ஷிலாஜித் என்பது ஒரு கருப்பு-பழுப்பு நிற பிசின் ஆகும், இது பெரும்பாலும் இமயமலைத் தொடர்களில் காணப்படுகிறது. இது ஒரு பிரபலமான ஆயுர்வேத மூலிகையாகும். இது பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளன. மேலும் இதில் பல ஆரோகிய நன்மைகளை கொண்டுள்ளன. குறிப்பாக பெண்களுக்கு சிறந்த நன்மைகளை அளிக்கிறது. ஷிலாஜித் பெண்களுக்கு ஏராளமான நன்மைகளைக் கொண்டுள்ளது. இது இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு மற்றும் இரும்பு சப்ளையை அதிகரிக்க உதவுகிறது. மேலும், இது மாதவிடாய் சுழற்சியை சீராக்கவும், ஹார்மோன் அளவை மீட்டெடுக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
ஷிலாஜித்தில் ஃபுல்விக் அமிலம் உள்ளது. இந்த அமிலம் ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது மைட்டோகாண்ட்ரியல் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது. பெண்களுக்கு இதனால் என்ன பயன் என்பதை இங்கே காண்போம்.
எடை இழப்புக்கு உதவுகிறது
ஆயுர்வேத மூலிகையான ஷிலாஜித், எடை இழப்புக்கு சிறந்து திகழ்கிறது. இது உங்களை எப்போதும் முழுமையாக வைத்திருக்க உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டவும், தொடைகள், கைகள் மற்றும் அடிவயிறு போன்ற சிக்கலான பகுதிகளில் செல்லுலைட் வைப்புகளைக் குறைக்கவும் உதவுகிறது.
கல்லீரல் நோய்களை தடுக்கிறது
ஷிலாஜித், கல்லீரல் நோய்களை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளது. பெருங்குடல், செரிமான பாதை போன்றவற்றை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
ஷிலாஜித் நோய் எதிர்ப்பு சக்தியை ஆதரிக்கும் பல ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. வலுவான நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிக்க மனித உடலுக்கு தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை இது தருகிறது. இதில் இரும்பு, கால்சியம், மெக்னீசியம், ஹ்யூமிக் அமிலம், ஃபுல்விக் அமிலம் மற்றும் வைட்டமின்கள் ஏ, பி-12 மற்றும் சி உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
இதையும் படிங்க: Hormonal Balance: என்றென்றும் இளமையாக இருக்க பெண்கள் சாப்பிட வேண்டிய பழங்கள்!
மன அழுத்தத்தை நிர்வகிக்கிறது
உங்கள் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் மன அழுத்தத்தை சந்திக்கிறீர். இதற்கு ஷிலாஜித் ஒரு சக்திவாய்ந்த சப்ளிமெண்ட்டாக திகழ்கிறது. இது பதற்றம் மற்றும் மன அழுத்தத்தைப் போக்க உதவுகிறது.
மாதவிடாய் சுழற்சியை ஒழுங்குபடுத்துகிறது
பல இளம் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் பற்றி புகார் கூறுகின்றனர். ஒழுங்கற்ற மாதவிடாய்களை ஏற்படுத்தும் பெரும்பாலான காரணிகளில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் எடை மாற்றங்கள் ஆகியவை அடங்கும். இந்த காரணிகள் மாதவிடாய் சுழற்சியை சீர்குலைக்கும் ஹார்மோன் சமநிலையின்மையை ஏற்படுத்தும். ஷிலாஜிட்டில் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. அவை இயற்கையாகவே பெண்களின் இனப்பெருக்க ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகின்றன. இந்த ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதன் மூலம், ஒரு வழக்கமான மாதவிடாய் சுழற்சியை ஆதரிக்கிறது.
முடியின் தரத்தை அதிகரிக்கிறது
முடியின் தரத்தை மேம்படுத்த ஷிலாஜித் உதவும். இதில் ஃபுல்விக் அமிலம், துத்தநாகம், மெக்னீசியம் மற்றும் கந்தகம் உள்ளது. அவை மென்மையான முடியை அதிகரிக்கும். ஷிலாஜிட்டைப் பயன்படுத்துவது உங்கள் முடியின் தரத்தையும் அழகையும் அதிகரிக்க உதவும்.
உங்களுக்கு அனீமியா, ஹீமோக்ரோமாடோசிஸ் அல்லது தலசீமியா இருந்தால் ஷிலாஜித் எடுப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் ஷிலாஜித் (Shilajit) எடுத்துக்கொள்ள வேண்டும் என்றால், முதலில் உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவும்.
Image Source: Freepik