$
Things To Know About Marriage After 30: 30 வயதில் ஒருவர், மனதளவில் முதிர்ச்சி அடைகிறார். இந்த நேரத்தில் வாழ்க்கையின் முக்கியதுவத்தை அறிந்து, தனக்கென ஒரு தனித்துவம் வேண்டும் என்று நினைப்பார்கள்.
30 வயதில் திருமணம் செய்பவர்களுக்கு, வாழ்க்கையில் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதற்கான புரிதல் இருக்கும். இந்த நேரத்தி தனக்கு என்ன தேவை என்பதை அறிந்து அதற்கேற்ப வாழ்வதற்கான திறன் இருக்கும்.

குறிப்பாக அவர்களிடம் தெளிவான சிந்தனை இருக்கும். இதனால் வாழ்க்கை துணையின் மனநிலையை புரிந்துக்கொண்டு, அவர்களுக்கு ஏற்றவாறு என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை தெரிந்துக்கொண்டு, அவர்களையும் நன்றாக பார்த்துக்கொள்ள முடியும்.
இதையும் படிங்க: 'Long Distance Relationship'-ல் வெற்றி பெற சூப்பர் டிப்ஸ்!
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் 30 வயதில் ஒருவர் மனப்பக்குவத்துடன் இருப்பர். அவர்களிடம் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வு குறித்த புரிதல் அதிகமாக இருக்கும்.

30 வயதுக்கு மேல் மனத்தெளிவு ஏற்படும். இதில் அன்றாட நிலை, எதிகால திட்டம் போன்றவற்றை புரிந்துக்கொண்டு, தன்னுடைய தொழில் மற்றும் குடும்பம் இரண்டையும் ஒரே நேரத்தில் கையாளும் திறன் இருக்கும்.
இதில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால், 30 வயதுக்கு மேல் கருத்தரித்தலில் சிரமம் ஏற்படும். இதில் சுகப்பிரசவம் வாய்ப்புகள் கம்மி. சிசேரியன் செய்வது போல் இருக்கும்.
Image Source: Freepik