Stroke Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய பக்கவாதத்திற்கு எச்சரிக்கை அறிகுறிகள்

  • SHARE
  • FOLLOW
Stroke Symptoms: நீங்கள் கவனிக்க வேண்டிய பக்கவாதத்திற்கு எச்சரிக்கை அறிகுறிகள்


Warning Signs Of Stroke: பக்கவாதம் என்று வார்த்தையை கேட்டாலே பயத்தையும், பீதியையும் ஏற்படுத்துவதாக அமைகிறது. அதாவது மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் தடைபடும் அல்லது கட்டுப்படுத்தப்படும் போது பக்கவாதம் ஏற்படுகிறது. இது உடனடியாக அந்தப் பகுதிக்கு சேதத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது சிகிச்சையளிக்கப்படாவிட்டால் மீள முடியாத சேதத்தை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, அடுத்த சில நாள்கள் அல்லது வாரங்களில் இரண்டாவது பக்கவாதம் ஏற்படும் அபாயம் அதிகமாகும். எனவே, பக்கவாதத்தின் சாத்தியமான ஆபத்து காரணிகளைப் பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும்.

மூளை பக்கவாதத்திற்கான எச்சரிக்கை அறிகுறிகள்

பக்கவாதம் ஏற்பட்டிருப்பின், கீழே கொடுக்கப்பட்ட சில அறிகுறிகள் தென்படலாம்.

கேட்கும் திறன் இழப்பு மற்றும் மந்தமான பேச்சு

பக்கவாதத்தின் பொதுவான விளைவுகளில் ஒன்று காது கேளாமை பிரச்சனை ஏற்படுவதாகும். இதில் ஒருவருக்கு காது கேளாமை பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஏனெனில், இது பக்கவாதத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Lower Blood Pressure: இயற்கையாகவே இரத்த அழுத்தத்தைக் குறைப்பது எப்படி?

மேலும், ஒருவருக்கு திடீரென பேச்சு மந்தமாக இருந்தால், அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டிருக்கலாம். ஏனெனில் பக்கவாதம், பேச்சுக்கு பொறுப்பான மூளையின் பகுதிகளுக்கு சேதத்தை ஏற்படுத்தலாம். இதில் அவர்கள் பேசுவதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். மேலும் அவர்கள் மொழியைப் பற்றிய குறைந்த அல்லது பலவீனமான புரிதலைக் கொண்டிருப்பர். இது குழப்பத்தை ஏற்படுத்தலாம்.

தசை பலவீனம், தோய்ந்த முகம் மற்றும் பக்கவாதம்

ஒருவர் திடீரென கை அல்லது காலில் தசை பலவீனம், தொய்வு அல்லது பக்கவாதம் ஏற்பட்டால், இது பக்கவாதம் இருப்பதற்கான அறிகுறியாகும். பக்கவாதத்தால் மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்தஓட்டத்தின் பாதையில் அடைப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் தசை பலவீனமடையலாம்.

பொதுவான இது முகத்தில் காணப்படுவதுடன், தோய்ந்த முகத்தையும், கை மற்றும் கால்களில் பலவீனம் அல்லது பக்கவாதத்தையும் ஏற்படுத்தலாம். இது போன்ற பக்கவாதத்திற்கான அறிகுறிகள் தெளிவாக இருப்பின், அவர்களை விரைவில் மருத்துவ மையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Liver Cirrhosis Symptoms: இந்த அறிகுறிகள் எல்லாம் கல்லீரல் சிரோசிஸ் ஏற்பட காரணமாம்..

மயக்கம் ஏற்படுவது

ஒருவர் திடீரென மயக்கம் அல்லது தலைச்சுற்றல் போன்ற கடுமையான உணர்வைச் சந்தித்தால், அவர்களுக்கு பக்கவாதம் ஏற்படலாம். பக்கவாதம் ஏற்படும் போது மூளைக்கு ஆக்ஸிஜன் பட்டினி இருப்பதால் இது பொதுவானதாகும். எனவே, உடல் உயிருடன் இருக்க மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செயல்படுகிறது. இது தலைச்சுற்றலை ஏற்படுத்தி, விரைவில் மயக்கமாக மாறும். இது போன்று ஒருவருக்கு மயக்கம் ஏற்படுமாயின், உடனடியான மருத்துவ மையத்திற்கு அழைத்துச் செல்வது முக்கியமாகும்.

கூச்ச உணர்வு மற்றும் உணர்வின்மை

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் கை, கால் அல்லது முகத்தில் திடீரென உணர்வின்மை அல்லது கூச்ச உணர்வு ஏற்படலாம். இதில் பக்கவாதம் ஏற்படுவதால் கை, கால் போன்ற உடலின் சில பகுதிகளில் இரத்த நாளங்கள் பிடிப்பு மற்றும் சிதைவை ஏற்படுத்தலாம். இந்த பிடிப்பு ஏற்படும் பகுதிகளில் இரத்த ஓட்டம் தடைபட்டு, கூச்ச உணர்வு, உணர்வின்மையை உணரலாம்.

இது போன்ற உணர்வை திடீரென ஒருவர் அனுபவித்தால், அது மிகவும் கடுமையானதாகி விட்டால் அல்லது அவர்கள் நடக்கும் அல்லது நகரும் திறன் பாதிக்கிறது எனில், அவர்களுக்கு பக்கவாதம் ஏற்பட்டதற்கான தெளிவான அறிகுறியாக உள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: Liver Healthy Tips: கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்களுக்கான டிப்ஸ்!

Image Source: Freepik

Read Next

Habits for Healthy Lungs: நுரையீரல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த 5 பழக்கங்களை பின்பற்றுங்கள்!

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்