சிஓபிடி(COPD) என்பது நாள்பட்ட நுரையீரல் அழற்சி ஆகும். நுரையீரலில் ஏற்படும் இந்த அழற்சியால் ஒரு நபர் சுவாசிக்க கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். எனவே நுரையீரல் அழற்சியை நிர்வகிக்க வேண்டியது மிகவும் அவசியம். இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்…
சிஓபிடி எம்பிஸிமா மற்றும் நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம், இருமல், அதிகப்படியான சளி மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை சிஓபிடியின் பொதுவான அறிகுறிகளாகும்.
சிஓபிடி-க்கான காரணங்கள் என்ன?
பெரும்பாலான நேரங்களில் இந்த நோய் நீண்ட காலமாக புகைப்பிடிக்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு ஏற்படக்கூடியதாகும்.
சமீபத்திய ஆய்வுகள் உலகளவில் பாதியளவு சிஓபிடி பாதிப்புகள், காற்று மாசுபாடு, புகை அல்லது வாயுக்களின் தொழில்சார் வெளிப்பாடு மற்றும் புகையை உள்ளிழுத்தல் போன்ற புகைப்பிடிப்போர் அல்லாதோருக்கும் பாதிப்பு ஏற்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
புகைபிடிக்காதவர்களுக்கான ஆபத்து காரணிகள் என்னென்ன?
1.செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்:
புகைப்பிடிப்பவர்களுக்கு அருகே இருப்பதால் அவர்கள் வெளியே விடும் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கு சிஓபிடி ஏற்பட வாய்ப்புள்ளது.
2.ரசாயனம் மற்றும் புகை வெளிப்பாடு:
தூசி, வாயு மற்றும் புகை சார்ந்த தொழிலில் ஈடுபடுவோருக்கு சிஓபிடியை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதன் தொடர்ச்சியான வெளிப்பாடு காலப்போக்கில் நுரையீரலை படிப்படியாக சேதப்படுத்தும்.
3.நீண்ட கால காற்று மாசுப்பாட்டின் வெளிப்பாடு:
நமது சுவாசக்குழாய் சுற்றுப்புறத்தில் உள்ள காற்று மாசுபாடுகளால் அதிக அளவில் பாதிக்கிறது. குறிப்பாக மாசான காற்றை சுவாசிப்பது ஆஸ்துமா போன்ற சுவாசப்பிரச்சனை கொண்டவர்களை மேலும் பலவீனமாக்கும். மேலும் சிஓபிடி உள்ளிட்ட சுவாச நோய்கள் ஏற்படவும் வழிவகுக்கிறது.
4.உட்புற காற்று மாசுபாடு:
வீடுகளில் மோசமான காற்றோட்டம், கொசுவர்த்தி சுருள் மற்றும் தூபக்குச்சிகளை எரிப்பதால் வெளியாகும் புகை உள்ளிட்ட காற்று மாசுபாடும் சிஓபிடி மாசுபாடுக்கு காரணமாகிறது. ஒரு மூடிய அறையில் ஒரு கொசுவர்த்திச் சுருளை எரிப்பது 100 சிகரெட்டுகளுக்கு ஒப்பான மாசு அளவை உருவாக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
5.மரபியல் காரணிகள்:
ஆல்பா-1-ஆன்டிட்ரிப்சின் போன்ற மரபணு குறைபாடுகள் உள்ள சந்ததியினருக்கு சிஓபிடி நோய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. இது புகைப்பிடிக்காதவர்களுக்கும் ஏற்படக்கூடும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உங்கள் நுரையீரல் ஆரோக்கியத்தை சிறப்பாகக் கவனித்துக்கொள்ள சில தேவையான முன்னெச்சரிக்கைகள் உள்ளன. தடுப்பு நடவடிக்கைகளில் பின்வருவன அடங்கும்:
- புகைபிடிக்காதவர்கள் புகை புகையிலிருந்து விலகி இருக்க முயற்சிக்க வேண்டும்.
- அதிக மாசுக்கள் மற்றும் தூசிகள், நச்சுப் புகைகள், தொழிற்சாலை புகைகள், ரசாயன கழிவுகள் வெளியேறும் இடங்களில் இருந்து விலகி இருங்கள்.
- கட்டுமானத் தொழிலாளியைப் போல தொழில் ரீதியாக புகை அல்லது தூசி வெளிப்படும் பகுதிகளில் வேலை செய்வோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
- பெரும் கூட்டங்களைத் தவிர்ப்பதன் மூலம் தொற்று நோய்களில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். குறிப்பாக குளிர்காலம் மற்றும் நோய்த்தொற்றுகளுக்கு எதிராக ஆண்டுதோறும் காய்ச்சல் தடுப்பூசி போட்டுக்கொள்வதும் நல்லது.
Image Source: Freepik