How To Prepare Your First Dating: நீங்கள் முதல் முறையாக டேட்டிங் செல்ல போகிறீர்கள் என்றால், உங்களுக்கு உற்சாகமும், பதற்றமும் சேர்ந்து இருக்கும். டேட்டிங் செல்வதற்கு முன் என்ன செய்ய வேண்டும்? எந்த உடை அணிய வேண்டும், என்ன பேச வேண்டும்? என்ன கேள்விகள் கேட்க்க வேண்டும்? எப்படி நடந்துக்கொள்ள வேண்டும்? என்ன பெர்ஃப்யூம் அடிக்க வேண்டும்? என்ற கேள்விகள் அடுக்கடுக்காய் உங்கள் மனதில் எழலாம். கவலை வேண்டாம். இதற்கான நல்ல சொல்யூஷனை நாங்கள் உங்களுக்கு சொல்கிறோம். நோட் பண்ணிக்கோங்க யூத்ஸ்.

ரிலாக்ஸ் ஆகவும்
நீங்கள் டேட்டிங் செல்வதற்கு முன், உங்கள் மனநிலையை மேம்படுத்த வேண்டும். நீங்கள் ரிலாக்ஸ் ஆக இருக்க உடற்பயிற்சி செய்தல், தியானம் செய்தல், உங்களுக்குப் பிடித்த இசையைக் கேட்டு மகிழ்தல் போன்றவற்றை செய்யலாம். நீங்கள் டேட்டிங் செல்ல தயாராகும் போது, உங்கள் நண்பர்களை பக்கத்தில் வைத்துக்கொள்ளவும். நண்பர்களோடு இருக்கும்போது கண்டிப்பாக நாம் அனைவரும் சந்தோஷமாக தான் இருப்போம். கவலை மறந்து, பதற்றம் இல்லாமல் இருக்க நண்பர் இருந்தால் போதும். மேலும் அவர்கள் உங்களுக்கு காஸ்ட்யூம்ஸ் செலக்ட் செய்ய உதவலாம். இதனுடன் சில ஐடியாவும் அவர்கள் கொடுப்பார்கள். இவ்வாறு செய்வதால் உங்கள் மனம் நிம்மதியாகவும், அமைதியாகவும் இருக்கும்.
நேரம் எடுத்து ரெடி ஆகவும்
முதல் முறையாக டேட்டிங் செல்லும் போது, அவசர அவசரமாக தயாராகாமல், பொருமையாக நேரம் எடுத்து, தயாராகவும். நீங்கள் இரவு 7 மணிக்கு டேட்டிங் செல்ல போகிறீர்கள் என்றால், மாலை 5:00 மணிக்கு பல் துலக்கி குளிக்கவும், 5:30 மணிக்கு முடியை உலர்த்துதல், 5:45 மணிக்கு ஒப்பனை செய்யுங்கள், 6:15 மணிக்கு ஸ்நாக்ஸ் சாப்பிடுங்கள், 6:45 மணிக்கு உங்களின் டேட்டிங் பார்ட்னருக்கு மெசேஜ் அனுப்பவும். இந்த விஷயங்களை செய்யும்போதே, உங்கள் பார்ட்னரிடம் கேட்க்க வேண்டிய கேள்விகளை தயார் செய்யவும்.
சரியான ஆடை
நீங்கள் டேட்டிங் செல்ல எந்த இடத்தை தேர்ந்தெடுத்திருக்கிறீர்கள் என்பதை பொருத்து, உங்களின் அலங்காரம் இருக்க வேண்டும். நீங்கள் கோவிலுக்கு செல்ல போகிறீர்கள் என்றால் ஃபார்மஸ் அணியவும். காபி ஹவுஸ் செல்ல போகிறீர்கள் என்றால் வெஸ்டர்ன் அணியவும். இடத்திற்கு ஏற்றவாறு உடை அணியவும்.
அதிகம் யோசிக்க வேண்டாம்
எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற பாசிடிவ் எண்ணத்துடன் டேட்டிங் செல்லவும். நீங்கள் யோசிப்பதே உங்களை பதற்றமாக மாற்றும். முன்கூட்டியே அனைத்தையும் திட்டமிட்டவும். பின் மன அமைதியுடன் டேட்டிங் செல்லவும். குறிப்பாக எதையும் எதிர்பார்க்காமல் செல்லவும். காதலில் எதிர்பார்ப்புகள் இருக்க கூடாது. இல்லையெனில் அது விரக்தியாக மாறும்.
Image Source: Freepik