப்படையாகப் பேசாமல் இருப்பது இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரிக்கத் தொடங்கலாம். எனவே உறவில் ஒரு போதும் இடைவெளி இருக்கக் கூடாது. எனவே பிரச்சனைகளைத் துணையிடம் வெளிப்படையாக பேச வேண்டும்.

இந்த உதவிக்குறிப்புகளின் மூலம் உறவை வலுவாக வைத்திருக்கவும், உறவுகளுக்கிடையே பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும் முடியும்.

இந்த பதிவும் உதவலாம்: Avoid Relationship Stress: உங்க பார்ட்னர் உடன் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி சரிசெய்வது?

Image Source: Freepik

Read Next

முதல் முறையா டேட்டிங் போறீங்களா?… இந்த 6 விஷயங்கள தெரிஞ்சிக்கோங்க!

Disclaimer

குறிச்சொற்கள்