What is nipah virus and how does it spread: கடந்த சில ஆண்டுகளாகவே, வைரஸ் தாக்குதலின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா பரவலில் தொடங்கி, இன்று வரை ஏராளமான வைரஸின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் கேரளாவில் நிபா வைரஸ், H1N1 வைரஸ் என பல்வறு வைரஸ் தொற்றுக்களின் அதிகரித்து காணப்படுகிறது. இந்த வைரஸ் தாக்குதல் குறித்து, கேரளா அரசும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் அளித்த சமீபத்திய தகவலின்படி, கேரள மாநிலம் முழுவதும் மொத்தம் 675 பேர் நிபா வைரஸ் பட்டியலில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்களில் 178 பேர் பாலக்காடு மாவட்டத்தில் பதிவான இரண்டாவது நிபா வழக்குடன் தொடர்புடையவர்களாகக் கூறப்படுகிறது. மாநில சுகாதாரத் துறையின் கூற்றுப்படி, தற்போதைய தொடர்புகளின் பரவல் பாலக்காட்டில் 347, மலப்புரம் மாவட்டத்தில் 210, கோழிக்கோட்டில் 115, எர்ணாகுளத்தில் இரண்டு, திருச்சூரில் ஒன்று என்ற எண்ணிக்கையில் பரவுவதாகக் கூறப்படுகிறது.
இந்த பதிவும் உதவலாம்: Nipah Virus: நிபா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு குறித்த விவரங்கள்!
இதனைத் தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் கேரளாவில் பாலக்காட்டின் மன்னார்க்காடு பகுதியில் இரண்டாவது நிபா வைரஸ் மரணம் பதிவாயுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் கடுமையான சுவாசக் கோளாறு காரணமாக 50 வயது நபர் ஒருவர் மரணமடைந்தார். ஆரம்ப சோதனைகளில் நிபா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த ஆண்டு மலப்புரத்தில் ஏற்பட்ட முந்தைய மரணத்தைத் தொடர்ந்து, பிற வழக்குகளும் பதிவாகியுள்ளது.
இதுவரை மலப்புரத்தில் ஒருவர் ஐ.சி.யூவில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மாவட்டத்தில் 82 மாதிரிகள் சோதனையில் நோய் இல்லை என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. மேலும், தனித்தனியாக பாலக்காட்டில் 12 நபர்கள் தனிமைப்படுத்தலில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், இதில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல், 2024 ஆம் ஆண்டில், நிபா வைரஸ் தொற்று காரணமாக ஏற்பட்ட சிக்கல்களால் ஒருவர் மரணமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது மாநிலத்தில் மொத்தம் 38 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் கண்காணிப்பில் உள்ளதாகவும், மேலும் இதில் 139 பேர் அதிக ஆபத்துள்ள பிரிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. நிபா வைரஸ் தொற்று காரணமாக, ஒருவர் மரணமடைந்ததைத் தொடர்ந்து கேரளாவின் பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் மற்றும் வயநாடு ஆகிய ஆறு மாவட்டங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் தொடர்பு தடமறிதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்த பதிவும் உதவலாம்: Nipah Virus: கேரள மாநிலத்தை உளுக்கும் நிபா வைரஸ்.! காரணம், அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறை இங்கே..
மாஸ்க் அணிவது கட்டாயம்?
இதற்கிடையில், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மன்னார்க்காடு பகுதியில் மூன்று நிபா தொற்றுகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து முகமூடிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அருகில் இருப்பவர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும், நோயாளிகள், ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் மாஸ்க் அணிவதை உறுதி செய்யவும் அறிவுறுத்தப்படுகிறது. கூடுதலாக, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிபா வைரஸ் போன்ற அறிகுறிகள் அல்லது மூளைக்காய்ச்சலுடன் கூடிய காய்ச்சல் ஏற்பட்டால் தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல், கட்டுப்பாட்டு மண்டலங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் ஏற்பாடு செய்யப்படும் என்றும், பிற இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் கட்டுப்பாட்டு மண்டலங்களைச் சேர்ந்த மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
இது தவிர, நிபா வைரஸின் அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: மக்களே! நிபா வைரஸ் எச்சரிக்கை… கேரள அரசு வெளியிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
Image Source: Freepik