Diabetes Diet: 'நாவடக்கம் முக்கியம்' சர்க்கரை நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது!

  • SHARE
  • FOLLOW
Diabetes Diet: 'நாவடக்கம் முக்கியம்' சர்க்கரை நோய் உள்ளவர்கள் எதை சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது!

சர்க்கரை நோய் விளைவுகள்

சர்க்கரை நோய்தான் பல பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. சர்க்கரை நோயை கட்டுப்படுத்த மிக முக்கியம் நாவடக்கம் தான். நாவை சரியாக அடக்கினால் போதும் எந்த ஒரு வியாதியும் சரியாகும். குறிப்பாக சர்க்கரையை குறைப்பது உணவு உட்கொள்ளலைப் பொறுத்தது. சர்க்கரை நோய் சிறுநீரகம், கண்கள், இதய ஆரோக்கியத்தை பாதிக்கிறது. உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நீண்ட காலத்திற்கு ஆரோக்கியமாக இருக்க உதவும்.

இதையும் படிங்க: டைப்-2 நீரிழிவு மூளையின் கட்டமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

அதிக சர்க்கரை அளவு உள்ளவர்களுக்கு தண்ணீர் நல்லது. உங்கள் அன்றாட உணவில் தண்ணீர் மிகவும் முக்கியமானது. தினமும் 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதனுடன் ஊறவைத்த வெந்தயம் மற்றும் வெந்தய விதைகளுடன் நாளைத் தொடங்குவது நல்லது. வால்நட் மற்றும் பாதாம் பருப்பும் காலையில் சாப்பிடுவது நல்லது. 7 நாட்கள் உணவுத் திட்டத்தில் நல்ல பலனைக் காண கிரீன் டீயை எடுத்துக் கொள்வது சிறப்பு.

சர்க்கரை நோய் டயட்

காலை உணவு

காலையில் பாதாம், அக்ரூட் பருப்புகளுடன் ஓட்ஸ் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலை அதனுடன் பயன்படுத்துவது மிகவும் நல்லது. ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம். இது சர்க்கரையை வெளியேற்ற உதவுகிறது.

அதேபோல் முட்டை பொறியல், கோதுமை ரொட்டி, போஹா, 2 முட்டை வெள்ளைக் கரு, ஆரஞ்சு கொய்யா பழம் எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவு

மதிய வேளையில் 1 ரொட்டி, ஒரு கப் சிக்கன் அல்லது பனீர் மற்றும் ஒரு கிண்ணம் தயிர் எடுத்துக் கொள்ளலாம்.

1 சாப்பாத்தி மீன் பொரியல், பிரவுன் ரைஸ், சிக்கன், பனீர், கீரை, முட்டைக் கறி சாதம், மீன் பொறியல் சாதம், காய்கறி சாலட் உள்ளிட்டவைகளை சாப்பிடலாம்.

இடையில் ஸ்நாக்ஸ் தேவைப்படும் பட்சத்தில் ஆப்பிள், பெர்ரி, செர்ரிகள், வாழைப்பழ சிப்ஸ், கட்லெட், சோளம், வெந்தயம் மசாலா சாட், காய்கறி சூப், கோழி கொத்தமல்லி சூப் உள்ளிட்டவைகளை எடுத்துக் கொள்ளலாம்.

இரவு உணவு

1 அல்லது 2 ரொட்டிகளுடன் ஒரு கப் பருப்பு, காலிஃபிளவர், காளான்கள், ப்ரோக்கோலி மற்றும் ஒரு கப் வரை உங்களுக்கு விருப்பமான காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்.

பாஸ்தா, பச்சை காய்கறி தோசை, வேகவைத்த காய்கறிகள், காளான் சப்பாத்தி, வெஜிடபிள் புலாவ் உள்ளிட்டவைகளை சாப்பிடலாம்.

சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

முழு பாலில் அதிக கொழுப்பு உள்ளது. இது உடலில் கொலஸ்ட்ராலை மேலும் அதிகரிக்கிறது. எனவே சர்க்கரை உள்ளவர்கள் முழு பாலுடன் பாலகோவா, மைசூர்பாக் போன்ற பால் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நாம் சாப்பிடும் பிரதான உணவாக இருப்பதாக வெள்ளை அரிசி சாப்பாடு. இதில் கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன. சர்க்கரை நோய் உள்ளவர்கள் வெள்ளை அரிசிக்கு பதிலாக பிரவுன் ரைஸ் சாப்பிட வேண்டும்.

உருளைக் கிழங்கு சாப்பிடக் கூடாது. உருளைக்கிழங்கில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் தன்மை உள்ளது. எனவே இதை தவிர்க்க வேண்டும்.

அதிக அளவு பழச்சாறுகளை உட்கொள்பவர்களில் சராசரியாக 18 சதவீதம் பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது. எனவே சர்க்கரை உள்ளவர்கள் பழச்சாறுகளைத் தவிர்க்க வேண்டும்.

திராட்சையில் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை சர்க்கரை அளவையும் அதிகரிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள் இனிப்பு மற்றும் ஆற்றல் பானங்களை தவிர்க்க வேண்டும். இனிப்பு பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். பலர் சர்க்கரை இனிப்புகளை சாப்பிடுகிறாகள் இது உடலுக்கு சுத்தமாக நல்லதல்ல. எனவே பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதேபோல் ஆட்டு இறைச்சியை எவ்வளவு குறைக்கிறீர்களோ அவ்வளவு நல்லது. சிக்கன், மீன் உள்ளிட்டவையை சாப்பிடலாம்.

இதையும் படிங்க: இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க : CDC கூறும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும்

இந்த பதிவில் உள்ள தகவல்கள் சர்க்கரை அளவை குறைக்க பெரிதளவு உதவும் என்றாலும் தாக்கத்தின் தீவிரத்தை உணர்ந்து உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Fruits for diabetics: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன?

Disclaimer

குறிச்சொற்கள்