Doctor Verified

COPD: மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்! புகைப்பிடிக்காதவர்களுக்கும் COPD வருமாம்!

  • SHARE
  • FOLLOW
COPD: மறைக்கப்பட்ட அச்சுறுத்தல்! புகைப்பிடிக்காதவர்களுக்கும் COPD வருமாம்!


ஆம், புகைபிடிக்காதவர்களையும் COPD தாக்கும். இந்தியாவை பொருத்தவரை இது ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையாகும். சுமார் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்த நிலையால் பாதிக்கப்படுகின்றனர். ஆகையால் புகைப்பிடிக்காதவர்களிடையே கூட COPD-யின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமும், தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதன் மூலமும் COPD தாக்கத்தை குறைக்க முடியும். 

COPD என்றால் என்ன? (What is COPD)

COPD என்பது நாள்பட்ட நுரையீரல் அழற்சி ஆகும். இது நுரையீரலின் காற்றோட்டத்தைத் தடுக்கிறது.  இது நுரையீரலின் அல்வியோலி அல்லது காற்றுப் பைகளில் ஏற்படும் காயத்தால் ஏற்படுகிறது. சிகரெட் புகை, காற்று மாசுபாடு மற்றும் பணியிடத்தில் இருந்து வரும் தூசி மற்றும் புகை உள்ளிட்ட எரிச்சலூட்டும் பொருட்களின் வெளிபாடே COPD-க்கு முதல் காரணமாக திகழ்கிறது. அதுவும் இன்றைய மாசு சூழ்ந்த காலகட்டத்தில் COPD மோசமடைந்து வருகிறது. COPD-ஐ முழுமையாக தீர்க்க சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், நோய் மோசமடைவதைத் தடுக்கவும் உதவும் சிகிச்சைகள் உள்ளன.

புகைப்பிடிக்காதவர்களுக்கு COPD ஏற்படுவதன் காரணம் (Causes Of COPD in Nonsmokers): 

புகைப்பிடிப்பவர்களுக்கு COPD ஏற்படும் என்பதை விட, இப்போ புகைப்பிடிக்காதவர்களையும் இது தாக்குகிறது. புகைப்பிடிக்காதவர்களுக்கு COPD ஏற்பட, மேலும் சில காரணங்கள் உள்ளன. 

* புகையின் வெளிபாடு

* காற்று மாசுபாடு

* தூசியின் வெளிபாடு

* ஆஸ்துமா

* சுவாச தொற்று

* ஆல்பா-1 ஆன்டிட்ரிப்சின் குறைபாடு

சில வேலைகள் COPD-ஐ உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும். உதாரணமாக, தூசி மற்றும் புகையின் வெளிப்பாடு சுரங்கத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு COPD-இன் ஆபத்தை அதிகரிக்கிறது. இந்தியாவை பொருத்தவரை மற்றொரு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணி உட்புற காற்று மாசுபாடு ஆகும். தூசிப் பூச்சிகள், புகைபிடித்தல் மற்றும் அடுப்புகளில் இருந்து வரும் புகை ஆகியவை உட்புற காற்றை மாசுபடுத்துகின்றன.

இதையும் படிங்க: நுரையீரலை பாதிக்கும் COPD! இதன் தாக்கம் என்ன?

COPD-ஐ எப்படி தடுப்பது? (COPD Prevention)

COPD-ஐ ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், இதனை கட்டுப்படுத்த முடியும். இருமல், மூச்சுத்திணறல், நெஞ்சு இறுக்கம் போன்ற அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை நீங்கள் சந்தித்தால், நோயறிதலுக்கு மருத்துவரை அணுகவும். 

COPD-ஐ கட்டுப்படுத்த சில வாழ்க்கை முறை மாற்றங்களை செய்யுங்கள். இதற்காக நீங்கள் செய்ய வேண்டியவை பின்வருமாறு, 

* COPD-யின் ஆபத்தை குறைக்க நீங்கள் செய்யக்கூடிய மிக முக்கியமான விஷயம் புகைபிடிப்பதை நிறுத்துவதாகும்.

* மற்றவர்களுக்கு அருகில் புகைபிடிக்காதீர்கள்

* காற்று மாசு அதிகமாக இருக்கும் போது முடிந்தவரை குறைந்த நேரத்தை வெளியில் செலவிடுங்கள்.

* தூசி அல்லது புகையின் முன்னிலையில், முகமூடியை அணியுங்கள்.

* இன்ஃப்ளூயன்ஸா மற்றும் நிமோனியாவுக்கு எதிராக தடுப்பூசி போடுங்கள்.

COPD-க்கான சிகிச்சை (COPD Treatment)

COPD-க்கு சிகிச்சை இல்லை என்றாலும், அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும், நோய் மோசமடைவதைத் தடுக்கவும் உதவும் சிகிச்சைகள் உள்ளன. பொதுவான சிகிச்சைகள் பின்வருமாறு,

Bronchodilators: இந்த மருந்துகள் நுரையீரலில் உள்ள தசைகளை தளர்த்தி, சுவாசப்பாதைகளை விரிவுபடுத்துவதன் மூலம் சுவாசத்தை எளிதாக்குகிறது.

Inhaled corticosteroids: இந்த மருந்துகள் சுவாசக்குழாய் அழற்சியைக் குறைக்கின்றன.

Oxygen therapy: இந்த சிகிச்சையானது கடுமையான COPD நோயாளிகளுக்கு கூடுதல் ஆக்ஸிஜனை வழங்குகிறது.

Pulmonary rehabilitation: COPD-யால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டத்தின் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ளலாம்.

COPD-க்கான விழிப்புணர்வு (COPD Awareness)

COPD மக்களை எவ்வாறு தனித்தனியாகவும் குடும்பங்களிலும் பாதிக்கிறது என்பது குறித்து விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். நோயைப் பற்றி நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருக்குக் தெரியபடுத்த வேண்டும். 

Image Source: Freepik

Read Next

Influenza Flu Preventions: மக்களே உஷார்.! பயமுறுத்தும் இன்புளூயன்சா ப்ளூ.!

Disclaimer

குறிச்சொற்கள்