வாழ்க்கையின் சுக துக்கங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு துணையோ, காதலனோ வேண்டும் என நினைக்காதவர்கள் கிடையாது. அர்த்தமுள்ள உறவுக்காக காத்திருக்கிறீர்களா? சரியான காதல் கிடைக்கவில்லையே என்ற கவலையா? உங்கள் டேட்டிங் சிறப்பாக அமைய நிபுணர்கள் கொடுத்துள்ள குறிப்புகளை பகிர்ந்துள்ளோம்…
நீங்கள் விரும்பும் அன்பைக் கண்டறியவும்:
அன்பை பகிர்ந்து கொள்ள ஒரு பார்ட்னரை தேடினால், தயங்காமல் டேட்டிங்கை திட்டமிடுங்கள். அதற்காக திட்டமிடவும், உண்மையான அன்பைக் கண்டறிய நேர்மையான அணுகுமுறையை பின்பற்றுங்கள்.
சுயமரியாதை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்தவும்:
உங்களுக்கு துணை இருந்தாலும் இல்லாவிட்டாலும், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எதை அதிகம் மதிக்கிறீர்களோ அதுவே உங்களுக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்தியை அளிக்கிறது.
ஒரு துணை இருப்பது வாழ்க்கையின் மற்றொரு கட்டம், மகிழ்ச்சியின் ஒரே ஆதாரம் அல்ல என்பதை உணருங்கள். உங்கள் நம்பிக்கை தான் உங்களை கவர்ச்சிகரமானவராக ஆக்குகிறது.
ரசனையை ஆராயுங்கள்:
நிஜ வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் நபர்கள் அல்லது டேட்டிங் ஆப்ஸ் மூலம் நீங்கள் சந்திக்கும் நபர்கள். உங்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான ரசனை இருந்தால், டேட்டிங் செல்லுங்கள்.
முன்முடிவு வேண்டாம், திறந்த மனதுடன் அணுகவும்:
ஒவ்வொரு நபரின் நேர்மறைகளையும் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள், அதே போல் அவர்களின் பலவீனங்களில் கவனம் செலுத்துங்கள். ஒருவருடன் பழகி அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்வதற்கு முன்னதாக, அவர்களைப் பற்றி எவ்வித முன்முடிவுகளையும் எடுக்காதீர்கள்.
ஆணோ, பெண்ணோ எல்லா விஷயத்திலும் அனைவரும் சரியானவர்கள் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு, திறந்த மனதுடன் பழகுங்கள்.
உங்கள் தரத்தை உயர்த்துங்கள்:
காதலைத் தேடும் போது பலருக்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கும். இது விரக்திக்கு வழிவகுக்கும். அதிக எதிர்பார்ப்புகளை விட்டுவிட்டு யதார்த்தமாக இருக்க வேண்டும். ஒருவரைப் பற்றி ஓவரான எதிர்பார்ப்புகளை வளர்த்துக்கொள்ளும் முன்பு, உங்களுடைய தரத்தையும், திறமைகளையும் மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
அதிகமாகச் சிந்திப்பதைத் தவிர்க்கவும்:
அதிகமாக யோசிக்க வேண்டாம். பாசிட்டீவான எண்ணத்துடன் டேட்டிங் செல்ல திட்டமிடுங்கள். நன்றாக செல்லக்கூடிய உறவுகள் கூட பிரேக்அப்பில் முடியலாம் என்பதால், நிராகரிப்புக்கான வாய்ப்புகள் உண்டு என்பதை ஏற்றுக்கொண்டு டேட்டிங் செல்ல திட்டமிடுங்கள்.
Image Source: Freepik