அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். அவர் தனது அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் சிகிச்சை பெற்று வருகிறார். வெள்ளை மாளிகை இதை அறிவித்துள்ளது. 79 வயதான டிரம்பின் உடல்நிலை குறித்த புதுப்பிப்பை வெளியிட்டுள்ளது. இதன் விளைவாக, சில அதிகாரப்பூர்வ நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது.
டொனால்ட் டிரம்பிற்கு என்ன ஆச்சு?
வல்லரசு அமெரிக்காவின் ஜனாதிபதிக்கு என்ன நடந்தது? டொனால்ட் டிரம்ப் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறாரா? அவர் நாள்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்பதே இன்று இணையம் முழுவதும் பரபரப்பான செய்தியாக உள்ளது.
வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி, சமீப காலமாக அவருக்கு கீழ் கால்கள் மற்றும் கணுக்கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக மருத்துவர்கள் பல பரிசோதனைகளை மேற்கொண்டுள்ளனர். அவரது காலில் வீக்கம் ஏற்பட்டதால் டாக்டர்கள் குழு பரிசோதித்துள்ளது. அதிபர் ட்ரம்பிற்கு “க்ரானிக் வீனஸ் இன்சபிசியன்சி” (நாள்பட்ட சிரை பற்றாக்குறை ) என்ற நாள்பட்ட நரம்பு நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கால்களில் இருந்து இதயத்துக்கு இரத்தம் சரியாக செல்லாதால் இந்த பிரச்சினை ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
க்ரானிக் வீனஸ் இன்சபிசியன்சி என்றால் என்ன? (CVI)
கால்களில் உள்ள நரம்புகளில் உள்ள வால்வுகள் பலவீனமடையும் போது அல்லது சேதமடைந்தால், இரத்தம் முழுவதுமாக பாய்வதற்குப் பதிலாக கால்களில் உள்ள நரம்புகளில் தேங்கி நிற்கும். இரத்தத்தை மேல்நோக்கிப் பாய்ச்ச வைக்கும் நரம்புகளுக்குள் இருக்கும் சிறிய வால்வுகள் சேதமடைந்து, பின்னோக்கி ஓட்டத்தை அனுமதிக்கின்றன. இது வெனஸ் ரிஃப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது.
யாருக்கு எல்லாம் இந்த நோய் வர வாய்ப்புள்ளது?
நீண்ட நேரம் உட்கார்ந்து அல்லது நின்று கொண்டிருக்கும் வயதானவர்கள், பருமனானவர்கள் அல்லது நரம்பு நோயின் குடும்ப வரலாற்றைக் கொண்டவர்களுக்கு இது மிகவும் பொதுவானது.
உலகில் 20 பேரில் ஒருவரை இந்த நோய் தாக்குமாம். அடிக்கடி கை குலுக்குவதால் ஏற்பட்ட திசுக்கள் சேதம் மற்றும் இதய நோய் தடுப்புக்கான ஆஸ்பிரின் மருந்தின் அதிக பயன்பாடு இதற்கு காரணமாக உள்ளது.
மற்றபடி தமனி நோய், இதய செயலிழப்பு அல்லது சிறுநீரக பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் எதுவும் இல்லை. இந்த நோய் கண்டறியப்பட்டாலும் ட்ரம்புக்கு எந்தவித வலியும் அசௌகரியமும் இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இது போன்ற நோய் வருவது இயல்பானது என்று வெள்ளை மாளிகை மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அறிகுறிகள் என்னென்ன?
- கால்களில் வலி அல்லது உணர்வின்மை
- நீண்ட நேரம் நின்ற பிறகு கனத்தன்மை அல்லது சோர்வு
- கணுக்கால்களைச் சுற்றி வீக்கம்
- அரிப்பு அல்லது கூச்ச உணர்வுகள்
- தோல் நிறமாற்றம் அல்லது வீங்கி பருத்து வலிக்கிற நரம்புகளின் தோற்றம்
- ஆரம்ப கட்டங்களில் சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கணுக்கால் அல்லது கீழ் கால்களுக்கு அருகில் தோல் புண்களையும் ஏற்படுத்தும்.
சிகிச்சை:
- இந்தப் பிரச்சனையை உடற்பயிற்சி மூலம் கட்டுப்படுத்தலாம்.
- சில நேரங்களில் அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது
- தொடர்ந்து நடைபயிற்சி
- எடையைக் கட்டுக்குள் வைத்திருத்தல்